உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக அரசுக்கு தண்டனை வழங்கணும்

தமிழக அரசுக்கு தண்டனை வழங்கணும்

வெற்றிவேல் வீரவேல் என்ற கொண்டாட்டத்தின் அடையாளமாக திருப்பரங்குன்றம் தீபத் துாணில் தீபம் ஏற்றும் தீர்ப்பு கிடைத்துள்ளது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உயர் நீதிமன்ற தனிநீதிபதி உத்தரவு உள்ளது என்று வி.சி., தலைவர் திருமாவளவன் கூறியிருக்கிறார். சிறுபான்மையினர் ஓட்டுகளை வாங்க வேண்டும் என்பதற்காக தேவையில்லாத குற்றச்சாட்டுகளை முதல்வர் ஸ்டாலின், திருமாவளவன், வெங்கடேசன் எம்.பி., ஆகியோர் முன்வைத்துள்ளனர். இதனால், நீதிமன்றத்தையே அவமதித்துள்ளனர். நீதிபதியின் செயல்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல் பட்டால், என்ன தண்டனை வழங்க முடியுமோ, அதை தமிழக அரசுக்கு வழங்க வேண்டும். -நயினார் நாகேந்திரன், தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ