உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரேஷன் கடைக்கு இன்று விடுமுறை

ரேஷன் கடைக்கு இன்று விடுமுறை

சென்னை:தமிழக ரேஷன் கடைகளுக்கு, மாதத்தின் முதலாவது மற்றும் இரண்டாவது ஞாயிற்று கிழமை வேலை நாள். அதற்கு மாற்றாக, அந்த வாரங்களில் வரும் வெள்ளிக் கிழமைகளில் விடுமுறை.தீபாவளியை முன்னிட்டு, ரேஷன் கடைகளில், இதுவரை பொருட்களை வாங்காத கார்டுதாரர்களும் வாங்கினர். இதனால், அக்., 27ம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறையாக இருந்த நிலையில், அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டது. அதற்கு மாற்றாக இம்மாதம், 16ம் தேதி விடுமுறை அறிவித்து, உணவு துறை உத்தரவிட்டது.அதன்படி, இன்று ரேஷன் கடைகள் செயல்படாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி