உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்று மூப்பனார் நினைவு தினம்

இன்று மூப்பனார் நினைவு தினம்

சென்னை: மூப்பனாரின் நினைவு தினமான இன்று, சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், மரியாதை செலுத்துகின்றனர். மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், த.மா.கா., நிறுவனருமான மூப்பனாரின், நினைவு தினம், சென்னை தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கம் பின்புறம் அமைந்துள்ள, அவரது நினைவிடத்தில் இன்று அனுசரிக்கப்படுகிறது. நிகழ்ச்சியில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்று, நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, மரியாதை செலுத்த உள்ளனர். நினைவு தினத்தையொட்டி, அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட ஏற்பாடுகளை, த.மா.கா., தலைவர் வாசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் செய்துள்ளனர். சென்னை ஆழ்வார்பேட்டை, மூப்பனார் பாலம் அருகில், மூப்பனாருக்கு சிலை அமைக்குமாறு, தமிழக அரசுக்கு, த.மா.கா., பொதுச்செயலர் வெங்கடேஷ், கோரிக்கை விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை