உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருமா இன்றைய கேள்வி: வழக்கம்போல் எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்.,க்கு குறி!

திருமா இன்றைய கேள்வி: வழக்கம்போல் எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்.,க்கு குறி!

சேலம்: தினம், தினம் எதிர்க்கட்சிகளிடம் மட்டுமே கேள்வி கேட்கும் வழக்கம் உள்ள திருமாவளவன், இன்று (ஜூலை 06) அ.தி.மு.க., பொதுச் செயலாளர் இ.பி.எஸ்.,ஐ குறிவைத்து கேள்வி எழுப்பி உள்ளார்.இது தொடர்பாக சேலத்தில் நிருபர்கள் சந்திப்பில் திருமாவளவன் கூறியதாவது: அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி என்று சொல்லிக் கொண்டாலும் அது பொருந்தா கூட்டணி. அவர்களால் மனம் ஒத்து களப்பணி ஆற்றுவது, அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஒரு பொருந்தா கூட்டணியை உருவாக்கிக் கொண்டு ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்று சொல்வது நேர், முரணாக இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திரும்பத் திரும்ப கூட்டணி ஆட்சி அமைப்போம் என்கிறார். அதற்கு இதுவரை அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இடம் இருந்து உறுதியான தகவல் இல்லை.யார் தலைமையில் கூட்டணி?தனிப்பெரும்பான்மையுடன் அ.தி.மு.க., ஆட்சி அமையும் என கூறி இருக்கிறார்; இதன் வாயிலாக கூட்டணி ஆட்சியை அவர் மறுக்கிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவதற்கு அ.தி.மு.க., உடன்படவில்லை, அதனை ஏற்காது என்ற அறிவிப்பை அவர் இன்னும் வெளியிடவில்லை. இது தேசிய ஜனநாயக கூட்டணி என பா.ஜ., வினர் சொல்கிறார்கள். அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியா அல்லது பா.ஜ., தலைமையிலான கூட்டணியா?தேசிய ஜனநாயக தலைமையிலான கூட்டணி என்று சொன்னால், அது பா.ஜ., தலைமையிலான கூட்டணி என்று ஆகிவிடும். அ.தி.மு.க., தலைமையில் கூட்டணி என்று சொன்னால், அதற்கு வேறு ஏதும் பெயரை அவர்கள் அறிவிக்க வேண்டும். அதில் இன்னும் குழப்பம் நிலவுகிறது.

முதல்வர் யார்?

முதல்வர் யார் என்பதை தேர்தலுக்கு பின் அமித் ஷா, மோடி முடிவு செய்வார்கள் என்று பா.ஜ.,வினர் சொல்கிறார்கள். இதற்கும் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., உரிய விளக்கத்தை தருவார் என்று தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக் கின்றனர்.இவ்வாறு திருமாவளவன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

சிட்டுக்குருவி
ஜூலை 07, 2025 17:20

கொள்கை இல்லாத கட்சி பியூஸ் போன பல்பு .


Haja Kuthubdeen
ஜூலை 07, 2025 12:58

திருமா...திருவிளையாடல் தருமி மாதிரி....கேள்வி மட்டுமே கேட்கும்.


gold
ஜூலை 07, 2025 04:46

waste fellow ivan pathi daily news ethukku


Venkatesh
ஜூலை 06, 2025 21:57

முதலாளி விசுவாசம்...


rama adhavan
ஜூலை 06, 2025 21:40

தற்கால திருவிளையாடல் தர்மி.


theruvasagan
ஜூலை 06, 2025 21:29

என்னதான் கரடியா கத்தினாலும் பிளாஸ்டிக் சேருக்கு மேல எதுவும் கிடைக்க வக்கில்லையே. அது எதனால என்று முதல்ல விளக்கணும். அப்புறம் ஊர் பஞ்சாயத்துக்கு போய் கழட்டலாம்.


B N VISWANATHAN
ஜூலை 06, 2025 21:10

வரதட்சணையால் தற்கொலை, போலீஸ் அராஜகம் இதர செய்திகள் பற்றி அவருக்கு கவலை இல்லை.


D Natarajan
ஜூலை 06, 2025 20:54

கட்டப் ஞ்சாயத்துலே ஊறிய கட்சி.இப்போது சொல்வாரா ஆபாச பொம்மைகள் இருந்தால் கோயில் என்று. பிளாஸ்டிக் chair தான் எப்போதும்


Samy Chinnathambi
ஜூலை 06, 2025 20:31

ஏம்பா...... கத்துது? பிஸ்கெட் தீர்ந்து போச்சு...வடிவேலு காமெடி தான் நியாபகம் வருகிறது.


Barakat Ali
ஜூலை 06, 2025 20:23

துக்ளக் மன்னர் திருமா மற்றும் பெருந்தகையிடம் [அதிமுக-பாஜக கூட்டணியை நினைச்சா நைட்டு தூக்கமே வர்றதில்லை .... நானே அந்த கூட்டணியை விமர்சிச்சா தோல்வி பயம் ன்னு கரெக்ட்டா பாயிண்ட்டை புடிச்சுருவாங்க ..... அதனால நீங்கள்லாம் அந்த கூட்டணியை தினமும் பாய்ஞ்சு, கடிச்சு குதறணும்] .....