உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.2,000 நிவாரணம் வாங்க டோக்கன் வினியோகம் துவக்கம்

ரூ.2,000 நிவாரணம் வாங்க டோக்கன் வினியோகம் துவக்கம்

சென்னை: விழுப்புரம் உட்பட வெள்ளம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், ரேஷன் கார்டுதாரர்கள், 2,000 ரூபாய் வாங்க, எந்த தேதியில் வர வேண்டும் என்ற விபரம் அடங்கிய, 'டோக்கன்' வினியோகம், நேற்று துவங்கியுள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்களில் கன மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பலரின் வீடுகளில் தண்ணீர் புகுந்தது. மக்களின் வாழ்வாதாரம் முடங்கியதால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, ரேஷன் கார்டு அடிப்படையில் தலா, 2,000 ரூபாய் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த நிவாரண தொகை, ரொக்க பணமாக ரேஷன் கடைகள் வாயிலாக, கார்டுதாரர்களிடம் வழங்கப்பட உள்ளது. ஒரே சமயத்தில், அனைவரும் கூட்டமாக வருவதை தடுக்க, எந்த தேதி, எந்த நேரம் வர வேண்டும் என்ற விபரம் அடங்கிய, 'டோக்கன்' வினியோகம், கார்டுதாரர்களின் வீடுகளில் நேற்று துவங்கியது. இந்த பணியில், ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்று முதல் தினமும் ஒரு கடையில் காலையில், 100 பேர், மாலையில், 100 பேருக்கு நிவாரண தொகை வழங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை