உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாளை 6 மாவட்டங்களில் போலியோ சொட்டு மருந்து

நாளை 6 மாவட்டங்களில் போலியோ சொட்டு மருந்து

சென்னை: செங்கல்பட்டு உட்பட ஆறு மாவட்டங்களில், நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கவுள்ளது. தமிழகத்தில், 22 ஆண்டுகளாக போலியோ நோய் பாதிப்பு இல்லை. அதேநேரத்தில், அண்டை நாடுகளில் போலியோ வைரஸ் பரவல் காணப்படுகிறது. இதனால், இந்திய போலியோ வைரஸ் நிபுணர் ஆலோசனை குழு, 21 மாநிலங்களில், 272 மாவட்டங்களை, போலியோ நோயால் பாதிக்கப்படக் கூடிய பகுதியாக அடையாளம் கண்டுள்ளது. தமிழகத்தில், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, சிவகங்கை, தஞ்சாவூர், திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்கள், அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்த மாவட்டங்களில், நாளை காலை 7:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை, போலியோ சொட்டு மருந்து போடப்பட உள்ளது. 5 வயதிற்கு உட்பட்ட, 9.16 லட்சம் குழந்தை களுக்கு, 6,647 மையங்களில் முகாம்கள் நடக்க உள்ளன. செங்கல்பட்டில், 2.70 லட்சம்; தஞ்சாவூரில், 1.82 லட்சம்; விருதுநகரில் 1.44 லட்சம்; திருநெல்வேலியில், 1.32 லட்சம்; சிகவங்கையில், 1.17 லட்சம்; மயிலாடுதுறையில் 69,386 குழந்தைகள் பயன்பெற உள்ளனர். பஸ், ரயில் நிலையங்கள், சோதனைச் சாவடிகள், திருமண மண்டபங்கள், பயண வழி மையங்களில், சொட்டு மருந்து வழங்கப்படும். இப்பணியில், 27,000 பணியாளர்கள் ஈடுபட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை