உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.7 கோடி முதலீடு, ரூ.90 கோடி லாபம்; 2025ல் அதிக வசூல் சாதனை படைத்த டூரிஸ்ட் பேமிலி

ரூ.7 கோடி முதலீடு, ரூ.90 கோடி லாபம்; 2025ல் அதிக வசூல் சாதனை படைத்த டூரிஸ்ட் பேமிலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 2025ம் ஆண்டு இந்திய சினிமா வரலாற்றில் அதிக லாபத்தை அள்ளிய படமாக டூரிஸ்ட் பேமிலி படம் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது.குறைந்த பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படங்கள் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்படும் படங்களை ஓரம்கட்டி லாபத்தை அள்ளிக் கொடுக்கும். எப்போதாவது நடக்கும் இதுபோன்ற மாயாஜாலம் 2025ம் ஆண்டு இந்திய சினிமாவில் நிஜமாகி இருக்கிறது. அப்படி ஒரு பெருமையையும், ஆச்சரியத்தையும் தந்திருக்கிறது டூரிஸ்ட் பேமிலி என்ற தமிழ்ப்படம். படத்தில் இயக்குநர், தயாரிப்பாளர் என்ற அடையாளத்தை ஏற்கனவே திரைத்துறையில் பெற்றவரான சசிக்குமார், சிம்ரன், யோகிபாபு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இந்த படத்தின் தயாரிப்பு செலவு ரூ.7 கோடி மட்டுமே. ஆனால் உலகம் முழுவதும் கிடைத்த லாபம் ரூ.90 கோடி. அதாவது முதலீட்டு தொகையை விட 1200 சதவீதத்துக்கும் அதிகம். 2025ம் ஆண்டு இந்திய திரைப்பட வரலாற்றில் எந்த ஒரு படமும் இபபடி ஒரு வசூல் சாதனையை பிடித்தது இல்லை என்கிறது சாக்நில்க் என்ற நிறுவனம். இந்த நிறுவனம், திரைப்படங்களின் தரவுகள் பற்றிய விவரங்களை வெளியிடும் ஒரு நிறுவனம் ஆகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Kulandai kannan
ஜூலை 22, 2025 19:30

தமிழர்கள் 150 நாடுகளில் இருக்கிறார்கள். பல நாடுகளில் கஷ்ட ஜீவனம்தான். அங்கெல்லாமும் தனிநாடு கேட்டார்களா? இலங்கையில் மிஷனரிகளின் துர்போதனைதான் தனி ஈழப் போராட்டத்தின் பின்னணி. தமிழக பிரிவினை வாதிகளின் தூண்டுதல் வேறு.


JOSEDAVID
ஜூலை 22, 2025 12:30

u r lie still malayalam movies are low budget last year premalu movie block buster hit


Padmasridharan
ஜூலை 22, 2025 11:34

இதுல நல்லத நிறைய காண்பிச்சு கெட்டத கம்மியாக்கி இருக்காங்க சாமி. . மத்த படங்கள்ல வன்முறைய நிறைய_நிறைய பாக்க வெச்சி கடைசில கொஞ்சம் நல்லதா போடறாங்க. சிகெரெட் மது பாட்டிலுடன் நாக்க மடிச்சிகிட்டு விசில் சத்தத்தோட ஒரு பாடல் ஆனா கீழ smoking & drinking "IS" injurious to health னு grammatical error வேற. மக்களை நல்லபடியா இருங்கனு சின்னதா காமிச்சு கெட்ட செயல்கள பெருசா காமிக்கறாங்க.


Subramanian Suriyanarayanan
ஜூலை 22, 2025 11:08

Absolutely.... Shame that these type of movies and stories are being encouraged by the public


VSMani
ஜூலை 22, 2025 10:25

83 கோடி ரூபாய் லாபம். சசி குமாருக்கு அடித்தது ஜாக்பாட் லக்கி பம்பர் பரிசு.


ஆரூர் ரங்
ஜூலை 22, 2025 10:16

கள்ளக் குடியேற்றத்ததுக்கு வக்காலத்து வாங்குவதை கைத்தட்டி ரசிக்கும் மக்களை என்ன சொல்வது?.


Palanisamy T
ஜூலை 22, 2025 13:13

இவர்களை குற்றம்சொல்லி எந்தப் பயன்களுமில்லை. என்றாவது ரசிகர்கள் சிந்தித்து செயல்பட்டதுண்டா? வீட்டிற்கும் நாட்டிற்கும் நல்லவர்களாக இருக்க வேண்டியவர்கள். மாணவர்களாக படிக்கின்ற வேலையாவது ஒழுங்காக செய்கின்றார்களா? இவர்களே எந்த வேலையிலேயும், தங்களுக்குப் பிடித்த ஹீரோக்களின் படங்கள் முதல் "ஷோ" வாக வெளியாகும் போது பட மேடைகளில் உள்ளேயும் வெளியேயும் அவர்கள் நடந்துக்கொள்ளும் விதம் - ஒன்றும் சொல்வதற்கில்லை.


Ganesun Iyer
ஜூலை 22, 2025 15:31

எப்படி, இந்த ட்ரவிடிய குடியேறிகள் தமிழரின் உரிமையை பறிப்பதற்கு உதவும் இந்த கூட்டல்குறி, பச்சை கும்பலை போலவா ?


மூர்க்கன்
ஜூலை 22, 2025 16:01

ஈழத்தமிழர்கள் தமிழ் பேசும் இளிச்சவாயர்கள் அவர்கள் ஹிந்துக்கள் இல்லை போலிருக்கு?? பாகிஸ்தானில் இருந்து வரும் உருது பேசும் ஹிந்துக்கள் மட்டுமே இந்திய குடியுரிமை பெற தகுதியுள்ளவர்கள் ஆரூரங்கின் அருமையான கண்டு பிடிப்பு.


Karthik
ஜூலை 22, 2025 09:37

1185.71% அல்லது 11.86 மடங்கு லாபம் என்பது சரியான விடை. மாற்றுக் கருத்து இருப்போர் பதிவிடலாம்..


Sundharji eswaran
ஜூலை 22, 2025 10:37

உங்களுக்கும் வேலை இல்லை. இந்த பதில் போடும் எனக்கும் வேலையில்லை. ஹா ஆ ஹா ஹா ஹா


khanda
ஜூலை 22, 2025 09:00

120 percentage


சமீபத்திய செய்தி