உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யானை மீது மோதிய சுற்றுலா பயணி பலி

யானை மீது மோதிய சுற்றுலா பயணி பலி

வால்பாறை: ஜெர்மனியில் பிறந்த ஆங்கிலோ இந்தியர் மைக்கேல், 77, கோவை மாவட்டம் வால்பாறை டைகர் பள்ளத்தாக்கு அருகே பைக்கில் செல்லும்போது காட்டு யானை மீது மோதி படுகாயம் அடைந்தார். பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பலனின்றி இறந்தார்.ஜெர்மனியில் பிறந்த ஆங்கிலோ-இந்தியர் மைக்கேல் இன்று கோவை மாவட்டம் வால்பாறை நெடுஞ்சாலையின் டைகர் பள்ளத்தாக்கு பகுதியில் பகுதியில் இன்று மாலை பைக்கில் சென்று கொண்டிருந்தார். அவர் சாலையைக் கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த யானை மீது எதிர்பாராத வகையில் மோதி காயமடைந்தார். இந்த சம்பவத்தில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது.தகவல் அறிந்த வனத்துறையினர் அவரை வாட்டர் பால்ஸ் எஸ்டேட் மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்.அதை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சை பலனின்றி இறந்தார்.. மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை