உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சினிமா ஷூட்டிங்கில் விபரீதம்: சண்டை பயிற்சியாளர் பலி

சினிமா ஷூட்டிங்கில் விபரீதம்: சண்டை பயிற்சியாளர் பலி

விருகம்பாக்கம்: நடிகர் கார்த்தி நடிக்கும் சர்தார்-2 பட ஷூட்டிங்கின் போது சண்டை பயிற்சியாளர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.கடந்த 2022-ம் ஆண்டு, கார்த்தி நடிப்பில் வெளியான படம் சர்தார். இப்படத்தை, பி.எஸ்.மித்ரன் இயக்கினார். இந்த படம் வரவேற்பை பெற்றதை அடுத்து, அதன் இரண்டாம் பாகம் எடுக்க படக்குழு திட்டமிட்டது. இதையடுத்து, 'பிரின்ஸ் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் சர்தார் - 2 படத்தின் பூஜை, கடந்த 12ம் தேதி நடந்தது. தொடர்ந்து 15ம் தேதி முதல் படப்பிடிப்பு நடந்து வருகிறது.நேற்று (ஜூலை16) இரவு, வடபழனியில் உள்ள ஸ்டூடியோவில், சண்டை காட்சிகள் படம் பிடிக்கப்பட்டன. இதில், புதுவண்ணாரப்பேட்டை, தங்கமகள் தெருவைச் சேர்ந்த ஏழுமலை, 54, சண்டை பயிற்சியாளராக பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக, 20 அடி உயரத்தில் இருந்து ஏழுமலை கீழே தவறி விழுந்தார். இதில், மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு வடபழனியில் உள்ள சூர்யா மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை உயிரிழந்தார். நுரையீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் ஏழுமலை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். படப்பிடிப்பின்போது, பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் அணியாததே விபத்திற்கான காரணம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

D.Ambujavalli
ஜூலை 17, 2024 16:18

இது பட உலகில் ஒரு சம்பவமாக சில நாட்களில் மறக்கப்பட்டுவிடும் 'அவருக்குப் பதில் இவர்' என்று அடுத்த ஸ்டண்ட் மாஸ்டர் வந்து படம் கோலாகலமாக ஓடும். ஹீரோ பல கோடிகள் சம்பாதிப்பார் இறந்தவர் குடும்பம்தான் நடுத்தெருவில் நிற்கும்


வாய்மையே வெல்லும்
ஜூலை 17, 2024 15:47

சண்டை பயிற்சியாளர் சாவிற்கு அரசிடமிருந்து ஒரு அரைக்கோடி காசு கொடுக்கவும் . ஏன் என்று மாக்கள் கேட்கலாம். என்னுடைய பதில் அரசியல் இருந்து தான் தமிழ்நாட்டு அரசியல் வியாதிகள் உருவாகிறார்கள். அப்படி இருக்கையில் குறைந்த பட்சம் ருபாய் அரைக்கோடி யாவது இவரது குடும்பத்துக்கு கொடுக்கவேணும். துண்டு விழும் பட்சத்தில் மக்களிடம் அதிக வரி வசூலிச்சு எவனாவது கேள்வி கேட்டால் பாஜக மேல வீண் பழியை போட்டுட்டு போயிட்டே இருக்கலாம் .


Venkatasubramanian krishnamurthy
ஜூலை 17, 2024 15:04

யாருங்க அது... நம்ம திராவிட சமூகக் கருத்து சொல்லி சூர்யோவோட தம்பி திராவிட முன்னெடுப்பு கார்த்தியோட படப்பிடிப்புலயா இது நடந்தது? ஆங்காங்கே மருத்துவமனை கட்டச் சொல்லி குரல் கொடுக்கிற ஜோதிகாவுக்காக இந்த விஷயத்தை யாரும் பெரிதுபடுத்த வேண்டாங்க. விட்டுடுங்க. ஏழைக் குடும்பம் பிழைச்சிப் போகட்டும்.


நிக்கோல்தாம்சன்
ஜூலை 17, 2024 14:42

பள்ளி கல்லூரி என்று பேசி சம்பளம் வாங்கி கொள்ள மாத்திரம் இது போன்ற குடும்பங்கள் ..


HoneyBee
ஜூலை 17, 2024 14:28

கார்த்தி இப்ப ஏதும் பேச மாட்டார். அதே எடப்பாடி ஆட்சி என்றால் ஒழிக என்று கோஷம் போடுவார்.. இப்படிப்பட்ட ஹீரோக்களை நம்பும் கூட்டத்தை என்ன சொல்ல


எஸ் எஸ்
ஜூலை 17, 2024 13:15

இவர் போன்றவர்கள் உயிரை பணயம் வைத்து நடிக்க முன்னணி நடிகர்கள் கைத்தட்டல் வாங்கி கோடி கோடியாக சம்பாதித்து மக்களுக்கு உபதேசம் செய்கிறார்கள். நாமும் கேட்டுக்கொண்டு இருக்கிறோம்


sridhar
ஜூலை 17, 2024 12:30

இப்படிப்பட்ட போலி வீரம் காட்டும் ஸ்டண்ட் காட்சிகள் தேவையா , ஏற்கனவே இதுபோல் பலர் இறந்திருக்கிறார்கள் .


GSR
ஜூலை 17, 2024 12:16

உயரத்தில் இருந்து சண்டை அல்லது பணியாற்ற வேண்டும் என்றால், கீழே வலை கட்டுவது வழக்கம் இல்லையா? எப்படி இங்கு தவற விட்டனர்?


Krishnamurthy Venkatesan
ஜூலை 17, 2024 11:55

அனைத்து ஸ்டண்ட் நடிகர்களும் ஆயுள் காப்பீடு எடுத்துள்ளார்களா என்பதை ஸ்டண்ட் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர் சங்கம் உறுதி படுத்திய பின்னரே அவர்களுக்கு தமது படங்களில் வாய்ப்பு தர வேண்டும். ஏனெனில் பெற்றோர் , மனைவி குழந்தைகளின் வாழ்க்கை பாதுகாப்பு முக்கியம்.


lana
ஜூலை 17, 2024 11:34

ஊருக்கு எல்லாம் உபதேசம் செய்வார்கள் செல் தட்டி குடும்பம். கூடுதல் ஆக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து சக கலைஞர்களின் உயிரை காக்க வேண்டும். வெறும் காக்க காக்க ன்னு கக்குவான் இருமல் போல உபதேசம் செய்ய வேண்டாம்


மேலும் செய்திகள்