உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  பிரயாக்ராஜ் மகாமேளா செல்ல ராமேஸ்வரத்தில்  இருந்து ரயில்

 பிரயாக்ராஜ் மகாமேளா செல்ல ராமேஸ்வரத்தில்  இருந்து ரயில்

ராமநாதபுரம்: உ.பி., பிரயாக்ராஜ் மகாமேளா செல்ல ராமேஸ்வரத்தில் இருந்து நேரடி ரயில் இயக்கப்படவுள்ளது. பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் ஜனவரி மாதம் நடக்கவுள்ள மகாமேளாவை முன்னிட்டு நாடு முழுவதும் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களை மகாமேளா நடைபெறும் பகுதிக்கு அருகில் உள்ள பிரயாக்ராஜ் செகோகி வழியாக இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து புதன்கிழமை தோறும் பனாரஸ் செல்லும் அதிவிரைவு ரயில் (எண் 22535) டிச.,31 முதல் பிப்.,11 வரை பிரயாக்ராஜ், கியான்பூர் வழியாக செல்வதற்கு பதிலாக மாணிக்பூர், பிரயாக்ராஜ் செகோகி, மிர்சாபூர், ஜியோ நாத்பூர் வழியாக இயக்கப்படும். பிரயாக்ராஜ் செகோகிக்கு வெள்ளிக்கிழமை இரவு 9:45 மணிக்கு சென்றடையும். மறு மார்க்கமாக பிரயாக்ராஜ் செகோகியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 11:10 க்கு புறப்படும். இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது துவங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ