உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மா.செ.,க்களுக்கு பயிற்சி: விஜய் கட்சியில் துவக்கம்

மா.செ.,க்களுக்கு பயிற்சி: விஜய் கட்சியில் துவக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : மாவட்டச் செயலர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து, த.வெ.க.,வில் பயிற்சி வகுப்பு, நேற்று துவங்கியது. தமிழக வெற்றிக் கழகத்திற்கு, 120 மாவட்ட செயலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். நடிகர் விஜய் நடித்த படங்களை ரசித்து பழகிய மாவட்ட செயலர்கள், கட்சி நிகழ்ச்சிகளில் முன்வரிசையில் அமர்ந்து, விசில் அடிப்பது, கட்சித்துண்டை தலைக்கு மேல் சுற்றி ஆட்டம் போடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை பார்த்து, பின்வரிசையில் அமர்ந்துஇருக்கும் கட்சி நிர்வாகிகளும், ஆட்டம் போடுகின்றனர். மற்ற கட்சியினர் இதை கிண்டலடித்து வருகின்றனர். இதை விஜய் கவனத்திற்கு, அக்கட்சியில் புதிதாக சேர்ந்துள்ள ஆதவ் அர்ஜுனா, நிர்மல் ஆகியோர் கொண்டு சென்றனர்.இதையடுத்து, மாவட்ட செயலர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்க, விஜய் ஏற்பாடு செய்தார். அதன்படி, சென்னை, பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், பொதுச்செயலர் ஆனந்த் தலைமையில் நேற்று, மாவட்டச் செயலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை பயிற்சி அளிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

பாரத புதல்வன்~ தமிழக ஒன்றியம்
ஏப் 12, 2025 20:15

பொன்முடி, ராசா, சிவாஜி கிருஷ்ணமூர்க்கன், துரை முருகன் இவனுகளை வைத்து பயிற்சி கொடு நல்ல எதிர்காலம் இருக்கு ஜோசப்பு.... ஆமாப்பு....


பாரத புதல்வன்~ தமிழக ஒன்றியம்
ஏப் 12, 2025 20:12

மொதல்ல நீங்க, வாங்குன காருக்கு ஒழுங்கா வரி கட்ட பயிற்சி எடுங்க ஜோசப்பு


M Ramachandran
ஏப் 12, 2025 11:52

ஜோயசப்பின் எண்ணம் இரண்டு ஆடுகள் முட்டி மோதிக்கொண்டால் லாபம் தானெ. ஒழுகும் ரத்தம் நமக்கு தானென சப்பு கொட்டி சாப்பிடலாம்.


M Ramachandran
ஏப் 12, 2025 11:50

அறிவாலயத்திற்கு அனுப்பினால் அறிவு வளர அவர்கள் பக்கா பயிற்சி கொடுத்து முடிப்பும் கொடுப்பார்களெ.


பாலா. சென்னை.
ஏப் 12, 2025 11:41

ஓ இப்பதான் பயிற்சியா ?


சுந்தர்
ஏப் 12, 2025 11:02

சட்டியில் இருந்தால்தான் அகப்பையில்...


M S RAGHUNATHAN
ஏப் 12, 2025 10:46

கட்சித் தலைவருக்கு எப்படி பேசவேண்டும், என்ன பேசவேண்டும், எப்போது பேச வேண்டும் என்பது பற்றி யார் இடம் இவர் பயிற்சி பெறப்போகிறார். சட்டம், நாட்டின் பொருளாதார கொள்கை, வெளி நாட்டு கொள்கை போன்ற விஷயங்களில் இவர் அறிவுத் திறன் என்ன ? சினிமாவில் எழுதிக் கொடுத்த வசனங்கள் போல் யாரோ எழுதிக் கொடுக்கும் வார்த்தைகளை பேசக் கூடாது.


Balasubramanian
ஏப் 12, 2025 08:16

கெட் அவுட் ஸ்டாலின்! நோ என்ட்ரி விஜய்! இதுவே தமிழக மக்களின் தாரக மந்திரம்!


KRISHNAN R
ஏப் 12, 2025 07:12

செக்கு பதவி விநியோகம்


Kasimani Baskaran
ஏப் 12, 2025 06:39

புஸ்ஸியை நீக்கி வெறும் ஆனந் ஆனாது சிறப்பான முன்னேற்றம் - ஆனால் வீட்டில் இருந்து வேலை செய்ய பயிற்சி கொடுப்பது சிறிது கூட சரியில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை