உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சி.பி.ஐ.,க்கு மாற்றியது ஆச்சரியம் அளிக்கிறது; மேல்முறையீடு குறித்து ஆலோசனை; அமைச்சர் ரகுபதி அப்டேட்

சி.பி.ஐ.,க்கு மாற்றியது ஆச்சரியம் அளிக்கிறது; மேல்முறையீடு குறித்து ஆலோசனை; அமைச்சர் ரகுபதி அப்டேட்

புதுக்கோட்டை: 'கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றியது ஆச்சரியமாக உள்ளது. மேல்முறையீடு குறித்து ஆலோசனை செய்யப்படும் ' என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.புதுக்கோட்டையில் நிருபர்கள் சந்திப்பில், அமைச்சர் ரகுபதி கூறியதாவது: கள்ளச்சாராய வழக்கில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. தமிழக போலீசார் வழக்கை சிறப்பான முறையில் விசாரித்து வந்தனர். இந்த சூழலில், உயர்நீதிமன்றம் வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்றியது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. நீதிபதிகளின் தீர்ப்பை விமர்சிக்கும் உரிமை நமக்கு கிடையாது. ஆனால் தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்பது இதுவரை எந்த அரசும் எடுக்காத ஒன்றாகும்.

மேல்முறையீடு

சி.பி.ஐ., என்பது ஒரு அமைப்பு தான். இது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எந்த வழக்கையும் சிறப்பாக கையாளும் ஆற்றல் மிக்கவர்கள் தமிழக போலீசார். இந்த வழக்கையும் சிறப்பாக கையாண்டு வருகிறார்கள். இந்த தீர்ப்பு எங்களை ஆலோசிக்க செய்து இருக்கிறது. இது குறித்து அரசு வழக்கறிஞர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துவார். நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து முதல்வர் ஸ்டாலின் நல்ல முடிவு எடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

sankar
நவ 21, 2024 12:46

அரசின் திறமைக்கும் வேகத்திற்கும், வேங்கைவயலே சாட்சி


Suresh Sivakumar
நவ 21, 2024 12:35

You cant allow criminals to investigate a crime. Hence the case has been moved to cbi


TSelva
நவ 21, 2024 11:28

கள்ளச்சாராய சாவுக்கு மக்கள் வரிப்பணம் 10 லட்சம். கேஸ் சிபிஐக்கு மாறினால் குற்றவாளிகள் பதறும் முன்பாக திமுக பதறுதே. கூட்டி கழிச்சா ஏதோ நெருடுகிறதே. கும்பகோணத்தில் இடி இடிச்சா கொடைக்கானல் ஏன் பதறுகிறது.


TSelva
நவ 21, 2024 11:21

குற்றவாளிகள் கவலைப்படலாம். ஏன் திமுக கவலைப்படுவதால் இதில் திமுக சம்பந்தப்பட்டு இருக்குமோ. எங்கேயோ நெருடுகிறது. கும்பகோணத்தில் இடி இடிச்சா கொடைக்கானலுக்கு பாதிக்கிறதே


Ramesh Sargam
நவ 20, 2024 20:03

சி.பி.ஐ.,க்கு மாற்றியது என்று அறிந்தவுடன் அமைச்சர் ஏன் இவ்வளவு பொங்குகிறார்? ஒருவேளை அந்த விவகாரத்தில் இவரும் சம்பந்தப்பட்டிருப்பாரோ...??


sankaranarayanan
நவ 20, 2024 18:50

எந்த வழக்கையும் சி.பி.ஐ. க்கு மாற்றுவதில் ஒன்று பெரிய ஆச்சர்யமோ அல்லது அனுதாபமோ இல்லை அந்த வழக்கு ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்றே உச்ச நீதி மன்றம் உத்திரவு போட்டு அந்த வழக்கை ஆரம்பிக்க சொல்ல வேண்டும் .எந்த வழக்கும் சி.பி.ஐ/.கொடுத்தபின் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்துவைக்கப்பட்டது என சரித்திரத்தில் கிடையாது.அதற்கு சாதாரண நீதி மன்றங்கள் போதுமே .எதற்காக தனி சி.பி.ஐ. நீதிமன்றம் செயல்படுகிறது.இது மக்களின் வீண் பண செலவுதான்.


Perumal Pillai
நவ 20, 2024 16:40

ஏன் இவனுக பதறுகிறார்கள் ?


Suppan
நவ 20, 2024 16:15

ஏற்கனவே ஆதாரங்களை அழித்தாகிவிட்டது. கட்சிக்காரனை காட்டிக்கொடுக்க பைத்தியமா என்ன. அவன் மார்பில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பத்து லட்சம் கொடுத்து அவர்கள் வாயை அடைத்தாயிற்று. எல்லோரும் மாரடைப்பால் செத்தார்கள்தானே? யாராவது வாயைத்திறந்தால் பத்துலட்சத்தை திருப்பிக்கொடுக்க வேண்டும் என்று கிளம்பிவிட்டால் முடிந்தது கதை. சி பி ஐ தலைமுடியைப்பிடித்து இழுத்துக்கொள்ளவேண்டும். அப்புறம் கவலை எதற்கு மாண்பு ரகுபதி ஐயா?


ஸ்ரீ
நவ 20, 2024 15:58

திராவிட உருட்டு


R.MURALIKRISHNAN
நவ 20, 2024 15:43

நடிகை கஸ்தூரியை கைது பண்ணத்தான் இந்த அரசு லாயக்குன்னு நெனச்சுட்டாங்களோ .


முக்கிய வீடியோ