உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொங்கலுக்கு சொந்த ஊர் கிளம்பிய பயணிகள்: விமான கட்டணம் 5 மடங்கு உயர்வு

பொங்கலுக்கு சொந்த ஊர் கிளம்பிய பயணிகள்: விமான கட்டணம் 5 மடங்கு உயர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இருந்து கோவை, மதுரைக்கு விமான கட்டணம் 5 மடங்கு உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு வழக்கமாக ரூ.3,367 இருந்த கட்டணம் தற்போது ரூ.17,262 ஆக உயர்ந்துள்ளது. பொங்கலுக்கு சொந்த ஊர் கிளம்பிய பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை வரும் ஜன.,15ம் தேதி திங்கள் கிழமை முதல் கொண்டாடப்பட உள்ளது. இன்றும்(ஜன.,13), நாளையும்(ஜன.,14) சனி, ஞாயிறு விடுமுறை ஆகும். வரும் ஜன.,15,16,17 ஆகிய தினங்கள் பொங்கல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் கொண்டாட மக்கள் அனைவரும் ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் பஸ் நிலையங்களில் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். சாலைகளில் கடும் போக்குவரத்து ஏற்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3h5rn4x4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சென்னையிலிருந்து தென்மாவட்டங்கள் மற்றும் திருவனந்தபுரம், கொச்சி, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு செல்பவர்கள் ஏராளமானோர் விமானத்தில் முன்பதிவு செய்து வருகின்றனர். சென்னையில் இருந்து கோவை, மதுரைக்கு விமான கட்டணம் 5 மடங்கு உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னை-தூத்துக்குடி இடையேயான வழக்கமான விமானக் கட்டணம் ரூ.3,624 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.13,639 ஆகவும், சென்னை-மதுரை ரூ.3,367 இல் இருந்து ரூ.17,262 ஆகவும், சென்னை-திருச்சி ரூ.2,264 இல் இருந்து ரூ.12,369, சென்னை-கோவை ரூ.14,659 ஆக அதிகரித்துள்ளது. பொங்கலுக்கு சொந்த ஊர் கிளம்பிய பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Arasu
ஜன 14, 2024 14:41

கார்பொரேட் கொள்ளை


g.s,rajan
ஜன 13, 2024 22:15

முகமூடிக் கொள்ளை ....


g.s,rajan
ஜன 13, 2024 22:02

வழிப்பறிக் கொள்ளை .....


g.s,rajan
ஜன 13, 2024 22:01

இந்தியாவில் ரயில் ,விமானம் ,பேருந்து போன்ற அனைத்துப் போக்குவரத்து அமைப்புக்களும் மக்களின் இன்றியமையாத பயணங்களுக்கு,அவசரப் பயணங்களுக்கு நெருக்கடி கொடுத்து ,தொடர்ந்து தட்டுப்பாட்டை ஏற்படுத்தி தாறுமாறாகக் கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பது ,அதிகமான கட்டணத்தை மக்களிடம் உறிஞ்சுவது பகல் கொள்ளையில் ஈடுபடுவதற்குச் சமம் ,இதற்கு முற்றுப்புள்ளி எப்போது ...???


g.s,rajan
ஜன 13, 2024 20:34

Day Light Robbery among all the Transport tem in India is very Shocking to the Public and it should be Highly Condemed must be given a Full Stop.


Gopalan
ஜன 13, 2024 19:52

பயணிகளுக்கான அனைத்து போக்குவரத்து அமைப்புகளுக்கும் Flexible price திரும்பப் பெறப்பட வேண்டும். வளைந்து கொடுக்கும் விலைகள் காரணமாக சாதாரண மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.


rama adhavan
ஜன 13, 2024 17:57

போக வேண்டாமே?


அப்புசாமி
ஜன 13, 2024 17:00

இங்கே ஆம்னி பஸ் கட்டணத்தைக் கூட்டினா லபோ திபோன்னு கத்துவாங்க.


Priyan Vadanad
ஜன 13, 2024 15:49

இதற்காக யாரும் பொங்கலுக்கு சொந்த ஊர் போகமாட்டோம் என்று ஸ்டிரைக் பண்ணவா போகிறார்கள்???


vijay,covai
ஜன 13, 2024 14:55

கார்ல போணா செலவு குறைவு


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை