உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.5 லட்சம் கடனுக்கு 63 லட்சம் கேட்டு தம்பதியை மிரட்டிய டிராவல்ஸ் ஓனர் கைது

ரூ.5 லட்சம் கடனுக்கு 63 லட்சம் கேட்டு தம்பதியை மிரட்டிய டிராவல்ஸ் ஓனர் கைது

மேட்டூர், ஐந்து லட்சம் ரூபாய் கடனுக்கு, 27 லட்சம் ரூபாய் செலுத்திய நிலையில், மேலும், 36 லட்சம் ரூபாய் கேட்டு, தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்த, 'டிராவல்ஸ்' உரிமையாளரை, போலீசார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம் மேட்டூர், கருமலைக்கூடல், பச்சமணியக்கார தெருவை சேர்ந்த டிரைவர் ஆனந்த். இவரது மனைவி பிரதீபா, 30. இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். கோனுார் டிராவல்ஸ் உரிமையாளர் முருகன், 39. இவரிடம், 2023ல், 5.20 லட்சம் ரூபாய் கடனாக, பிரதீபா, குடும்ப சூழ்நிலை காரணமாக வாங்கியுள்ளார். அப்போது முருகன், 4 புரோ நோட்டுகள், 100 ரூபாய் பத்திரம் - 3, 20 ரூபாய் பத்திரம் ஒன்று ஆகியவற்றில் கையெழுத்து வாங்கியுள்ளார். பிரதீபா, பணம் திரும்ப கொடுத்து வந்தார். அதன்படி, 27 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார்.இந்நிலையில் மேலும், 36 லட்சம் ரூபாய் தர வேண்டும் எனக்கூறி, கடந்த ஆண்டு அக்டோபரில் பிரதீபா வீட்டுக்கு சென்ற முருகன், கார், பைக் ஆர்.சி., புத்தகம், வீட்டுமனை பட்டா, பான், ஆதார், ரேஷன் கார்டுகளை மிரட்டி வாங்கிச்சென்றார். மேலும் நிலுவை பணம் கேட்டும் தொந்தரவு செய்துள்ளார்.நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு, பிரதீபா வீட்டுக்கு மீண்டும் சென்று பணத்தை கேட்ட முருகன், கெட்ட வார்த்தைகளில் திட்டியுள்ளார். இதனால் ஆனந்த் சத்தம் போட, முருகன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பிரதீபா புகார்படி, கருமலைக்கூடல் போலீசார், முருகனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை