உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 10 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை; மனிதநேய டாக்டர் டி.கே.ரத்தினம் காலமானார்!

10 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை; மனிதநேய டாக்டர் டி.கே.ரத்தினம் காலமானார்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பட்டுக்கோட்டை அருகே சீனிவாசபுரத்தில் நீண்ட நாட்களாக ரூ.10 மட்டுமே கட்டணமாக பெற்றுக் கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த டாக்டர் டி.கே.ரத்தினம் பிள்ளை, 96, காலமானார்.தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் ரத்தினம்,96. இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், மூன்று மகள்கள் உள்ளனர். இவர் 1959ம் ஆண்டு டாக்டர் பணியை துவங்கினார். அவர் 2 ரூபாய்க்கு தனது பணியை ஆரம்பத்தில் தொடங்கினார். இறுதி வரை 10 ரூபாய் வரை மட்டுமே கட்டணம் வாங்கினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=g8ksbrlb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்தியா, சீனா போர் நடந்தபோது இந்திய அரசு போர் தளவாடங்கள் வாங்குவதற்கு போதுமான நிதி இல்லை. எனவே மக்கள் தங்களிடம் உள்ள பணம், நகை போன்றவற்றை அரசுக்கு கொடுத்து உதவுங்கள், 5 வருடம் கழித்து அவற்றைத் திருப்பி தந்துவிடுவதாக கூறிக் கேட்டுள்ளனர். அப்போது தன் மகள்களின் திருமணத்துக்காக சேமித்து வைத்திருந்த 83 பவுன் தங்க நகையை மத்திய அரசிடம் கொடுத்தார். மீண்டும் மத்திய அரசு நகையை திரும்பி வழங்கியது. கொரோனா நேரத்தில் தனது கட்டடத்தில் இருந்த கடைகளுக்கு 3 மாத வாடகையை வியாபாரிகளிடம் வாங்கிக்கொள்ளவில்லை. கடந்த 1929ம் ஆண்டு பிறந்த இவர் இன்று (ஜூன் 07) வயது மூப்பு காரணமாக இறந்தார். இவரது உடல் நாளை அவரது இல்லத்திலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்தனர்.வேதனை அளிக்கிறது!தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கை: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சீனிவாசபுரத்தில் கடந்த 65 ஆண்டுகளுக்கு மேலாக ரூ.10 மட்டும் கட்டணமாக பெற்றுக் கொண்டு அனைத்து தரப்பு மக்களுக்கும் சிகிச்சை அளித்து வந்த டாக்டர் ரத்தினம்பிள்ளை வயது மூப்பு காரணமாக இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.ரத்தினம்பிள்ளையை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தமிழக பா.ஜ., சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

aaruthirumalai
ஜூன் 08, 2025 11:39

எந்த வித பந்தாவும் இல்லாத நல்ல மனிதர்.


Subramanian
ஜூன் 08, 2025 07:00

இந்த காலத்தில் இப்படியொரு மருத்துவரா. ஆழந்த இரங்கல்கள். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி


Theven
ஜூன் 08, 2025 02:13

அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டி பல உள்ளங்கள் நிட்சயம் இறைவனை வேண்டி நிற்பார்கள். அற்புதமான மாமனிதர். இப்படியான சில பேர் இவ்வுலகில் இருப்பது ஆண்டவன் கொடுத்த கொடை.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 07, 2025 21:17

அப்பா தலைமையில் குன்றிய நாட்டில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதல் என்னும் கொள்கை முழங்கும் வேளையில் பத்து ரூபாய்க்கு மருத்துவமே பார்த்திருக்காரு இவர். பெரிய மனிதர் .


Ramesh Sargam
ஜூன் 07, 2025 20:29

அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். மருத்துவம் படித்துவிட்டு கொள்ளையடிக்கும் இன்றைய மருத்துவர்கள் இவரைப்பார்த்து திருந்தவேண்டும்.


V RAMASWAMY
ஜூன் 07, 2025 18:51

இப்பேர்ப்பட்ட மனித ரத்தினங்களை கௌரவித்ததா தன் சொந்தந்தங்களையே கொண்டாடிக்கொண்டிருக்கும் மாடல் அரசு?


Subramanian
ஜூன் 08, 2025 07:01

சரியான பதிவு


V.Mohan
ஜூன் 07, 2025 17:42

மருத்துவ பணியை மனித நேய பணியாக செய்த தன்னலமற்ற டாக்டர் ஐயா ஆன்மா சாந்தி அடையட்டும். இக்காலத்தில் மருத்துவம் பார்க்கும் டாக்டர்கள், தங்களது தேவைக்கான மருந்துகளை தாங்கள் ஓரிருவர் சேர்ந்து மருந்து தயாரிப்பு கம்பெனி ஆரம்பித்து, மருந்தின் தயாரிப்பு விலையிலிருந்து, 100 அல்லது 150 மடங்கு விலை வைத்து தங்கள் மருத்துவ மனையிலும்,அருகே உள்ள ஒரே ஒரு கடையிலும் வைத்து வியாபாரம் செய்து பலமடங்கு பணம் சம்பாதிக்கின்றனர். இந்த லட்சணத்தில் நீட் தேர்வுக்கு லடசக்கணக்கில் பணம் செலவு செய்து அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மருத்துவபடிப்பு முடிந்து தொழில் துவங்குபவர்கள் பணம் கொள்ளையாக சம்பாதிக்க இது போன்ற பல வழிகளை மேற் கொள்ளுகின்றனர். 40/50 வருடம் முன்பு டாக்டர் படிப்புக்கு செல்பவர்கள் உண்மையில் மருத்துவ துறையில் ஈடுபாடும் இயற்கையான அறிவுக்கூர்மையும் உள்ளவர்களாக, சேவை மனப்பான்மை உள்ளவர்களாக இருந்தனர். இப்போது ஒருவரைக்கூட நாம் அந்த நிலையில் பார்க்க முடியவில்லை. இந்த லட்சணத்தில் மருத்துவபடிப்பு படித்து சாதிக்கப்போவதாக வெட்டித்தனமாக பேட்டியளிக்கும் பிளஸ் டூ வெற்றி பெற்ற மாணவமணிகள். இப்படி சாதிக்கப்போவதாக சொன்ன மாணவ மணிகளில் செய்து காட்டியவர்கள் யாருமில்லை


Pandi Muni
ஜூன் 08, 2025 15:50

நீட் இல்லேன்னா கோடிகள்ல சுருட்டுவானுங்கடா அப்பரன்டீஸு


Anantharaman Srinivasan
ஜூன் 07, 2025 17:24

டாக்டர் ரத்தினம் வயது 96. வயது மூப்பு காரணமா இயற்கை எய்திமிருக்கிறார். இதில் அதிர்ச்சியும், வேதனையும் அடைய என்னயிருக்கிறது.


SANKAR
ஜூன் 07, 2025 18:17

how many doctors work till 90 plus and charge only TEN RUPEES.? that is why his death causes shock and pain


vbs manian
ஜூன் 07, 2025 17:12

இந்த கலியுகத்தில் இப்படியும் மனிதர்கள்.


venkatan
ஜூன் 07, 2025 16:49

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்."


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை