உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிறிஸ்தவ மத துண்டு பிரசுரங்கள் வழங்கி அரசு மருத்துவமனையில் அத்துமீறல்

கிறிஸ்தவ மத துண்டு பிரசுரங்கள் வழங்கி அரசு மருத்துவமனையில் அத்துமீறல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

துாத்துக்குடி: அரசு மருத்துவமனைக்குள், நோயாளிகளுக்கு கிறிஸ்தவ மத துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் தினமும் 500க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாகவும், 200க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், மருத்துவமனை வளாகத்திலும், உள்நோயாளிகளிடமும் சிலர் மத பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்நிலையில், பெண் நோயாளிகள் பிரிவில் செவிலியர்கள் பணியில் இருக்கும்போதே இரு நபர்கள் கிறிஸ்தவ மதம் தொடர்பான வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.அவர்களிடம், 'என்ன புத்தகம் கொடுக்கிறீர்கள்' என கேள்வி எழுப்பும் நபரிடம், 'ஆண்டவர் இயேசு சுகம் கொடுக்கும் வாசகங்கள் இடம் பெற்ற புத்தகத்தை வழங்குகிறோம்' என தெரிவித்தார். 'கொடுத்த புத்தகங்களை திரும்ப வாங்குங்கள்' என, சிலர் எதிர்ப்பு தெரிவித்ததும், அவர்கள் அங்கிருந்து நைசாக நழுவி சென்றனர்.அரசு மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்து நோயாளிகளிடம் துண்டு பிரசுங்களை வினியோகம் செய்தவர்கள் மீதும், அவர்களை அனுமதித்த டாக்டர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹிந்து அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 49 )

Balakrishnan karuppannan
ஜூலை 09, 2025 09:06

கிறிஸ்துவ வியாபாரம்.. அவ்வளவு தான்.


S.V.Srinivasan
ஜூலை 08, 2025 15:08

திராவிட மாடல் ஆட்சியில் இதெல்லாம் சகஜம், மைனாரிட்டி வாக்கு வங்கிக்காக கண்டுக்க மாட்டாங்க.


raja
ஜூலை 06, 2025 08:29

கூவி கூவி விக்கப்படும் விலை போகாத சரக்கு .


Bhaskaran
ஜூலை 06, 2025 08:23

அந்த காலத்தில் பரமாச்சாரியார் கட்டளையின் பேரில் அரசு மருத்துவமனையில் நோயாளிகளாக உள்ளவர்களுக்கு விபூதி குங்குமம் கொடுத்திருக்காங்க வாங்குவதும் வாங்காததும் அவரவர் விருப்பம் வீண் பிரச்சனை வேண்டாம்


Kalyanaraman Andhukuru.R.
ஜூலை 05, 2025 15:20

செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் பல்லாண்டுகளாக இதுபோன்ற மதப்பிரச்சாரம் நடந்து கொண்டு இப்பொழுதும் இருக்கிறது.


kumar mba
ஜூலை 02, 2025 17:47

தமிழ் நாடு அரசு


James Michael
ஜூலை 01, 2025 22:54

Who is giving free medical treatment in Tamilnadu?


Nagarajan S
ஜூலை 01, 2025 19:35

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் இந்த கிருத்துவ மத பிரச்சார துண்டு பிரசுரம் வழங்கும் வழக்கம் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆனால் இப்போது இந்துக்கள் மற்றும் இந்து பாதுகாப்பு அமைப்புக்கள் விழித்துக்கொண்டு, இந்த மத பிரச்சாரத்தை தடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.


theruvasagan
ஜூலை 01, 2025 17:26

ஏதுக்கு குடுக்கறீங்கன்னு கேக்காம குடுக்கறதை வாங்கிக் கொண்டு ரொம்ப நன்றி. இதை வேறவிதமாக கூட யூஸ் பண்ணிக்கலாம் போல இருக்கேன்னு சொல்லிட்டா போச்சு. அவங்களுக்கும் அதுல ஒரு திருப்தி கிடைக்கும் இல்லையா


sridhar
ஜூலை 01, 2025 16:58

கூவி கூவி விக்கப்படும் விலை போகாத சரக்கு .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை