வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மநீமா க்கு எதுக்கு தனியா ஒரு சின்னம். அதான் கமல் திமுகவுடன் கட்சியை இணைத்து விட்டாரே? உதய சூரியன் போறுமே?
சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிட, ஆட்டோ சின்னம் கேட்டு த.வெ.க., 10 சின்னங்களின் பட்டியலில் இருந்து, ஒரு பொது சின்னத்தை ஒதுக்க வேண்டும் என, ம.நீ.ம., கட்சியும் மனு அளித்துள்ளனர். தமிழக சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் ஐந்து மாதங்களே உள்ள நிலையில், த.வெ.க., சார்பில் ஆட்டோ சின்னம் வழங்கக் கோரி, டில்லியில் உள்ள தேர்தல் கமிஷன் தலைமை அலுவலகத்தில், நேற்று விண்ணப்பம் அளிக்கப்பட்டது. வேட்டைக்காரன் படத்தில், விஜய் ஆட்டோ ஓட்டுநர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த ஆட்டோவில், 'வாழு, வாழவிடு' என்ற வசனம் இடம் பெற்றிருந்தது. ஆட்டோ சின்னம், எளிதாக மக்களை சென்றடையும் என்பதால், அந்த சின்னத்தை த.வெ.க .,வுக்கு விஜய் கேட்டுள்ளார். அதேபோல் ம.நீ.ம., கட்சிக்கு பொது சின்னம் ஒதுக்க கோரி, தேர்தல் கமிஷனில் மனு அளிக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலில், மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, பொது சின்னம் ஒதுக்க வேண்டும் என கேட்டுள்ளதாக, அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மநீமா க்கு எதுக்கு தனியா ஒரு சின்னம். அதான் கமல் திமுகவுடன் கட்சியை இணைத்து விட்டாரே? உதய சூரியன் போறுமே?