உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெள்ளை காகிதத்தை காட்டிய டிஆர்பி ராஜா: கொந்தளித்த இபிஎஸ்

வெள்ளை காகிதத்தை காட்டிய டிஆர்பி ராஜா: கொந்தளித்த இபிஎஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வேடசந்தூர் : '' முதலீடு குறித்து வெள்ளி அறிக்கை கேட்டால் அமைச்சர் டிஆர்பி ராஜா வெள்ளை காகிதத்தை காட்டுகிறார். திமுக ஆட்சி வெற்று விளம்பர ஆட்சி என்பதை வெள்ளை காகிதத்தை காட்டி அவர் நிரூபித்துவிட்டார்,'' என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறியுள்ளார்.'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயணத்தில் வேடசந்தூரில் இபிஎஸ் பேசியதாவது: திமுக ஆட்சியில் அரசு பள்ளியில் சேரும் மாணவர்கள் சேர்க்கை குறைந்துவிட்டது, அரசுப் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. யாரும் திமுக ஆட்சியில் நியமிக்கப்படவில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1.5 லட்சம் ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று அண்மையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால்1.5 லட்சம் ஆசிரியர்கள் மன உளைச்சலில் உள்ளனர். அவர்களுக்கு அரசு என்ன செய்யப்போகிறது என்று சொல்லவில்லை. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wkr0rp5w&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தொழில் துறை அமைச்சர், ஒரு வெள்ளை காகிதத்தைக் காட்டி இதுதான் வெள்ளை அறிக்கை என்கிறார். எவ்வளவு ஏத்தம் இருந்தால் இப்படிப் பேசுவார்..? நாட்டில் பல லட்சம் பேர் வேலையில்லாமல் சிரமப்படுகிறார்கள். இந்த 52 மாத ஆட்சியில் 922 ஒப்பந்தங்கள் போடப்பட்டதாகவும், 10.5 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டதாகவும், 32 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் 75% ஒப்பந்தங்கள் முடிந்துவிட்டதாகவும் ஸ்டாலின் சொன்னார். இதற்கு முதல்வர் ஸ்டாலினும், டி.ஆர்.பி.ராஜாவும் தான் விளக்கம் கொடுக்க வேண்டும். 922 ஒப்பந்தங்கள் போடப்பட்டது என்று சொன்னால், அதில் 75% நிறைவேற்றப்பட்டது என்று சொன்னால் சுமார் 25 லட்சம் பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும். இத்தொகுதியில் எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது? 10.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு வந்ததாகச் சொன்னதற்கு வெள்ளை அறிக்கை கேட்டேன். தொழிலின் நிலை என்ன? எவ்வளவு பேருக்கு வேலை கிடைத்தது என்று விளக்கம் கேட்டால்,டிஆர்பி ராஜா வெள்ளை காகிதத்தை காட்டுகிறார். உங்களுடைய ஆட்சி வெற்று விளம்பர ஆட்சி என்பதை வெள்ளை காகிதத்தைக் காட்டி நிரூபித்துவிட்டீர்கள். சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும். அங்கு ஒன்றுமே இல்லை. எனவே வெள்ளை காகிதத்தைத் தான் காட்டியாக வேண்டும். இந்த ஆட்சியில் அத்தனையும் பொய், பொய் தவிர்த்து வேறு ஒன்றுமேயில்லை. இவ்வாறு இபிஎஸ் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

saravanan
செப் 26, 2025 08:18

ஆக, ஆளும் கட்சி அமைச்சரே பகிரங்கமாக ஒத்துக் கொண்டிருக்கிறார் தங்களுடைய நான்கரை ஆண்டுகால ஆட்சியின் சாதனைகள் என்ன என்பதை


VENKATASUBRAMANIAN
செப் 26, 2025 08:01

இதுதான் திராவிட மாடல் என்று கூறுகிறார். ஒன்றுமே இல்லை என்கிறார். மக்கள் வரிப்பணத்தில் குடும்பத்துடன் சுற்றுலா சென்றது மட்டுமே. மக்கள் புரிந்து கொண்டால் சரி


D Natarajan
செப் 26, 2025 04:59

சாராய வியாபாரிக்கு CCC மட்டும் தான் தெரியும். படித்த அறிவிலிகளுக்கு ஏகப்பட்ட தலைக்கனம் . 2026 ஒன்று தான் பாடம் புகட்ட ஒரே வழி . தமிழக மக்களே விலை போகாதீர்


Kasimani Baskaran
செப் 26, 2025 04:09

சாமர்த்தியமாக எதையும் பேசி சமாளிப்பது திறமை தீம்க்காவினர்களுக்கு கைவந்த கலை. இதற்க்கு பிரதானமாக மங்குனி பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஓட்டுக்கு பணம் வாங்குபவர்கள் முன்னால் அமர்ந்து இருப்பது முக்கியம்.


pakalavan
செப் 26, 2025 01:07

பாஜக கட்சிக்கு சேவை செ ய்கிறார்கள்


M Ramachandran
செப் 26, 2025 00:08

10.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு என்பது திமுக தலை குடும்பத்திற்கு வந்த நன்கொடை. நீஙக தவறாக புரிந்து கொண்டால் நாங்க எப்படி பொறுப்பாக முடியும். இதற்கெல்லாம் வெள்ளை வெளிவராது. அவசிய மான நேரத்தில் வெளியிடுவோம். திராவிட கும்பல் நேர்மைய்யக்கும் மைக்கும் அவர்களுக்கும் காத தூரம் இல்லை இல்லை இன்பினிட்டி Infinity .


pakalavan
செப் 25, 2025 22:23

நீங்க வெள்ளை கொடி காட்டி,சேவகம் பண்ணுனீங்களே மங்குனியாரே....


சிட்டுக்குருவி
செப் 25, 2025 22:18

தமிழக பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துவிட்டதற்கு காரணம் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பள்ளிக்கட்டடத்தின் மீது நம்பிக்கையின்மையே. திராவிடங்களில் கட்டிய கட்டிடங்கள் எப்போது இடிந்து விழும் என்று தெரியாது . அதனால் தனியார்பள்ளிகளின்மீது நம்பிக்கைவைத்து அங்கு சேர்கின்றார்கள் . இப்போதும் கர்ம வீரர் காமராஜர் காலத்தில் கட்டிய கட்டிடங்கள் கம்பீராமாக நின்று மக்களின் நம்ம்பிக்கையை பெற்றுகின்றன .


V Venkatachalam
செப் 25, 2025 22:11

இ சி எஸ் மீது ரூ 100 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு போடாத வரை சரி.


ஓவியா விஜய்
செப் 25, 2025 21:44

உங்களுக்குக் கூடும் கூட்டத்தைப் பார்க்கும் போது அதற்காக நீங்கள் செலவு செய்யும் பணத்தைக் கணக்கிடும் போது நம் எண்ணங்களில் தோன்றுவது என்னவென்றால்... அவ்வளவு கொள்ளை அடிச்சு வெச்சிருக்கீங்களா ஐயா... இம்புட்டு செலவு பண்ணி கூட்டத்தை சேர்க்குறீங்க...


புதிய வீடியோ