உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிகரித்து வரும் காசநோய் பாதிப்பு; 2025க்குள் கட்டுப்படுத்துவது சிரமம்

அதிகரித்து வரும் காசநோய் பாதிப்பு; 2025க்குள் கட்டுப்படுத்துவது சிரமம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : 'தமிழகத்தில், காசநோய் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், இலக்கு நிர்ணயிக்கப்பட்ட, 2025ம் ஆண்டுக்குள், அதை கட்டுப்படுத்துவது சிரமம்' என, மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.காசநோயை முழுமையாக ஒழிக்க, மத்திய, மாநில அரசுகள், பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. இந்தியாவில், 2030ம் ஆண்டுக்குள், காசநோயை ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தமிழகத்தில், 2025ம் ஆண்டுக்குள், காசநோயை கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதிகாரிகள் செயலாற்றி வந்தனர்.காசநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்; நோய் பாதிப்பை ஆரம்ப நிலையில் கண்டறிதல்; தொற்று ஏற்படாமல் தடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் பயனாக, காசநோயால் பாதிக்கப்படுவோரில், 84 சதவீதம் பேர், முதல் சிகிச்சையிலேயே குணமடைந்து விடுகின்றனர். மீதமுள்ள, 16 சதவீதம் பேர் தொடர் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில், 5.8 சதவீதம் பேர் உயிரிழப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.இந்நிலையில், காசநோய் பாதிப்பு தொடர்ந்து வருவதால், நிர்ணயித்தபடி இந்த ஆண்டுக்குள் அதை கட்டுப்படுத்துவது சிரமம் என, மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இது குறித்து, அவர்கள் கூறியதாவது: காசநோயால் ஆண்டுக்கு, 80,000 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை விட, தமிழகத்தில் பாதிப்பு குறைவு. ஆனால், நிர்ணயிக்கப்பட்ட இலக்குக்குள், காசநோயை கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது. கடந்த மூன்று மாதங்களிலேயே, 25,000க்கும் மேற்பட்ட காசநோயாளிகள் கண்டறியப்பட்டு உள்ளனர். பாதிக்கப்படும் நோயாளிகளை கண்டறிவதன் வாயிலாக, மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும்.எனவே தான், ஒவ்வொரு பகுதியாக சென்று, பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஒரு சில ஆண்டுகளில், காசநோயை கட்டுப்படுத்திய மாநிலம் என்ற பெருமையை தமிழகம் பெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

KRISHNAN R
ஏப் 16, 2025 10:08

முக்கிய காரணம்.. உணவில்லாமல்... சத்து குறைவு தான்


J.Isaac
ஏப் 16, 2025 11:01

உணவிற்காக பிழைப்பு தேடி தானே உ.பி, பீகார், ஒடிசாவில் இருந்து தமிழ் நாடு வருகிறார்கள்


Barakat Ali
ஏப் 16, 2025 13:17

[உணவிற்காக பிழைப்பு தேடி தானே உ.பி, பீகார், ஒடிசாவில் இருந்து தமிழ் நாடு வருகிறார்கள்] ..... அங்கிருந்து தமிழ்நாடு வருபவர்கள் கல்வித்தகுதியில் குறைந்தவர்கள் .... அதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை ..... தமிழ்நாட்டில் இருந்து வடநாடு செல்பவர்கள் படித்து வேலைக்கு அங்கே செல்கிறார்கள் .... அது தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு ..... முதலீடுகளை ஊக்குவித்து வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்யாத தமிழ்நாட்டு அரசுக்குத் தலைகுனிவு ..... இந்த அடிப்படையை கழகக் கொத்தடிமைகள் என்று உணர்வார்கள் ????


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 16, 2025 09:21

தமிழகம் இந்த விஷயத்தில் முன்னேறியிருப்பினும் அதற்குக்காரணம் மக்களுக்கே ஏற்பட்ட ஒரு விழிப்புணர்வே ....


Kumar
ஏப் 16, 2025 07:24

மேற்கு வங்கத்தில் காச நோயே இல்லையா?


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 16, 2025 09:22

உண்டு .... அதுவும் பின்தங்கிய மாநிலம்தான் .... ஆனால் சில அம்சங்களில் தமிழகத்தை விட முன்னேறிய மாநிலம் .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை