உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / த.வெ.க.வில் இணைந்த முதல் நாளில் திருமாவை சந்தித்த ஆதவ்!

த.வெ.க.வில் இணைந்த முதல் நாளில் திருமாவை சந்தித்த ஆதவ்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: த.வெ.க.,வில் சேர்ந்த முதல் நாளில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை ஆதவ் அர்ஜூனா சந்தித்து பேசியிருப்பது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜூனா, பின்னர் அக்கட்சியில் இருந்து விலகினார். தமது அரசியல் பயணம் தொடரும் என்றும் அறிவித்து இருந்தார்.இந் நிலையில், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று (ஜன.31) ஆதவ் அர்ஜூனா தம்மை முறைப்படி இணைத்துக் கொண்டார். அவருக்கு கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.த.வெ.க.,வில் இணைந்த முதல் நாளில், அவர் திருமாவளவனை சந்தித்து பேசி உள்ளார். சென்னையில் உள்ள விடுதலை சிறுத்தைகள் அலுவலகத்தில் திருமாவளவனை சந்தித்தார். அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தை பெற்றுக் கொண்ட ஆதவ் அர்ஜூனா, புத்தகம் ஒன்றையும், ஈ.வெ.ரா., அம்பேத்கர் ஒன்றாக இருக்கும் சிலையையும் பரிசாக அளித்தார்.சந்திப்பு குறித்து இருவரும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். திருமாவளவன் கூறியதாவது; எங்களின் சந்திப்பில் அரசியல் கணக்கு இல்லை. ஈ.வெ.ரா., தேவை இன்றியமையாத ஒன்றாக இருப்பதாக என்னிடம் கூறி ஆதவ் அர்ஜூனா ஆசி பெற்றார் என்று கூறினார்.ஆதவ் அர்ஜூனா பேசுகையில், அண்ணனை சந்தித்து ஆசி பெற வந்திருக்கிறேன். த.வெ.க., விடுதலை சிறுத்தைகள் எதிர் எதிர் துருவங்கள் இல்லை. கொள்கை ரீதியானவற்றை திருமாவளவனிடம் கற்றேன். எனக்கு ஆசான் அவர்தான். எனக்கும், அவருக்கும் கொள்கை ரீதியான மாறுபாடு இல்லை என்றார்.த.வெ.க.வில் இணைந்த நிலையில் திருமாவளவனை நேரில் சந்தித்து ஆதவ் அர்ஜூனா வாழ்த்து பெற்ற இந்த நிகழ்வு, தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Bhaskaran
பிப் 01, 2025 10:23

இது குருமா வின் பிளான் ஆனால் திராவிடம் தன்பணபலத்தால் இவர்களை ஒன்றுமில்லாமல் செய்யும் விஜய் மண்ணை கவ்வுவார்


Karthik
பிப் 01, 2025 09:49

என்ன"மா" கண்ணு சவுக்கியமா? னு கேட்டேன்.. அதற்கு ஆமாம் ஆமாம் கண்ணு சவுக்கியந்தா னு சொன்னார்.. அவ்வளோ தான் - வேறோண்ணுமில்ல..


பேசும் தமிழன்
பிப் 01, 2025 09:07

திருட்டு மாடல் ஆட்களுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது இருக்குமே ???


Kasimani Baskaran
பிப் 01, 2025 08:50

பணத்தை வைத்து சிறு சிறு காட்சிகளை உடைத்து தலைமை கழகத்துடன் இணைக்க ஒப்பந்தம் போட்டு தீயாய் வேலை செய்றாப்ல..


Mani . V
பிப் 01, 2025 05:48

உன்கிட்ட வாங்கின காசுக்கு தென்னை மரத்துல ஒரு குத்து. அவருகிட்ட வாங்கின காசுக்கு ஏணி சின்னத்துல ஒரு குத்து.


ngopalsami
பிப் 01, 2025 02:29

விஜய் ஒரு தவறு செய்துவிட்டார் என்று தோன்றுகிறது. ஆதவை தன் கட்சியில் சேர்த்துக்கொண்டது வேண்டாத வேலை. விஜய்க்கு நல்ல அரசியல் ஆலோசகர்கள் தேவை.


இராம தாசன்
பிப் 01, 2025 01:10

எல்லோரும் ஜோரா கை தட்டுங்க -


பாலா
ஜன 31, 2025 23:58

இந்தத் தெலுங்குக் கும்பல்கள் சந்தித்திருப்பது பார்த்து திருட்டுத் திராவிடியச் சுடலைக்கு வயிற்றோட்டம் தொடங்கிவிட்டதாகச் செய்திகள்.


theruvasagan
ஜன 31, 2025 22:10

குரங்கு முதல்ல தன் குட்டிய விட்டு வேவு பார்க்குமாம். ஏதோ ஒரு பிளானோடதான் அலையறாங்க.


கல்யாணராமன்
ஜன 31, 2025 21:55

விஜய் கட்சிக்கு தேர்தல் கூட்டணி அட்வான்ஸ் புக்கிங் பண்ண வந்துள்ளார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை