உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜய் அறிக்கை வினியோகம்: த.வெ.க., ஆனந்த் கைதாகி விடுதலை!

விஜய் அறிக்கை வினியோகம்: த.வெ.க., ஆனந்த் கைதாகி விடுதலை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; சென்னையில் த.வெ.க., பொதுச்செயலாளர் ஆனந்தை போலீசார் கைது செய்தனர். சிறிது நேரத்துக்கு பிறகு விடுவித்தனர்.சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து த.வெ.க., தலைவர் நடிகர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த கடிதத்தை அவர் தமது கையால் எழுதி இருந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=m10pqmid&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அறிக்கையை ஒரு பக்கம் வெளியிட்ட நடிகர் விஜய், பின்னர் கவர்னர் ரவியை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். இந் நிலையில், விஜய் கடிதத்தை நகல் எடுத்த அக்கட்சி நிர்வாகிகள், அதை பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய ஆரம்பித்தனர். பூக்கடை பகுதியில் உள்ள மகளிர் கல்லூரி வளாகம் வெளியே மாணவிகள், பெண்கள் உள்ளிட்டோருக்கு விநியோகித்தனர். அப்போது அங்கு வந்த போலீசார் இதுபோல் வழங்கக்கூடாது என்று தடுத்ததாக தெரிகிறது. ஆனாலும் த.வெ.க.,வினர் அதை கேளாமல் கடித நகல்களை விநியோகித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார் தியாகராய நகரில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் அங்கு வந்துள்ளார். அனைவரையும் விடுவிக்குமாறு அவர் போலீசாரிடம் கூற, அதை அவர்கள் ஏற்கவில்லை. இதை தொடர்ந்து, அனுமதி பெறாமல் கூடியதாக ஆனந்த் மற்றும் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். சிறிது நேரத்துக்கு போலீசார் அனைவரையும் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

VENKATASUBRAMANIAN
டிச 31, 2024 07:32

இவரை கைது செய்து பெரியார் ஆளாக ஆக்கிவிட்டார்கள்.


T.sthivinayagam
டிச 31, 2024 07:24

உண்மையான சகோதரன் சகோதரியின் வன்கொடுமையை வைத்து அரசியல் செய்ய மாட்டான்


ghee
டிச 31, 2024 07:42

உண்மை சகோதரன் பழி தீர்பான் என்று மக்கள் கூறின்றனர்


Rpalni
டிச 31, 2024 05:54

கேரவன் தலைவரின் உண்மையான சந்திப்பின் விவரம் வெளியிட்டால் நல்லது "கவர்னரண்ணா அண்ணா பல்கலையில் ஏதோ பிரச்சனைன்னு கேள்விப்பட்டேன். அது உண்மையங்கண்ணா"


Mani . V
டிச 31, 2024 05:54

எங்களை எதிர்த்து யார் அரசியல் செய்தாலும், பேசினாலும் கைதுதான். வடிவேல் காமெடி மாதிரி "தாக்கள்தான்"


Tamil Inban
டிச 30, 2024 22:48

தவெகா கட்சிக்கு தமிழ்நாட்டுல ஒருத்தருக்குகூடவா தகுதி இல்ல பொதுசெயலாளராக, பாண்டிச்சேரியிலிருந்து கொண்டுவந்து போட்டிருக்காரே


theruvasagan
டிச 30, 2024 21:26

தப்பு செஞ்சவனுகளை விட்டுவிட்டு மத்தவங்களை கைது செய்வதில் மாடல் அரசு போலிசு துறை தீயா வேலை செய்யுது.


M Ramachandran
டிச 30, 2024 19:56

நடிகர் விஜய் பொறுமை காக்க வேன்டும். கொஞ்ச காலம் அரசியலில் நுழைந்தவுடன் பதவிக்கு வாரா ஆசை படக்கூடாது. வென்று பதிவியில் அமர்ந்ததால் அமைச்சரவை அமைக்கும் போது அனுபவம் இல்லாதவர்கள் அமைச்சர் அனால் அது ஆபத்தில் கொண்டு விடும். ஆரம்பித்த வேகத்தில் கட்சி காணாமல் போய் விடும். அனுபவ மிக்கவர்கள் அடுத்த கட்சியிலிருந்து வரலாம் ஆனால் அதுவும் ஆபத்தாகிவிடும்.


Natarajan Ramanathan
டிச 30, 2024 19:02

இந்த அறிக்கையை நாளை வெளியிடும் பத்திரிக்கை ஆசிரியர்களை எல்லாம் கைது செய்வார்களா?


Natarajan Ramanathan
டிச 30, 2024 19:01

அறிக்கை விநியோகம் செய்பவர்களை எல்லாம் கைது செய்யும் இந்த நாசகார அரசு ஏன் கோவில் வாசலில் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்யும் கிறிஸ்தவர்களை கைது செய்வதே இல்லை?


Constitutional Goons
டிச 30, 2024 18:59

கற்பனை கதைகளை மக்களிடம் பரப்புவது சட்டப்படி குற்றம். அரசியல் என்பது சினிமா அல்ல. அனைத்திற்கும் முன் அனுமதி பெறவேண்டும். நீதிமன்றத்தில் உள்ள சில அரசியல் ஏஜெண்டுகளை நம்பி ஏமாறவேண்டாம்


Rpalni
டிச 30, 2024 20:36

த்ரவிஷ கும்பலின் சிலையை திருக்கோவில் முன்னால் வைக்கலாமா? மஸ்ஜித், சர்ச் முன்னால் ஏன் வைக்கவில்லை?


புதிய வீடியோ