உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அறிமுகமான ஒரே நாளில் ஆரம்பமானது அக்கப்போர்; த.வெ.க., கொடிக்கு எதிராக போலீசில் புகார்!

அறிமுகமான ஒரே நாளில் ஆரம்பமானது அக்கப்போர்; த.வெ.க., கொடிக்கு எதிராக போலீசில் புகார்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நடிகர் விஜய், தன் கட்சிக் கொடியை அறிமுகம் செய்த ஒரே நாளில், அடுத்தடுத்து அக்கப்போராக வந்து கொண்டிருக்கிறது. இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒருவர் புகார் அளித்துள்ளார்.நேற்யை தினம் தமிழகம் முழுவதும் உள்ள நடிகர் விஜய் ரசிகர்களுக்கு ஏகப்பட்ட கொண்டாட்டம். அரசியலில் இறங்கப் போவது உறுதி நடிகர் விஜய் அறிவித்து, சொன்னபடி கட்சிக்கான கொடியை அறிமுகப்படுத்தியதே காரணம். கட்சிக் கொடிக்காக கடந்த சில நாட்களுக்கு முன்னரே ரிகர்சல் செய்து தயாரானார் நடிகர் விஜய். அப்போது பறந்த மஞ்சள் வண்ணக்கொடியைத் தான் கட்சிக்கான கொடி என்று ரசிகர்கள் எண்ணிக்கொண்டு இருக்க, டுவிஸ்ட்டாக, மஞ்சள், அடர்சிவப்பு நிறத்தில் கொடியை அறிமுகப்படுத்தி தமிழக அரசியல் களத்தை அதகளப்படுத்தினார். கட்சிக்கொடி அறிமுகம், நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்து, தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., உள்ளிட்ட பல கட்சிகள் தங்கள் கருத்துகளை பதிவிட்டுள்ளன. அதிலும் குறிப்பாக, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் குசம்பான ரியாக்ஷன் வேற லெவலில் உள்ளது.வேலூரில் செய்தியாளர்கள் நடிகர் விஜய் தனது கட்சிக் கொடி அறிமுகப்படுத்தி இருப்பதை எப்படி பார்க்கிறீர்கள் என்று அவரிடம் கேள்வியாக முன் வைத்தனர். அதைக் கேட்ட அவரும், பறக்கும் போது பார்ப்பேன் என்று கூறி கலகலக்க வைத்தார்.கட்சிக்கொடியை அறிமுகப்படுத்தி 24 மணி நேரம் கூட ஆகவில்லை... அதில் உள்ள யானை சின்னத்தை கண்டு, பகுஜன் சமாஜ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்தை நாடி இருக்கிறது. சமூக ஆர்வலர் ஒருவரும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்து பரபரப்பைக் கூட்டி இருக்கிறார். இல்லை... அது ஸ்பெயின் நாட்டுக் கொடி, காப்பி அடித்துள்ளார் என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் ரவுண்டு கட்டி விமர்சித்தும் வருகின்றனர். இதுபோதாது என்று, விடுதலைப்புலிகள் இயக்கத்தால் தமிழீழத்தின் தேசிய மரமாக அறிவிக்கப்பட்ட வாகை பூவை பயன்படுத்தி இருப்பதாக ஒரு புது குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. அது வாகை மலர் அல்ல, தூங்குமூஞ்சி மரத்தின் பூ என்று நெட்டிசன்கள் காமெடி கிளப்பி வருகின்றனர். இப்படி கட்சிக் கொடி அறிமுகப்படுத்திய 24 மணி நேரத்துக்குள் குபீர், குபீர் என்று சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது நடிகர் விஜய் தரப்புக்கும், ரசிகர்கள் தரப்புக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்திருப்பதாக தெரிகிறது.இப்படிப்பட்ட சூழலில், கட்சிக் கொடி விவகாரத்தில் அடுத்த என்ன செய்யலாம் என தமிழக வெற்றிக் கழகம் புதிய முடிவு எடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி யானை சின்னம் குறித்து, தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டால் பதில் அளித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஒரு நாள் கூட ஆகவில்லை, அதற்குள் கொடி மீதான விமர்சனத்தை நடிகர் விஜய் தரப்பு ரசிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. எது எப்படி இருந்தாலும், அனைத்தையும் அவர் எதிர்கொள்வார் என்று நம்பிக்கை வரிகளை கூறி வருகின்றனர் நடிகர் விஜய் ரசிகர்கள்...!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

SENTHILKUMAR
ஆக 24, 2024 15:41

நன்று


SENTHILKUMAR
ஆக 24, 2024 15:39

புதிய நபர்கள் புதுவாசல் வழியாக அரசியல் களம் காணவேண்டிய காலம். தேவையான ஒன்று. அடிமட்ட பதவியில் இருந்து அனைத்திற்கும் புதிய தலைவர்களும் தொண்டர்களும் தேவை. பழைய ஆட்களை காணாமல் செல்ல பதிய நவீன முறைகளை கையாளவேண்டும். வெளிப்படை தன்மையான அரசியல் மட்டுமே பழயை ஆட்களை துரத்தும்.


Sivakumar J
ஆக 24, 2024 10:10

இதுவும் ஒரு வகையில் கட்சிக்கு விளம்பரம் தான்.


Mr Krish Tamilnadu
ஆக 23, 2024 22:00

மக்கள் தொண்டுக்கும் மகிழ்விக்கும் தொண்டுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. ப்ரிடம், தனிமை மக்கள் தொண்டில் நிச்சயமாக இருக்காது. ஆசைக்கள் அரசை நடத்தி விடாது. ஒவ்வொரு செயலுக்கும் 360 டிகிரியில் அம்புகள் வரும். இதை எல்லாம் புரிந்து கொண்டாரா? என தெரியவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மக்கள் பிரச்சனையாக அவர் எதை கருதுகிறாரோ, கட்சி தலைவராகவே சந்தித்து, அரசு இயந்திரங்கள் மூலமே சாதாரண மனிதனாகவே தீர்க்க முயல வேண்டும். மக்கள் தொண்டு தான் அவர் எண்ணம் என்றால், அவருக்கு புரியும்படி எனில் சிவாஜி படம் போல் தனி அரசாங்கமே நடத்தி காட்ட வேண்டும். அப்போது தான் இவரின் செயல் திறன் மக்களுக்கு தெரியும். தற்போதைய அரசின் குறைகளை கூறாமல் தலைவர்கள் தோன்றுவது இல்லை.


Ramesh Sargam
ஆக 23, 2024 20:50

எனக்கு என்னமோ விஜய் தன்னுடைய கட்சிக்கு விளம்பரம் அதிகம் கிடைக்கவேண்டும் என்பதற்காகவே இப்படி செய்கிறாரா என்று தோன்றுகிறது. முதலில் கட்சியின் பெயரில் பிரச்சினை. இப்பொழுது கட்சி கொடி அறிமுகம் செய்வதில் பிரச்சினை. அடுத்து எதில் பிரச்சினை செய்து விளம்பரம் தேடப்போகிறாரோ...?


V.Pitchai Pitchai
ஆக 23, 2024 18:11

விஜய்க்கு வேண்டாத வேலை.எது எப்படியோ சினிமாவில் சம்பாதித்த கருப்பு பணத்தை வாரி இறைத்து விட்டு கடைசியில் திரும்பவும் சினிமா சான்ஸ் தேடி செல்ல வேண்டியதுதான்.ரசிகர்களும் திருந்தியபாடு இல்லை.அவர் ஒரு சினிமா நடிகர் அவர் தொழிலை அவர் செய்து கோடிக்கணக்கான பணத்தை சம்பாதிக்கிறார்.நாம் நம்முடைய தொழிலை செய்து பெற்றார் மனைவி மற்றும் மக்களுடன் சந்தோசமாக இருப்பதை விட்டு கட்டிடங்களுக்கு பால் அபிசேகம் செய்வது அவசியமா.


Rajesh Ravarari
ஆக 25, 2024 12:07

நீ மூடிக்கிட்டு உன் வேலையை பாரு


Jysenn
ஆக 23, 2024 18:10

Why they are creating such a hullabaloo over a flag which is soon set to go into the dustbin?


Rengaraj
ஆக 23, 2024 17:23

அரசியலுக்கு புதியவர்களின் வருகையை வரவேற்க வேண்டும். அதுதான் உண்மையான ஜனநாயகம். சாமான்யன் ஏழை பங்காளன் உங்களில் ஒருவன் , என்று பாட்டுப்பாடி சினிமாவில் குரல் கொடுத்தவர்கள் நிஜவாழ்வில் அதேபோன்று போராட்ட குணத்தை கொண்டிருக்கவேண்டும். திரை உலக அரசியல் வேறு. ஆட்சி , கட்சி அரசியல் வேறு . இரண்டையும் ஒன்றாக பார்க்கக்கூடாது. பார்க்கமுடியாது. இங்கு கள யதார்த்தம் வேறு. இதை புரிந்தவர்கள் மட்டுமே ஜெயிக்க முடியும். இது நாள் வரை அவர் மக்களுக்காக தெருவில் இறங்கி போராடவில்லை என்றாலும் அவர் தற்போது யாரை எதிர்த்து அரசியல் செய்யப்போகிறார் என்பதை சாமான்யன் புரிந்துகொள்ளும்படியாக விளக்கவேண்டும். ரசிகர்களால் செய்யப்பட்ட நலத்திட்ட பணிகள் என்பன வேறு. மற்ற அரசியல் கட்சியினரிடமிருந்து வேறுபட்டு தனது கட்சியின் அரசியல் தொண்டர்களாக அந்த ரசிகர்கள் இனிமேல் என்ன செய்யவேண்டும் என்று இவர் தெளிவாக விளக்கினால் மட்டுமே தனக்கு என்று ஒரு வாக்கு வங்கியை உருவாக்கமுடியும். மக்களை ஏமாற்றும் எந்த ஒரு அரசியல் கட்சியும் நீண்ட நாட்கள் நிலைத்ததாக சரித்திரம் இல்லை.


Suppan
ஆக 23, 2024 16:50

அது இந்திய / ஆசிய யானை அல்ல. ஆப்பிரிக்க யானை. காதுகளைப்பாருங்கள். இப்படியா ஒருவர் மோசமான கொடியை வடிவமைக்க வேண்டும் ?.


Barakat Ali
ஆக 23, 2024 16:23

தெரிந்தே, வேண்டுமென்றே அறிமுகப்படுத்தப்பட்ட கொடி .....


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி