உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஞானசேகரன் வழக்கில் பச்சை பொய் கூறும் முதல்வர்: நடிகர் விஜய் காட்டம்

ஞானசேகரன் வழக்கில் பச்சை பொய் கூறும் முதல்வர்: நடிகர் விஜய் காட்டம்

சென்னை ; ஞானசேகரன் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதற்குத் தமிழக காவல் துறை தான் காரணம் என்று மனசாட்சியின்றி பச்சைப் பொய்யை தி.மு.க., தலைவர் கூறி சுயதம்பட்டம் அடித்துக் கொள்கிறார் என்று த.வெ.க., தலைவர் நடிகர் விஜய் கூறி உள்ளார்.இதுகுறித்து அவரது அறிக்கை;https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=17ljjey6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அண்ணா பல்கலைக்கழக மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தி.மு.க. நிர்வாகியான ஞானசேகரன் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதைத் தமிழக வெற்றிக் கழகம் வரவேற்கிறது. இவ்வழக்கில் தமிழக அரசின் நிர்வாகத் தோல்வியை மறைப்பதற்காகத் தி.மு.க.வினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இது தொடர்பாக நான் ஆளுநரைச் சந்தித்து, பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும், குற்றவாளிக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்றும் கோரிக்கை மனுவை வழங்கினேன்.பல்வேறு அரசியல் கட்சிகளின் போராட்டங்களைத் தொடர்ந்து, சென்னை ஐகோர்ட் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணை நடத்தியது. அப்போது, முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்படும் காவல் துறையின் தவறால் முதல் தகவல் அறிக்கை வெளியாகி, பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக, அவருக்கு இடைக்கால இழப்பீடாக ரூ.25 லட்சத்தைத் தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும், அலட்சியமாகச் செயல்பட்ட காவல் துறை அதிகாரிகளிடம் இருந்தே இந்தத் தொகையை வசூலித்துக் கொள்ளலாம் என்றும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது என்பதை மக்கள் மறக்கவில்லை.தொடர்ந்து இவ்வழக்கைத் துரிதமாக விசாரிக்க, டிசம்பர் 28ம் தேதி சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன் பிறகே ஜனவரி 5ம் தேதி ஞானசேகரன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் பிப்ரவரி 24ம் தேதி ஞானசேகரனுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.சென்னை, ஐகோர்ட்டின் நேரடிக் கண்காணிப்பில் விசாரணை நடைபெற்றதால் மட்டுமே இந்த வழக்கு விரைவாக நடத்தப்பட்டு, தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதற்காகச் சென்னை ஐகோர்ட்டுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.இந்த வழக்கில் குற்றவாளி என்று மகளிர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும், இந்த வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.முதல்வர் ஸ்டாலினின் நிர்வாகத் தோல்வியின் காரணமாகச் சென்னை ஐகோர்ட் தாமாக முன்வந்து இவ்வழக்கை துரிதப்படுத்தியதால் தான், 5 மாதங்களில் தீர்ப்பு வந்துள்ளது. ஆனால் இவற்றையெல்லாம் மறைத்து, தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டதற்குத் தமிழக காவல் துறை தான் காரணம் என்று மனசாட்சியின்றிப் பச்சைப் பொய்யை தி.மு.க., தலைவர் கூறி சுயதம்பட்டம் அடித்துக்கொள்கிறார் என்பதை அனைவரும் அறிவர்.சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியாமல், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கத் தவறிய, செயல் திறன் அற்ற அவல ஆட்சி இது. இந்தக் கொடுமைகளுக்காகத் தமிழக மக்கள் இன்னும் 10 மாதங்களில் தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்பி வைப்பது உறுதி என்பதை நீதியின் பக்கம் நின்று, நெஞ்சுறுதி மிக்க மகளிர் பக்கம் நின்று தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Dr.C.S.Rangarajan
மே 29, 2025 00:48

பொய்ச்சொல்ல கூடாது பாப்பா என மஹாகவி பாரதியார் குழந்தைக்கு சொன்னதேதனால்? குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்றாலும் குழந்தை பருவ வயதில் மனதில் பதிவது ஆழ்மனதில் பசுமரத்தாணி போல் பதியும். ஒரு ஆங்கில கவிஞன் சொன்னான் குழந்தை மனிதனின் தகப்பன் என்று Child is the father of man. மற்றும் ஒரு கவிஞன் குழந்தை பருவம் மனிதனை காண்பிக்கிறது, காலை நேரம் அந்த நாளை காண்பிப்பதுபோல்.Childhood shows the man as morning shows the day. பொய்யிலேயே பிறந்து பொய்யிலே வளர்வதுதான் மெய்யோ?


Dr.C.S.Rangarajan
மே 29, 2025 00:35

யாருக்கு யார் துணை? நீதிமன்றத்திற்கு அரசு துணையா அல்லது மாற்றாக அரசுக்கு நீதிமன்றம் துணையா? யார் யாருக்கு துணை நின்றாலும் நீதி துணை இன்றி அனாதையாக போவதால் சமூகம் முன்னோக்கி செல்கிறதா அன்றி சமூகம் பின்னோக்கி பயணித்தால் பயனோ, பாதிப்போ யாருக்கு?


ஆரூர் ரங்
மே 28, 2025 22:08

ஜுன் 2 தண்டனை அறிவிப்பு. அடுத்தநாளே கட்டுமரம் பிறந்ததின கருணையால் விடுதலையும் விடியலின் விருந்தும் தொடரும்.


முருகன்
மே 29, 2025 06:30

உமக்கு கற்பனை திறன் அதிகமாக உள்ளது


Ramesh Sargam
மே 28, 2025 20:45

பாகிஸ்தான் அனுப்பும் டிரோனைக்கூட தடுத்து நிறுத்தலாம், அழிக்கலாம். ஆனால் முதல்வர் ஸ்டாலின் வாயில் இருந்து வரும் பொய்யை தடுக்கவே முடியாது.


Kjp
மே 28, 2025 19:58

முதல்வர் ஏன் இப்படி பொய் சொல்கிறார்.பொய் சொல்வதில் நூறு மார்க் வாங்கி முதலிடத்தில் இருக்கிறார்.கோர்ட் தாமாக முன்வந்து விசாரித்து ஒரு குழு அமைத்து ஐந்து மாதங்களில் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.இவர் செய்தது போல அறிக்கை விடுகிறார்.மக்களை ஏமாற்ற நினைத்தால் வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் இவரை ஏமாற்றி விடுவார்கள்.


Sudha
மே 28, 2025 19:29

விஜய்க்கு நன்றிகள். ஒரு கோரிக்கை. கொஞ்சம் செலவு செய்து இதை ஒரு போஸ்டராக அனைத்து மாவட்டங்களிலும் ஒட்டவும்


சாமானியன்
மே 28, 2025 19:28

ஸ்டாலின் என்ன பிதற்றுகிறார். ஞானசேகரன் மாதிரி தறுதலைகள் இன்னும் எத்தனை பேர் திமுகவில் பொறுப்பில் இருக்கிறார்களோ ! பயமாக இருக்கிறது.இந்த விஷயத்துலிமா ஸ்டிக்கர் ஒட்டுவது ?


vbs manian
மே 28, 2025 19:21

அண்ணாமலை முன்பு செய்ததை இப்போது விஜய் செயகிறார். வாழ்த்துக்கள்.


Padmasridharan
மே 28, 2025 19:02

"தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டதற்குத் தமிழக காவல் துறை தான் காரணம்" இது முழுக்க முழுக்க உண்மைதான். அதனால்தான் இந்த குற்றவாளிக்கு மட்டும் தீர்ப்பு வழங்க போகிறார்கள் பின்னாடி இருக்கும் பல சார்கள் மறைக்கப்பட்டிருக்கிறார்கள். திருவான்மியூர் கடற்கரையிலும் இப்படி நடக்கின்றது. காவலர்கள் அங்கு வருபவர்களிடம் மிரட்டி, மொபைல் ஃபோனை பிடுங்கி, அடித்தும், தங்கள் வண்டியில் அறைக்கு அழைத்து செல்கின்றனர். இவர்களை informers ஆக மாற்றி பணமும், சுகத்தையும் பெருகின்றனர். பிரச்சனை வெளியில் வராமல் இருக்கின்றது. இந்த அண்ணா பல்கலை மாணவிக்கு உள்ள தைர்யம் எல்லோர் இடத்திலும் இல்லாமல் இருக்கின்றது.


தமிழன்
மே 28, 2025 17:56

எண்ணிக் கொள்ளுங்கள்.. இன்னும் 13 நாட்கள் தான்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை