உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் இருவர் டிஸ்மிஸ்

சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் இருவர் டிஸ்மிஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் இருவர் உட்பட நான்கு பேரை பதவி நீக்கம் செய்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலர் உத்தரவிட்டு உள்ளார்.இதன்படிசென்னை மாநகராட்சியின் 5வது வார்டு கவுன்சிலர் சொக்கலிங்கம்(தி.மு.க.,)https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=heuht5ij&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0189 வது வார்டு கவுன்சிலர் பாபு(தி.மு.க.,)தாம்பரம் மாநகராட்சி 40வது வார்டு கவுன்சிலர் ஜெயபிரதீப்(சுயேச்சை)உசிலம்பட்டி நகர்மன்ற தலைவரும் 11வது வார்டு கவுன்சிலருமான சகுந்தலா(தி.மு.க.,) ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்துறை செயலர் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது; நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகம் தொடர்பான 1998 ம் ஆண்டு சட்டத்தின் வகைமுறைகளை மீறும் வகையில் செயல்படும் மேயர்கள், துணை மேயர்கள், நகர் மன்ற தலைவர்கள், துணைத்தலைவர்கள், மண்டலக்குழுத் தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Palanivelan Rajarathinam
மார் 28, 2025 11:22

அரசுக்குக் கௌன்சிலர்களை நீக்கும் அதிகாரம் இருப்பது நியாயம் தான்.இதேபோல தவறு செய்யும் அரசு ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்காமல் ஊழியர் சங்கங்களுக்கு பயன்படுகிறது.அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் தவறு செய்வோருக்குத் துணை போகாமல் இருந்தால் மட்டும்தான் தவறுகளைத் தடுக்கமுடியும்.


Ramakrishnan Sathyanarayanan
மார் 28, 2025 06:46

எம்எல்ஏ எம்பிக்கள் தான் மக்கள் பிரதிநிதிகளா இவர்கள் இல்லையா. இவர்களை டிஸ்மிஸ் செய்ய முடியும் என்றால் எம்எல்ஏ எம்பிக்களையும் செய்ய அனுமதிக்கலாமே


SRINIVASARAGHAVAN.S
மார் 28, 2025 11:10

மலை, மேப்க்களை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் சபாநாயகருக்கு உள்ளது. திரு M.G.R.ஆட்சியில் சபாநாயகராக இருந்த திரு பி.ஹ.பாண்டியன் இந்த அதிகாரத்தை உபயோகப்படுத்தியுள்ளார்.


ஆரூர் ரங்
மார் 27, 2025 21:07

மற்ற திமுக கவுன்சிலர்கள் உத்தமமா?


Ramesh Sargam
மார் 27, 2025 20:49

ஒரு நாடகமன்றோ நடக்குது.


சுந்தரம் விஸ்வநாதன்
மார் 27, 2025 20:42

அப்பா ஆட்சியில் அப்பா கட்சிக்காரர்களையே டிஸ்மிஸ் செய்யும் அளவு துணிவா ? இரு இரு அடுத்து வர இருக்கும் இட மாறுதலில் முதல் பெயரே நகராட்சி முதன்மை செயலாளர்தான்


GMM
மார் 27, 2025 20:40

விளக்கம் புதிதாக உள்ளது. மேயர், கவுன்சிலர் மீது அரசு செயலர் நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லை. ? அப்படி என்றால் தலைமை செயலர் எம். எல். ஏ . மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் இருக்கும். பாராளுமன்றம் உறுப்பினர் மீது நடவடிக்கை மட்டும் தான் கடினமானது. திமுக உள்ளாட்சி ஊழல்களில் தப்பிக்க வழி தேடுகிறது. ?