உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின் இணைப்புக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம்; மின் அதிகாரிகள் இருவர் கைது!

மின் இணைப்புக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம்; மின் அதிகாரிகள் இருவர் கைது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காங்கேயம்: திருப்பூர் அருகே மின் இணைப்பு வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின் அதிகாரிகள் இருவரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் படியூரில் கடைகளுக்கு புதிய மின் இணைப்பு கேட்டு மின்வாரிய அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. இதனை பெற்றுக் கொண்ட மின்வாரிய உதவி பொறியாளர் வெங்கடேஷ், 45, போர்மேன் நந்தகோபால், 52, ஆகியோர், மனுதாரரிடம் மின் இணைப்பு வழங்க ரூ.10,000 லஞ்சம் கேட்டுள்ளனர். இதனை கொடுக்க மனமில்லாத மனுதாரர், இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்தார். அவர்கள் கொடுத்த அறிவுறுத்தலின் பேரில், ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுக்களை மின்வாரிய அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளர் வெங்கடேஷ், போர்மேன் நந்தகோபால் ஆகிய இருவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

haridoss jennathan
மே 17, 2025 12:40

ஐயா பொதுவாக எல்லா மின் அலுவலகளிலும் இது நடக்கிறது. அவர்கள் நேரம் சரி இல்லை. அவ்வளவுதான் .


Bhaskaran
மே 11, 2025 11:35

ஈனப் பிறவிகள் ஒருநாளும் திருந்த மாட்டார்கள்.இந்த ஜென்மங்களுக்கு லஞ்சம் வாங்காத நாள் பிறவிப் பயனை அடையாத நாள்


Ramar P P
மே 08, 2025 12:57

எவ்வளவு சம்பளம் கிடைத்தாலும் இந்த பிச்சை எடுப்பதை மட்டும் அரசு ஊழியர்கள் நிறுத்த மாட்டார்கள் போல.


Ramesh
மே 08, 2025 07:49

இவனுக புதுசு போலிருக்கிறது. அதான் மாட்டிகினானுவ. மின் வாரியத்துல ஒருத்தன் கூட கைல காசு வாங்காம எதையும் செய்வதில்லை. இது உலகறிந்த ரகசியம். நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் அத்தனை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுத்து அனைவரையும் வீட்டிற்கு அனுப்பி வேண்டும்.


ராமகிருஷ்ணன்
மே 08, 2025 05:44

நடப்பது விடியல் அரசு. லஞ்சம் கொடுக்காமல் அரசு வேலைகள் எதுவும் செய்ய முடியாது. அரசே ஓட்டுக்காக மக்களை மடையர்களாக்கி உதவிகள் என்ற பெயரில் லஞ்சம் தருகிறது. தனது ஓட்டுக்களை தக்க வைத்துக் கொள்ள பற்பல நாடகம் போடுது. அடிமட்ட திமுக கட்சியினர் எப்படியெல்லாம் சம்பாதிக்கிறார்கள் என்று அவர்களுடன் பழகும் எங்களுக்கு தெளிவாக தெரியும். இப்படி செய்வது தவறு என்று கூட அவர்களுக்கு புரியவில்லை.


மீனவ நண்பன்
மே 08, 2025 01:24

அன்றாடம் பதிவு துறைகளில் லஞ்சம் வாங்காமல் ஒரு பதிவு கூட நடப்பதில்லை .அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை .அவர்கள் பரிசுத்த ஆவிகளா ?


தத்வமசி
மே 07, 2025 22:27

நான் ஒரு ரகசியம் சொல்கிறேன் கேளுங்கள். நெல்லுக்குள்ளே அரிசி - இதான் அந்த ரகசியம். வழி தெரியாதவன் மாட்டிக் கொண்டான். மக்கள் சேவைப் பணியில் உள்ள அரசுத் துறைகளில் எந்தத்துறையில் லஞ்சம் இல்லை என்று கூறச் சொல்லுங்கள். ஏதாவது ஒரு மின் இணைப்பு லஞ்சம் தராமல் நடந்தது என்று யாராவது ஒருவரை கூறச் சொல்லுங்கள். ஆர்டிஓ அலுவலகத்தில் காசு இல்லாமல் வேலை ஆனது என்று யாரையாவது கூறச் சொல்லுங்கள். ரேசன் கார்டும் இப்படித்தான். லஞ்சம் இல்லாமல் அரசு அலுவலகத்தில் வேலை நடந்தால் அதிசயம்.


M R Radha
மே 07, 2025 22:00

கை நிறைய சம்பளத்தை வாங்கிக் கொண்டு இப்டி ரெண்டு கைகளையும் நீட்டி லஞ்சம் வாங்குகிறீங்களே வெட்கமா இல்லையா?


மீனவ நண்பன்
மே 08, 2025 03:27

நாய் விற்ற காசு குறைக்குமா ..கருவாடு விற்ற காசு நாறுமா …


V Venkatachalam
மே 07, 2025 21:31

திராவிட மாடல் ஆட்சியில் ரூ 10000 மிக கேவலமான தொகை.‌ இதனால் மாடல் ஆட்சி மானமே போச்சு. வரப்போற எலக்ஸனுக்காக இந்த கைது நாடகம்.‌ இத வச்சி இவனுங்க வாங்கிய லஞ்சம் பணம் எல்லாம் பிடுங்கி கொண்டு 6 மாதம் கழித்து இதே போஸ்டிங் குடுத்துடுவானுங்க.


Ragupathy
மே 07, 2025 21:21

லஞ்சம் இல்லாமல் ஒருவேலை நடப்பதில்லை... தமிழக அரசு எவ்வழி... அரசு ஊழியர்கள் அவ்வழி...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை