உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இரட்டை இலை வழக்கு: தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்

இரட்டை இலை வழக்கு: தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்

அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி, டில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவில், 'தமிழகத்தில் ராஜ்யசபா எம்.பி.,க்களை தேர்வு செய்ய, தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்திருந்தது. 'அதில், அ.தி.மு.க., பெயரில் பழனிசாமி வழங்கிய விண்ணப்பங்களை தேர்தல் ஆணையம் ஏற்கக் கூடாது என கடிதம் கொடுத்திருந்தேன். அதை தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ளவில்லை. 'எனவே, தேர்தல் ஆணையத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கூறியிருந்தார். இந்த மனு, டில்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. தேர்தல் ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர். - டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை