உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வீட்டு மனை அங்கீகாரத்துக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம்: ஊராட்சி செயலர் உட்பட இருவர் சிக்கினர்

வீட்டு மனை அங்கீகாரத்துக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம்: ஊராட்சி செயலர் உட்பட இருவர் சிக்கினர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அன்னுார்: கோவை அருகே வீட்டுமனை அங்கீகாரத்துக்கு லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.கோவை மாவட்டம், அன்னுார் அருகே மூக்கனுாரை சேர்ந்தவர் ராஜன் பிரபாகரன், 45. இவர் தனக்கு சொந்தமான ஐந்து வீட்டுமனைகளை அங்கீகாரம் செய்ய, மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.ஊராட்சி செயலர் ரங்கசாமி, மனை இடங்களை அங்கீகாரம் செய்வதற்கு அரசு கட்டணம் உட்பட, 25,000 ரூபாய் கேட்டுள்ளார். லஞ்சம் தர விரும்பாத ராஜன், கோவை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அறிவுரைப்படி, மதியம் ராஜன், மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சி அலுவலகத்திற்கு சென்று, ஊராட்சி செயலர் ரங்கசாமியிடம், 25,000 ரூபாய் தந்துள்ளார். பணத்தை அங்குள்ள கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பூபதியிடம் தரும்படி ரங்கசாமி கூறினார்.ராஜனிடம், பூபதி பணத்தை பெற்ற போது, மறைந்திருந்த போலீசார் அவரை பிடித்தனர். இதையடுத்து, பூபதி, ரங்கசாமி இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

baala
அக் 14, 2025 09:31

இந்த பணத்தில் பொருட்கள் வாங்கி, அமைத்து சாப்பிடுவது ....சாப்பிடுவதற்கு சமம். வெட்கம் கெட்டவர்கள்.


Barakat Ali
அக் 14, 2025 09:15

இவனுகங்ளை எல்லையில் பீரங்கி முனையில் கட்டி நிறுத்தணும் ........


D Natarajan
அக் 14, 2025 08:17

கையூம் களவுமாக பிடிபட்டவுடன் , உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும்.


Kasimani Baskaran
அக் 14, 2025 03:54

பட்டையடித்து பக்திப்பழம் போல பூபதியை வைத்து பொது மக்களுக்கு விபூதியடித்து பணம் கறக்கும் தொழில் செய்த ரங்கசாமிக்கு என்ன தண்டனை கிடைக்கப்போகிறது - மீதமுள்ள லஞ்சம் வாங்கும் புனிதர்கள் என்று சிக்குவார்கள்? இதெல்லாம் தீம்க்கா நிர்வாகத்திடம் உடன்பிறப்புகள் கேட்கவேண்டும்..


Mani . V
அக் 14, 2025 03:52

லஞ்சம் லட்சம், கோடிகளில் இருக்க வேண்டும் என்ற ஆளும் அரசின் கொள்ளைக்கு எதிராகச் செயல்படும் இவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை