உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உகாண்டா நாட்டு பெண்கள் அவிநாசி அருகே 2 பேர் கைது

உகாண்டா நாட்டு பெண்கள் அவிநாசி அருகே 2 பேர் கைது

அவிநாசி: உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த உகாண்டா நாட்டைச் சேர்ந்த இரு பெண்களை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே தேவராயம்பாளையம் ஜே.ஜே., நகர் பகுதியில் சட்டவிரோதமாக வெளிநாட்டினர் தங்கியுள்ளதாக அவிநாசி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அப்பகுதிக்கு சென்று விசாரித்தனர்.அதில், உகாண்டா நாட்டின், கம்பாலா பகுதியைச் சேர்ந்த நாகன்வகி ஆயிஷா, 31, எவ்லின் டினா, 34, ஆகிய இரு பெண்கள் விசா காலம் முடிந்தும் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருப்பது தெரிய வந்தது. இருவரிடம் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாததால், அவிநாசி போலீசார் இருவரையும் கைது செய்தனர். அவர்களை அவிநாசி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மாஜிஸ்திரேட் உத்தரவின்படி, சென்னை புழல் சிறைக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Dhanalakshmi Subramaniyan
ஜூன் 01, 2025 21:00

இது போன்று தவறு மற்றவர்கள் செய்யாமல் இருப்பார்கள்.


rajashegaran
ஜூன் 01, 2025 08:01

நல்லது இது போல பல இடதுலூம் பலர் இருக்குரர்கள் அவர்கிலையும் கண்டு பிடிக்க வேண்டூம் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை