மேலும் செய்திகள்
பிரயாக்ராஜ் மகாமேளா செல்ல ராமேஸ்வரத்தில் இருந்து ரயில்
12 minutes ago
முதுநிலை மருத்துவ படிப்பு: கல்வி கட்டணம் வெளியீடு
26 minutes ago
அரசு ஊழியர்களுக்கான சம்பள பில் சிக்கலுக்கு தீர்வு
26 minutes ago
திண்டுக்கல்: 2026 சட்டசபை தேர்தலில் தட்டச்சு- ,சுருக்கெழுத்து, - கணினி பள்ளிகள் சங்கத்தினர் களமிறங்க திட்டமிட்டுள்ளனர். தட்டச்சு பயிற்சி நிலையங்களில் தட்டச்சு இயந்திரங்களுக்கு பதிலாக கணினி மூலமாக பயிற்சி பெற வேண்டும். இதன் மூலம் நேரடியாக சி.ஓ.ஏ., தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று அரசு வேலைக்கு செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பால் மாநிலம் முழுவதும் உள்ள 4500 தட்டெழுத்து பயிற்சி மையங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த தட்டச்சு இயந்திரங்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தட்டச்சு இயந்திரங்களை வாங்கி வைத்திருக்கும் பயிற்சி மைய உரிமையாளர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவர் என்றுகூறி வருகின்றனர். இது குறித்து பலமுறை அரசிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இது தொடர்பாக கவனம் ஈர்க்கும் பொருட்டு 2026 சட்டசபை தேர்தலில் தட்டச்சு,- சுருக்கெழுத்து, கணினி பள்ளிகள் சங்கத்தினர் போட்டியிடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். தட்டச்சு பொறியை சின்னமாக கேட்கவும் திட்டமிட்டுள்ளனர்.
12 minutes ago
26 minutes ago
26 minutes ago