உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆக.,19ல் துணை முதல்வராகிறார் உதயநிதி?: பவுர்ணமி தினமாக பார்த்து பதவியேற்கிறாரோ!

ஆக.,19ல் துணை முதல்வராகிறார் உதயநிதி?: பவுர்ணமி தினமாக பார்த்து பதவியேற்கிறாரோ!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராமநாதபுரம்: வரும் ஆகஸ்ட் 19ம் தேதி அமைச்சர் உதயநிதி, துணை முதல்வர் ஆகிறார் என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார். பகுத்தறிவு பேசும் திமுக, பவுர்ணமி தினமான அன்று உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது கொள்கை முரணமாக உள்ளதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=la6mwewl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0முதல்வர் ஸ்டாலினின் மகனும், அமைச்சருமான உதயநிதியை துணை முதல்வராக்க திமுக., அமைச்சர்கள் பலரும் விரும்புகின்றனர். அதன் வெளிப்பாடாக அவ்வப்போது தங்களது 'ஆசைகளை' வெளிப்படுத்தி வந்தனர். இது பற்றி முதல்வர் ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ''உதயநிதியை துணை முதல்வராக்கும் கோரிக்கை வலுத்திருக்கிறது, ஆனால் பழுக்கவில்லை'' என பதிலளித்தார்.

இந்த நிலையில், ராமநாதபுரத்தில் நடந்த 'தமிழ்ப்புதல்வன்' திட்ட துவக்க விழாவில் பங்கேற்ற அமைச்சர் ராஜ கண்ணப்பன், மேடையில் மாணவர்கள் மத்தியில் பேசும்போது, 'துணை முதல்வர் உதயநிதி' என கூறிவிட்டு, அடுத்த நொடியே, 'சாரி, ஆகஸ்ட் 19ம் தேதிக்கப் பிறகுதான் துணை முதல்வராவார்; அதற்கு முன்னாடி அப்படி சொல்லக்கூடாது' எனக் கூறி சமாளித்தார். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

பவுர்ணமி தினம்

ஆக.,19ல் உதயநிதி துணை முதல்வராகிறார் என அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறியதையடுத்து, அவருக்கு பதவி கிடைப்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. அன்றைய தினம் பவுர்ணமி என்பதால், நல்ல நாளாக பார்த்து பதவியேற்கிறார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே சுபமுகூர்த்த தினமான டிச.,14, 2022ல் புதன்கிழமையாக பார்த்து, நல்ல நேரத்தில் (காலை 9:28) உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்றார். பகுத்தறிவு பேசும் திமுக, பதவியேற்பு உள்ளிட்ட முக்கிய விஷயங்களுக்கு நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து செயல்படுவது கொள்கை முரணாக இருப்பதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 66 )

Rajah
ஆக 29, 2024 16:01

சமூக நீதி பேசும் இவர்கள், துனை முலமைச்சர் பதவியை தலித் இனத்திற்கு கொடுக்கலாமே?


Matt P
ஆக 16, 2024 22:46

பங்களாதேஷில் விடுதலை வீரர்களின் வாரிசுகளுக்கு சலுகை காட்டியதற்காக எதிர்ப்பு உருவாகி பதவி விலகினார் ஹசீனா. இங்கு மகனுக்கு முதன்மை பதவி அளிக்கப்படுகிறது ஒரு அப்பாவால், வாக்களித்த வாக்காளர்களின் ஆதரவால்.


Matt P
ஆக 16, 2024 22:43

பங்களாதேஷில் விடுதலை வீர்களின் வாரிசுகளுக்கு சலுகை காட்டியதற்காவே ஹசீனாவுக்கு எதிர்ப்பு வலுத்து பதவி விலகினார் . இங்கு ஒரு அப்பாவால் மகனுக்கே சலுகை காட்டப்பட்டு முதன்மை பதவி அளிக்கப்படுகிறது. பதவி ஏற்கும் நாளில் தன்மானத்தோடு முத்தம் கொடுத்து காலில் விழும் வயது முதிர்ந்தவர்களை காணலாம்.


Matt P
ஆக 16, 2024 22:16

ராஜகண்ணப்பனை வைச்சு சொல்ல வைச்சவங்க, ஏன் என்னுடைய மகன் உதயநிதி துணை முதல்வராகிறார் என்று அறிவித்திருக்க கூடாது? திராணி இல்லாதவர்கள்.


Matt P
ஆக 16, 2024 22:08

தன குடும்பம் தான் முதலில் என்று ஆட்சியிலும் சரி கட்சியிலும் எங்களுக்கு ஆதரவு இருக்கிறது என்று நடை போட்டு கொண்டிருக்கிறார்கள் என்றால்,அதை ஆதரிப்பவர்களை தூற்றுவது சரியாக தெரியவில்லை. இப்படி செய்யலாமென்றால் துர மகனுக்கோ பொன்முடி மகன் சிகாமணிக்கோ வீராசாமி மகனுக்கோ ஏன் வாய்ப்பு கொடுக்க கூடாது. என்னால் எதையும் செய்ய முடியும் ன்ற வீராப்பு தான் இது யாரும் கேட்க மு டியாது. தமிழ்நாடு இப்படி தரம் தாழ்ந்து விட்டதே ஒரு குடும்பத்துக்கு அடிமைப்பட்டு


Natarajan Ramanathan
ஆக 15, 2024 10:47

அப்படியென்றால் ஆகஸ்டு பத்தொன்பது தமிழகத்துக்கு அஷ்டமத்து சனி பிடிக்கிறதா?


C.SRIRAM
ஆக 14, 2024 18:48

இந்த போலி பகுத்தறிவு கும்பல் ஏன் அஷ்டமியன்று ராகு காலத்தில் பதவியேற்க கூடாது ?


S.V.Srinivasan
ஆக 14, 2024 09:09

ஆகஸ்ட் 19 தமிழத்தின் துக்க தினம். வேறென்ன சொல்ல முடியும்.


Matt P
ஆக 16, 2024 22:10

துர்க்கா தினம் என்று கொள்ளுங்கள் ..அந்த அம்மா ஆனந்த கண்ணீர் வடித்து எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்கள்


karutthu
ஆக 12, 2024 16:13

பௌர்ணமிக்கு பிறகு வரும் நாட்கள் எல்லாம் தேய்பிறை நாட்கள் வர வர யெல்லாம் தேய்ந்து போய்விடும் அமாவாசைக்கு பிறகு வரும் நாட்கள் வளர்பிறை நாட்கள் ..அவர்கள் தான் நாத்திக வாதிகள் ஆயிற்றே இதிலில்லாம் நம்பிக்கை இல்லாதவர்கள் இளவரசருக்கு பட்டம் ஏற்க வேறு நல்ல நாட்களை பார்க்கவும்


Natarajan Ramanathan
ஆக 10, 2024 10:53

ஏன் ஆடி மாதத்தில் செவ்வாய்க்கிழமை ராகுகால நேரத்தில் பதவி ஏற்க தைரியம் இல்லையா? என்று கேட்பதைவிட இந்த தர்க்குறிக்கு எதற்கு துணை முதல்வர் பதவி என்றுதான் கேட்க வேண்டும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை