உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மணமகள் கழுத்தில் தாலி கட்டப்போன தாய்! திருமண விழாவில் உதயநிதி கலகல

மணமகள் கழுத்தில் தாலி கட்டப்போன தாய்! திருமண விழாவில் உதயநிதி கலகல

சென்னை; சென்னையில் திருமண விழாவில் மணமகளுக்கு அவரது தாயாரே உணர்ச்சி மயத்தில் தாலியை கட்ட எத்தனித்ததை துணை முதல்வர் உதயநிதி சுட்டிக்காட்டி மேடையை கலகலப்பாக்கினார்.சென்னையில் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் 48 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. திருமணங்களை துணை முதல்வர் உதயநிதி தலைமை ஏற்று நடத்தி வைத்தார். பின்னர், மணமக்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் மொய், 30 வகையான சீர்வரிசை பொருட்கள் அளிக்கப்பட்டன.இந் நிகழ்ச்சியின் போது, மணமக்கள் சூர்யகுமார்- குணவதி ஆகியோர் திருமணத்தை உதயநிதி நடத்தி வைத்தார். மேடையில் மணமக்கள் வீற்றிருக்க, அங்கு இருந்த மணமகள் தாயார் கையில் தாலியை எடுத்தார். பின்னர் சற்றும் யோசிக்காமல் பெண்ணுக்கு கட்ட எத்தனித்தார். இதை அருகில் நின்றபடியே கண்ட உதயநிதி ஒரு கணம் திகைத்துப் போனார். உடனடியாக மணமகள் தாயாரை நோக்கி, நடந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி சிரித்தார். தமது உணர்ச்சிமயமான செயலை ஒரு விநாடி சுதாரித்துக் கொண்ட தாயும் மணமகன் கையில் தர, அவர் மணமகள் கழுத்தில் தாலி கட்டினார். இந்த சம்பவம் மேடையில் மட்டும் அல்ல, அதை கண்டு கொண்டிருந்த பலரிடையேயும் சிரிப்பை வரவழைத்தது.நிகழ்ச்சியில் உதயநிதி பேசியதாவது:இன்றைய திருமண விழாவில் பல சுவாரஸ்யங்களை காண முடிந்தது. மணமக்களில் காதல் ஜோடிகள் பலர் இருக்கின்றனர். திருமணம் நடக்கும் போது மணப்பெண்களில் ஒருவர் கண்கலங்கினார். ஏம்மா அழுகுற என்று நான் கேட்டேன். பக்கத்தில் இருந்த கலாநிதி வீராசாமி, 'அந்தப் பெண் அழுவது இன்று தான் கடைசி நாளாக இருக்கும்' என்றார். மாப்பிள்ளைகளில் ஒருவர், 3 முடிச்சுக்கு பதிலாக 5 முடிச்சு போட்டார். 'என்னப்பா கட்டிகிட்டே இருக்கே' என்று கேட்டால், 'ஸ்ட்ராங்கா இருக்கட்டும் அண்ணே' என்று சொல்கிறார்.மணமக்களுக்கு மாலையை எடுத்துக் கொடுத்தால், பதட்டத்தில், சிலர் தனக்குத் தானே மாலை போட்டுக் கொண்டனர். மணமக்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நண்பர்களாக இருந்து இல்லறம் நடத்தி வாழ்க்கையில் வெற்றி காண வேண்டும். இவ்வாறு உதயநிதி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Mani . V
நவ 18, 2024 05:54

"மணமகள் கழுத்தில் தாலி கட்டப்போன தாய்". அது திராவிட மாடலுங்கோ.


Matt P
நவ 18, 2024 00:49

மணமகனின் சகோதரி பொதுவாக மணப்பெண்ணுக்கு தாலி கட்ட உதவுவார்கள். அது பாசத்தின் வெளிப்பாடு. மாப்பிளை வேற பதட்டத்தில் இருப்பார். கை நடுங்கலாம்.


sankaranarayanan
நவ 17, 2024 21:17

அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டம் போன்று அனைத்து அமைச்சர்களும் இனி புரோகிதர்களாகலாம் என்று சட்டம் இந்த திராவிட ஆட்சியில் வரப்போகுதாம் ஆதலால் இனி புரோகிதர்களுக்கு நாட்டில் பஞ்சமே இருக்காது


என்றும் இந்தியன்
நவ 17, 2024 20:53

அதாவது திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசு இந்து திருமண முறையை எதிர்க்கின்றார்களாம் அந்த எதிர்ப்பை காண்பிக்க இப்படி செய்கின்றார்களாம்???ஏன் முஸ்லீம் திருமணம் கிறித்துவ திருமணம் செய்து காமியுங்கள் இதே மாதிரி. சே சே சே நாங்கள் மைனாரிட்டியை துன்புறுத்தமாட்டோம் என்று உளறுவார்கள்??மைனாரிட்டி என்றால் என்ன சதவிகிதம்??? 20% சதவிகிதம் மைனாரிட்டியா???அதற்குப்பதில் வராது.


sankar
நவ 17, 2024 19:32

செட்டப்பு


sankaranarayanan
நவ 17, 2024 18:13

இனி திராவிட நாட்டில் அரசியல் வாதிகளே திருமண விழாக்களுக்கு சென்று அவர்களே தாலியை எடுத்து நல்ல வேளை அவர்கள் கட்டாமல், அந்த தாலியை மணமகனிடம் கொடுத்து கட்ட சொல்வார்கள். இதனால் இனி தனி புரோகிதர் வேண்டாம் அரசியல்வாதிகளே அமைச்சர்களே புரோகிதர்களாக ஆகிவிட்டார்கள்.


Smba
நவ 17, 2024 15:53

இதுல போயி என்ன கலகல சில ஜாதி பிரிவுகளில் வித்திய சமான நடைமுறை இப்பவும் உண்டு அந்த பழக்க தேஷ சாம,


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை