UPDATED : டிச 28, 2025 10:55 AM | ADDED : டிச 28, 2025 10:47 AM
மாஸ்கோ: அமைதி பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டுவர உக்ரைன் ஆர்வம் காட்டவில்லை என ரஷ்ய அதிபர் புடின் குற்றம் சாட்டியுள்ளார்.ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையிலான நான்கு ஆண்டுகால மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, புளோரிடாவில் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்க உள்ளார். உக்ரைனில் அமைதியை உருவாக்க வேண்டும் என உலக நாட்டுத் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.ஆனாலும், ரஷ்யா நேற்று உக்ரைன் மீது 500 ட்ரோன்கள் மற்றும் 40 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், ரஷ்ய அதிபர் புடின் கூறியதாவது: உக்ரைன் மோதலை அமைதியான முறையில் தீர்க்க விரும்பவில்லை. அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டுவர உக்ரைன் ஆர்வம் காட்டவில்லை. உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர விரும்பவில்லை என்றால், ராணுவ நடவடிக்கை மூலம் இலக்குகளை அடைவோம். இவ்வாறு புடின் கூறியுள்ளார்.