உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக சட்டசபையில் எதிர்பாராத பரபரப்பு !

தமிழக சட்டசபையில் எதிர்பாராத பரபரப்பு !

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : மாணவி பாலியல் பலாத்காரம், மதுரை டங்ஸ்டன் சுரங்கம், பொங்கல் பரிசு விவகாரம், உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் எழுந்துள்ள நிலையில் தமிழக சட்டசபையின் புத்தாண்டு முதல் கூட்டம் இன்று துவங்கியது. இந்த கூட்டத்தில் கவர்னர் உரை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கவர்னர் அரசின் உரையை வாசிக்காமல் புறக்கணித்து புறப்பட்டு சென்றார். இதனால் சபையில் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக சபைக்கு வந்த கவர்னர், முதல்வருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. சபைக்குள் கவர்னர் வந்ததும் காங்., அதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி எம்எல்ஏ.,க்கள் கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து கோஷங்கள் எழுப்பப்பட்டதால் கவர்னர் அதிருப்தி அடைந்து சபையில் இருந்து வெளியேறினார். இதனையடுத்து கவர்னர் படிக்க வேண்டிய உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gp125lrx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

தேசியகீதம் பாட இடையூறு

இது குறித்து கவர்னர் மாளிகை சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்க அறிக்கையில்; சபை நடவடிக்கை துவங்கும் முன்னதாக தேசியகீதம் பாடுவது மரபு, ஆனால் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இது தவறு அரசியலமைப்பு சட்டம் அவமதிக்கபடுவதாக கூறி சபை நடவடிக்கையை புறக்கணித்து கவர்னர் வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் அந்த சார் !

சபைக்கு வந்த அதிமுக எம்எல்ஏ.,க்கள் யார் அந்த சார் ! என்ற பதாகை மற்றும் பேட்ஜ் அணிந்து வந்தனர். தொடர்ந்து அதிமுகவினர் சபையில் இருந்து வெளியேறினர்.

கடந்த முறை வெளியேறிய கவர்னர்

கடந்த 2023 சட்டசபை கூட்டத்தில், அரசு தயாரித்து அளித்திருந்த கவர்னர் உரையில் சில வாசகங்களை தவிர்த்தும், சில வாசகங்களை சேர்த்தும், கவர்னர் உரையாற்றினார்.'கவர்னர் தவிர்த்த வாசகங்களுடன், கவர்னர் உரை சட்டசபை குறிப்பில் இடம் பெறும். உரையில் இல்லாமல் கவர்னர் பேசியவை இடம் பெறாது' என, முதல்வர் தீர்மானம் கொண்டு வந்தார். இதனால் கோபம் அடைந்த கவர்னர், சட்டசபை கூட்டம் முடிவதற்கு முன்னதாகவே, சபையிலிருந்து வெளியேறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Oviya Vijay
ஜன 07, 2025 00:03

உச்சநீதிமன்றத்திடம் மீண்டும் குட்டுப் பட வேண்டுமென கவர்னருக்கு தலையெழுத்து இருந்தால் அதை யாரால் மாற்ற முடியும்.. அதன் பிறகு மன்னிப்பு கேட்டு இதனை கெளரவமாக சொல்ல வேண்டுமானால் மீண்டும் ஒருமுறை வருத்தம் தெரிவிப்பார். சட்டசபையில் பல நெடுங்காலமாக பின்பற்றப்படும் மரபு என்று கூறினால் நீதிமன்றமும் ஏற்றுக்கொள்ளும். இதையெல்லாம் பெரிதாக்கி ஒரு கவர்னர் பேசுவாரானால் அவரது மனநிலையை சந்தேகிக்க வேண்டியுள்ளது. நான் பலமுறை கூறி வருவது போல் இந்த கவர்னரும, தமிழக பிஜேபி கோமாளி தலைவர்களும் இருக்கும் வரையில் தற்போதைய ஆளுங்கட்சி அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் வெற்றி வாகை சூடிக் கொண்டே இருக்கும்...


visu
ஜன 07, 2025 08:57

தாராளமா சந்தேகிச்சுக்கோ அவர் மாநில கவர்னர் மற்றும் முன்நாள் IPS நீங்க இங்க கருத்து மட்டும் சொல்லும் நபர் .தி மு க வின் கடைசி ஆட்சி இது மறந்து விட வேண்டாம்


Subramanian a
ஜன 06, 2025 19:26

கவர்னர் கலந்து கொள்ளும் நிகழ்சியில் கடைப்பிடிக்க வேண்டிய நிலை இந்த திராவிட மாடல் அரசு கடைபிக்க வேண்டாமா கவர்னர் செய்தது சரியே


raju
ஜன 15, 2025 09:54

முன்னாள் IPS இந்தியாவில் எத்துணை பேர் இருக்கிறார்கள் .


Sampath Kumar
ஜன 06, 2025 17:14

தமிழ் தாய் வாழ்த்தில் திராவிடம் உள்ளது போல தேசிய கீதத்திலும் உள்ளது பிரச்சனை என்ன வென்றால் ஆரியம் திராவிடத்தை ஏற்காது அதுபோல திராவிடம் ஆரியத்தை ஏற்காது இது தான் முக்கிய காரணம் ஆனலும் கவர்னர் இதை தொடர்ந்து செய்வது அரசியில் அமபைப்பு சட்டத்தை மிதிக்கும் செயல் ஆகும்


S.L.Narasimman
ஜன 06, 2025 15:59

விடியல் கட்சிகாரங்க கவர்னர் மற்றும் எதிர்கட்சியினரை வெளியே அனுப்பி விட்டு யாரு அந்த சார்ன்னு சபையிலே அவர்களுக்குள் விவாதிப்பார்களோ?.


Karthikeyan
ஜன 06, 2025 15:23

எப்போதுமே தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்படும்...முடிவில்தான் தேசியகீதம் பாடப்படும்...தமிழகத்திற்குரிய முறைகளை முதலில் ஆளுநர் தெரிந்துகொள்ள வேண்டாமா?


Dharmavaan
ஜன 06, 2025 17:47

அது தவறான முறை. தேசிய கீதத்துக்கே முதல் மரியாதை


ஆரூர் ரங்
ஜன 06, 2025 20:28

தேசமே பெரிது. மாநிலம் அதற்கு அடங்கியது. முதல் மரியாதை தேசத்துக்குதான்.


அப்பாவி
ஜன 06, 2025 15:08

கெவுனரே குழம்பிட்டாரு.


krishna
ஜன 06, 2025 23:15

ARAI VEKKADU APPAVI MOOLAI ILLAMAL ULARUVADHU UNNAI PONDRA GOPALAPURAM AAYUTKAALA KOTHADIMAI 200 ROOVAA OOPIS MATTUME.GOVERNER MIGA PERIYA PADHAVIYIL MSDHYA ARASIL IRUNDHULLAR.


Ramesh Sargam
ஜன 06, 2025 11:39

தமிழக அரசு ஏன் தொடர்ந்து தேசியகீதத்தை புறக்கணிக்கிறது...? தமிழகம், இந்தியாவின் ஒரு பாகம் இல்லையா...? முதலில் தேசியகீதத்தை பாடுங்கள், பிறகு தமிழ்த்தாய் வாழ்த்தையும் பாடுங்கள்.


makesh
ஜன 06, 2025 12:54

தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடினால் ஏன் தப்பு


N.Purushothaman
ஜன 06, 2025 14:25

பாஸ்.. மாநில அரசு நடத்தும் நிகழ்ச்சியில் கவர்னர் வரும் போதும் பின் நிகழ்ச்சி முடிந்து செல்லும் போதும் தேசிய கீதம் பாடி மரியாதை செலுத்த வேண்டும்.. மத்திய உள்துறை அமைச்சரகம் இது தொடர்பாக ஐந்து பக்கங்கள் கொண்ட ஒரு சிறிய அறிக்கை/கொள்கை வெளியிட்டு உள்ளது.. உள்துறை அமைச்சக இணையதளத்தில் இருந்து அதை பதிவிறக்கம் செஞ்சி படிச்சி பாருங்க ....


Kumar Kumzi
ஜன 06, 2025 15:54

டாஸ்மாக் கொத்தடிமை கூமுட்டைங்களுக்கு தனி தமிழ்நாடு என்ற நெனைப்பு


V வைகுண்டேஸ்வரன்
ஜன 06, 2025 17:51

தமிழக அரசு தொடர்ந்து தேசியகீதத்தை புறக்கணிக்கவில்லை. கவர்னர் காரில் இருந்து இறங்கி வந்ததும் police band தேசிய கீதம் தான் வாசித்தது. அப்புறம் தான் கவர்னர் சபைக்குள் போனார்.


Kasimani Baskaran
ஜன 06, 2025 11:38

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி மாநில நிர்வாகத்தின் தலைவர் கவர்னர். அவரைக்கூட திருப்திப்படுத்த முடியாதவர்கள் எப்படி நல்லாட்சி கொடுக்க முடியும்?


sankaranarayanan
ஜன 06, 2025 11:26

அதிமுகவினரை கூண்டோடு சபாநாயகர் வெளியேற்றனர் என்றால் அதிமுகவினருக்கு சட்ட சபையில் கூண்டு ஒன்று அமைக்கப் பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது அது என்ன கூண்டு எப்படிப்பட்ட கூண்டு


Madras Madra
ஜன 06, 2025 11:02

கவர்னர் எதிர்க்கட்சிகள் இவர்கள் எல்லாம் இல்லாமல் இருந்தால் தான் ஜனநாயகப்படி சபை நடத்த முடியும் இதுதான் விடியல்


முக்கிய வீடியோ