உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காங்கிரசின் பேனரில் மத்திய அமைச்சர் படம்: ராகுல் பிரசார கூட்டத்தில் கூத்து

காங்கிரசின் பேனரில் மத்திய அமைச்சர் படம்: ராகுல் பிரசார கூட்டத்தில் கூத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாண்ட்லா: மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சி எம்.பி., ராகுல் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்கான விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் காங்கிரஸ் வேட்பாளர், தலைவர்கள், நிர்வாகிகள் புகைப்படங்களுடன், பா.ஜ.,வை சேர்ந்த மத்திய அமைச்சர் படமும் இடம் பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 29 தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. 6 தொகுதிகளுக்கான முதல்கட்ட தேர்தல் ஏப்.,19ல் நடைபெறுகிறது. இதில் மாண்ட்லா தொகுதியில் மத்திய அமைச்சரும் ஆறு முறை பா.ஜ., எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டவருமான பக்கன் சிங் குலாஸ்தே மற்றும் முன்னாள் அமைச்சரும் நான்கு முறை காங்கிரஸ் எம்எல்ஏ.,வாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான ஓம்கார் சிக் மார்க்கம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=umn69rt3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவர்கள் இருவரும் கடந்த 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டதில், பக்கன் சிங் குலாஸ்தே ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருந்தார். தற்போது இவர்கள் இருவரும் மீண்டும் மோதுவதால் போட்டி கடுமையாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று காங்கிரஸ் வேட்பாளர் ஓம்கார் சிக் மார்க்கமை ஆதரித்து ராகுல் அங்கு பிரசாரம் மேற்கொள்கிறார்.இதற்காக அமைக்கப்பட்டுள்ள பிரசார மேடையில் காங்., வேட்பாளர் புகைப்படத்துடன் கட்சியின் தலைவர்கள், நிர்வாகிகளின் படங்களும் இடம்பெற்றிருந்தன. அதில் தவறுதலாக பா.ஜ., வேட்பாளர் குலாஸ்தே படமும் இருந்ததால் காங்கிரசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே சுதாரித்துக்கொண்ட கட்சியினர் பா.ஜ., வேட்பாளரின் படத்தின்மீது வேறொரு காங்., நிர்வாகியின் படத்தை ஒட்டி மறைத்தனர். தேர்தல் நேரத்தில் தங்கள் கட்சியை எதிர்த்து நிற்கும் வேட்பாளர் கூட தெரியாமல் அவரின் படத்தையும் சேர்த்து பேனர் அச்சிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Godfather_Senior
ஏப் 08, 2024 17:25

ராகுல் நாளைக்கு மோடியின் படத்தை காண்பித்து ஒட்டு கேட்டாலும் கேட்பார் மக்களே உஷாராக இருங்கள்


Natarajan Ramanathan
ஏப் 08, 2024 17:24

நம்ம ஊரில் ஒரு தத்தி இருக்கிறது அப்பன் பேரை கேட்டால்கூட துண்டு சீட்டை பாத்துதான் படிக்கும்


வாய்மையே வெல்லும்
ஏப் 08, 2024 17:08

கையாலாகாத தத்தி யை தேர்ந்தெடுத்தால் குரங்கின் கையில் பூமாலை போன்று காட்சி அளிக்கும் என்பது நிதர்சனம்


Raa
ஏப் 08, 2024 13:37

மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழி மக்கள் தான்


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 08, 2024 14:17

சரியாக சொன்னீர்கள்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை