உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமெரிக்கா வரி விதிப்பால் கவலை வேண்டாம் தெம்பூட்டுகிறார்: மத்திய கப்பல் துறை அமைச்சர்

அமெரிக்கா வரி விதிப்பால் கவலை வேண்டாம் தெம்பூட்டுகிறார்: மத்திய கப்பல் துறை அமைச்சர்

துாத்துக்குடி: ''இந்திய கடல்சார் வாணிபம் வளர்ச்சி அடைந்து வருவதால், அமெரிக்கா வரி விதிப்பு குறித்து யாரும் கவலை பட வேண்டாம்,'' என மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தெரிவித்தார். துாத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்தில், நேற்று நடந்த பசுமை ஹைட்ரஜன் முன்னோடி தயாரிப்பு நிலைய திறப்பு விழாவில் சர்பானந்தா சோனோவால் கலந்து கொண்டார். பின், அவர் அளித்த பேட்டி: நாட்டில் 2047ம் ஆண்டை இலக்காக கொண்டு செயல்படுத்தப்படும் கடல்சார் வாணிபத் திட்டத்தில், 80 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த முதலீட்டின் மூலமாக, இந்தியா, கடல் சார் வாணிபத்தில் உலக அளவில் முதன்மை பெறும். முந்தைய ஆட்சியின் 10 ஆண்டுகளை விட, கடந்த 11 ஆண்டுகளாக துறைமுகங்கள் மேம்பாடு அடைந்துள்ளன. கப்பல் போக்குவரத்து துறையில் ஏராளமான வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வரப்பட்டு உள் ளன. சாகர்மாலா திட்டத் தில், 93,750 கோடி ரூபாய் மதிப்பில், 98 திட்டங்கள் துவங்கப்பட்டதில், இதுவரை 50 திட்டங் கள் முடிவடைந்துள்ளன. தமிழகத்தில் சென்னை துறைமுகம், காமராஜர் துறைமுகம், துாத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் ஆகியவை 16,000 கோடி ரூபாய் மதிப்பில் நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் பசுமை ஹைட்ரஜன் திட்டம், 41,000 கோடி ரூபாய் மதிப்பில் அமைய உள்ளது. மேலும், துறைமுகத்தில் கப்பல் கட்டும் தளம், கப்பல் சரி செய்யும் தளம் அமைப்பதற்காக தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. துாத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ள 350 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் மூலமாக, 2,000 பேருக்கு நேரடியாகவும், 5,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும். வரும் 2030ல் கடல்சார் தொலைநோக்கு திட்டத்தின் வாயிலாக, வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதன் வாயிலாக, உலகில் சிறந்த 10 நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவாகும். நாட்டில் கடல் சார் மேம்பாட்டு திட்டம் 2047ன் கீழ் துறைமுகங் களில் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்துவதன் வாயிலாக, கப்பல் கட்டும் துறையில், உலகில் முதல் ஐந்து இடங்களில் ஒன்றாக இந்தியா இருக்கும். இந்தியாவில் கடல்சார் வாணிக திட்டம் வலுவாக உள்ளதால், அமெரிக்க நாட்டின் வரி உயர்வு பற்றி கவலைப்பட தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை