உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / "தீண்டாமை நடப்பதை வேடிக்கை பார்க்க முடியாது": உயர்நீதிமன்ற நீதிபதிகள் காட்டம்

"தீண்டாமை நடப்பதை வேடிக்கை பார்க்க முடியாது": உயர்நீதிமன்ற நீதிபதிகள் காட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: 'சில இடங்களில் தீண்டாமை நடைபெறுவதை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. கோயில் திருவிழா கொண்டாடுவதில் பாகுபாடு இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்' என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சாமிநாதன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். மனுவில், '' திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வெள்ளப்பொம்மன் கிராமத்தில் பகவதி அம்மன், ஸ்ரீ முத்தாலம்மன், ஸ்ரீ காளியம்மன் மற்றும் ஸ்ரீ மாரியம்மன் கோயில்களில் வரும் மே 19ம் தேதி திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.80க்கு மேற்பட்ட பட்டியலின குடும்பத்தினர் திருவிழாவில் பங்கேற்க அனுமதி மறுக்கப்படுகிறது. திருவிழாவில் பட்டியலின மக்கள் வழிபடும் வகையில் அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும்'' எனக் கூறியிருந்தார். இந்த மனு இன்று (மே 16) உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது.

வேடிக்கை பார்க்க முடியாது!

அப்போது நீதிபதிகள், '' சில இடங்களில் தீண்டாமை நடைபெறுவதை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. ஒரு மனிதன், மற்றொரு மனிதனை பாகுபாடு பார்ப்பது ஏற்புடையது அல்ல. கோயில் திருவிழா கொண்டாடுவதில் பாகுபாடு இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். எந்த பிரச்னையும் ஏற்படாமல் வருவாய்த்துறையும், போலீசாரும் பார்த்துக்கொள்ள வேண்டும்'' என உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

தமிழ்வேள்
மே 17, 2024 20:10

இன்றைய தமிழகத்தில் தீண்டாமையை கட்டிக்காத்து கொண்டு இருப்பது திராவிட இயக்கங்கள் சார்ந்த ஆட்கள் மட்டுமே ஆதிக்க சாதியின் பெயரால் இவர்கள் தான் சாதி ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டு உள்ளார்கள்இது நீதிமன்றங்களுக்கு நன்றாக தெரியும் திராவிட திருடர்களை கண்டிக்க நடவடிக்கைகள் எடுக்க விரும்பாமல் இப்படி பசப்புகிறார்கள்


அன்பு
மே 17, 2024 12:38

வேடிக்கை பார்க்க முடியாது. உதார் உட முடியும்.


Rao
மே 17, 2024 09:09

Mi lord, we are running a Vidiyal/ Dravidian Model Aatchi, so nothing to worry about.


Balaji
மே 16, 2024 22:31

அறிவாலயத்துல பிளாஸ்டிக் சேரு கொடுக்குறது நிக்க வெச்சி பேசுறது இதெல்லாம் சொல்லுதீகளா ஆபீசர்?


Murali Ramasamy
மே 16, 2024 21:44

காலத்திற்கு ஏற்ப மாறாத வீணாய் போன சட்டங்கள் இருப்பதாலும் தண்டனை அறிவிக்க பல ஆண்டுகளாக ஆவதால் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரணமாக மாறுகின்றார்கள்


சந்திரசேகர்
மே 16, 2024 21:19

தீண்டாமை ஒழிய வேண்டுமென்றால் முதலில் அரசாங்கம் எதற்கெடுத்தாலும் சாதி சான்றிதழ் கேட்பதை நிறுத்த வேண்டும். சாதி சான்றிதழ் கேட்கவில்லை என்றால் இட ஒதுக்கீடு இல்லாமல் போய் விடும். பிறகு அவரவர் திறமையில் முன்னேறி ஒரு கட்டத்தில் சாதி அடையாளம் மறைந்து விடும். இட ஒதுக்கீடு இருக்கும் வரை சாதி பாகுபாடு இருக்கும்


N Sasikumar Yadhav
மே 16, 2024 20:14

அப்படியே அந்த வேங்கைவயல் சம்பவத்துக்கும் ஒரு உத்தரவு போடலாமே இந்த திராவிட மாடல் அரசு இன்னும் கைது செய்யாமல் வேடிக்கை பார்க்கிறதே


GMM
மே 16, 2024 19:00

ஒரே ஊரில் பல சாதி, மதத்தினர் வசிக்கின்றனர் தீண்டாமை இல்லை? கோவில் விழாவில் பிரச்சனை ஒரே சாதிக்கு உறவு முறை கோவில் உண்டு இந்த கோவில் வீடு போன்றது ஒன்றுக்கு மேற்பட்ட சாதியினர் சேர்ந்து விழா கொண்டாடுவது உண்டு இந்த வகை கோவில் பொது கிடையாது? அனைவரும் வழிபடலாம் இந்துக்கள் சிலர் கோவில் பக்கம் திரும்பியது இல்லை கௌரவம் பெற சில முரட்டு சமூகம் கோவிலை கைப்பற்றும்? அந்த கோவில் மீது நம்பிக்கை கொண்ட குடும்பம் பெரும் நிதியுதவி செய்யும் வரை பராமரிக்கும் தீண்டாமை கடை பிடிக்கும் காலம் அல்ல ஓட்டல், பஸ் போன்ற பொது இடங்களில் கலந்து விட்டோம் தீண்டாமை சட்டத்தை நீக்க முடியாதா? அவர்கள் மனநிலை மாறும்


மேலும் செய்திகள்