உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வீணாக கடலுக்கு செல்லும் வைகை ஆற்று நீர்; சேமிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா

வீணாக கடலுக்கு செல்லும் வைகை ஆற்று நீர்; சேமிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா

ராமநாதபுரம் : ராமநாதபுரம் வைகை ஆற்றின் காருகுடி தடுப்பணையில் இருந்து நீர் வீணாக கடலுக்கு செல்கிறது. இதனை சேமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.வைகை அணை மொத்த உயரமான 71 அடி வரை நிரம்பியுள்ளது. இதன்காரணமாக அணைக்கு வரும் உபரி நீர் வினாடிக்கு 837 கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 138.95 அடியாக உள்ளது. நீர் வரத்து வினாடிக்கு 454 கன அடி. இங்கிருந்து வினாடிக்கு 300 கன அடி மட்டுமே வெளியேற்றப் படுகிறது. இதன் காரணமாக வைகை ஆற்றில் வரும் உபரி நீர்பேரணை, விரகனுார், பார்த்திபனுார் தடுப்பணைகளை கடந்து வருகிறது.ராமநாதபுரத்திற்கு வைகை ஆற்றில் இருந்து பெறப்படும் நீர் சித்தனேந்தல்பகுதியில் உள்ள தடுப்பணையில் நிரப்பப்பட்டு அங்கிருந்து கீழநாட்டார் கால்வாய் வழியாக ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு வழங்கப்படுகிறது.மீதமுள்ள நீர் ராமநாதபுரம் பெரியகண்மாய்கும் செல்கிறது. எனினும் காருகுடி தடுப்பணை ஷட்டர்கள் வழியாக வினாடிக்கு 10 கன அடி வீதம் வீணாக கடலுக்கு செல்கிறது. பல்வேறு பகுதிகளில் கண்மாய்கள் நிரம்பாத நிலையில் வீணாகும் நீரை சேமிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ