உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வால்பாறையில் சிறுத்தை தாக்குதல்; 5 வயது சிறுமியை தேடும் பணி தீவிரம்

வால்பாறையில் சிறுத்தை தாக்குதல்; 5 வயது சிறுமியை தேடும் பணி தீவிரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வால்பாறை: வால்பாறை அருகே வீட்டின் பின்புறம் நின்றிருந்த 5 வயது சிறுமியை சிறுத்தை தூக்கிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் நிறைந்திருக்கின்றன.இங்குள்ள தோட்டங்களில் தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாது, புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rhjzx5xc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அங்குள்ள பச்சமலைஎஸ்டேட் பகுதியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்பில் மனோஜ் முண்டா என்பவர் மனைவி மோனிகா தேவி, மகள் ரோஸ்லி குமாரி (வயது 5) ஆகியோருடன் வசித்து வருகிறார். இவர்கள் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இந் நிலையில் வீட்டின் பின்புறம் 5 வயது சிறுமி ரோஸ்லிகுமாரி நின்றுள்ளார். அப்போது அங்கு மறைவில் பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று, சிறுமியை கவ்விக் கொண்டு வனப்பகுதிக்குள் ஓடியது.இதையறிந்த சிறுமியின் பெற்றோரும், சக தொழிலாளர்களும் அதிர்ச்சியில் உறைந்து, பின்னர் கூச்சலிட்டனர். சிறிது நேரத்தில் சிறுமியின் ஆடைகள் கண்டு எடுக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறைக்கு அவர்கள் தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை அதிகாரிகள் சிறுமியை தேடும் பணியில் இறங்கினர். இரவு நேரம் என்பதால் சிறுமியை கண்டுபிடிக்க முடியாமல் வனத்துறையினர் தவிக்கின்றனர்.வால்பாறையில் கடந்த ஆண்டு அக்டோபரில் இதேபோன்று சிறுமியை சிறுத்தை கவ்விச் சென்று கொன்றது. தற்போது அது போலவே மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறி இருப்பது, தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி