உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிளஸ் 2 மாணவியை ஏற்றாமல் ஓடவிட்ட சம்பவம்; அரசு பஸ் டிரைவர் சஸ்பெண்ட்

பிளஸ் 2 மாணவியை ஏற்றாமல் ஓடவிட்ட சம்பவம்; அரசு பஸ் டிரைவர் சஸ்பெண்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே பஸ்சை நிறுத்தாமல் ஒட்டிச் சென்று பிளஸ் 2 மாணவியை ஓடவிட்ட சம்பவத்தில் டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.இதுபற்றிய விவரம் வருமாறு;https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4cuxm2q5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வாணியம்பாடியில் இருந்து ஆலங்காயத்துக்கு அரசு பஸ் ஒன்று பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. கொத்தக்கோட்டை என்ற இடத்தில் வந்த போது அங்குள்ள நிறுத்தத்தில் நிற்காமல் பஸ்சை அதன் டிரைவர் முனிராஜ் ஓட்டிச் சென்றுள்ளார்.அதேநேரத்தில் முனிராஜ் ஒட்டி வந்த பஸ்சில் ஏறுவதற்காக பிளஸ் 2 மாணவி ஒருவர் காத்திருந்தார். அவர் நின்றிருந்த பஸ் நிறுத்தத்தில் வண்டியை நிறுத்தாமல் முனிராஜ் சென்றிருக்கிறார். அப்போது காத்திருந்த பிளஸ் 2 மாணவி பஸ்சை பின்னோலே துரத்திச் சென்று ஏறி உள்ளார். பள்ளி மாணவி பஸ்சை பிடிக்க ஓடிச் சென்றதையும், பஸ்சை நிறுத்தாமல் டிரைவர் ஓட்டிச் சென்றதையும் அவ்வழியாக சென்ற சிலர் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.இந்த வீடியோ வைரலானதோடு, கடும் விமர்சனங்களையும் எழுப்பியது. இதையடுத்து, பள்ளி மாணவியை ஓடவிட்ட டிரைவர் முனிராஜை போக்குவரத்து நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. அதே பஸ்சில் இருந்த நடத்துநர் தற்காலிக பணியாளர் என்பதால் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் அவரை பணியில் இருந்து விடுவிக்க கோரப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

K.Ramakrishnan
மார் 25, 2025 21:59

சம்பள உயர்வு கோரி போராடுகிற போக்குவரத்துக்கழக ஊழியர்கள், இதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்? உங்களுக்கு எல்லாம் ஆயுள் முழுக்க அரசு பஸ்சில் ஓசிப்பயணம். ஆனால் படிக்கிற இந்த மாணவியை ஏற்றாமல் சென்ற அரசு பஸ் டிரைவரை சஸ்பென்ட் செய்தது போதாது. டிஸ்மிஸ் செய்யவேண்டும். அவரது பணப்பயன்கள் அனைத்தையும் முடக்கிவைக்கவேண்டும்.


Yes your honor
மார் 25, 2025 13:20

மாணவிகள் மட்டுமல்ல பெண்கள் என்றாலும் அவர்களுக்கு கட்டணம் கிடையாது என்பதால் தொன்நூறு சதவீத பேருந்து ஓட்டுனர்கள் இவ்வாறுதான் நடந்து கொள்கிறார்கள். இலவச பஸ் பயணம் பெண்களுக்கு ஒரு பத்து ரூபாயை மிச்சப்படுத்தலாம், ஆனால் பத்தாயிரம் ரூபாய்க்கு அவமானப் படுத்தப்படுகிறார்கள். நான் திருப்பூரில் பஸ்சுக்காக காத்திருந்தபொழுது என்னுடன் வடமாநில தொழிலாளி ஒருவரின் குடும்பமும் காத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது ஒரு லிப்ஸ்டிக் பஸ் வந்தது. அவர்கள் அந்த பஸ்ஸில் ஏறவில்லை, நான் ஏன் என்று கேட்டபொழுது நாங்கள் தனியார் வண்டியில் பணம் கொடுத்து செல்லவே விரும்புகிறோம் என்று கூறினார். அவ்வாறு அவர் கூறும்பொழுது அவரது முகபாவனை அவர் நன்றாக அவமானப்பட்டிருப்பாரோ என்று எண்ணத் தோன்றியது. நம் டாஸ்மாக் தமிழனுக்குத் தான் சூடு சொரணை இல்லை, ப்ரியா குடுத்தா பினாயிலையும் குடிப்பார்கள். வடமாநிலத்தவர் கூலிவேலை செய்தாலும் தன்மானத்தை இழக்க விரும்பவில்லை என்பது புரிந்தது.


அருண் பிரகாஷ் மதுரை
மார் 25, 2025 13:18

நடத்துனர் தற்காலிக பணியாளரா? எங்கே போனார்கள் உண்டியல் குலுக்கிகள்..வேலை இல்லாமல் பல இளைஞர்கள் இருக்கும் போது எப்படி தற்காலிக பணியாளர்கள் நியமனம் நடைபெறுகிறது..


SUBRAMANIAN P
மார் 25, 2025 12:43

திராவிடமாடல் ட்ரைவர் அப்படிதான் இருப்பாரு.. SANGAM இருக்கு.


Nagarajan D
மார் 25, 2025 12:10

அது ஏண் தற்காலிக நீக்கம் அவனை நிரந்தரமா நீக்குங்க


Ramesh Sargam
மார் 25, 2025 12:03

திமுகவினருக்கு ரொம்ப வேண்டப்பட்டவராக இருக்கலாம் அந்த ஓட்டுநர்.


MP.K
மார் 25, 2025 12:02

முறையான சரியான நடவடிக்கை எடுத்த போக்குவரத்துத்துறைக்கு நன்றிகள் பல


பிரேம்ஜி
மார் 25, 2025 11:47

மக்கள் நலன் கருதி எடுத்த நல்ல நடவடிக்கை! பாராட்டுக்கள்!


S.suresh
மார் 25, 2025 11:30

எத்தனை முறை Suspend பண்ணிணாலும் திருந்த மாட்டேங்கிறாங்க. அவங்க பிள்ளைகள் இருந்தால் இப்படி பண்ணியிருப்பார்களா?


சுந்தரம் விஸ்வநாதன்
மார் 25, 2025 12:41

அட அவங்க பிள்ளைகளாக இருந்தால் என்பதை விடுத்து, இதுவே ஒரு மாணவி என்பதற்கு பதில் மாணவனாக இருந்திருந்தால் இப்படி ஓடவிடுவார்களா என்று எண்ணிப்பாருங்கள்.