உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு மிரட்டல்; வி.சி. மாவட்ட செயலாளர் கைது!

பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு மிரட்டல்; வி.சி. மாவட்ட செயலாளர் கைது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த புகாரில் விடுதலை சிறுத்தைகள் கோவை தெற்கு மாவட்ட செயலாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.கோவை தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் செயலாளராக இருப்பவர் அசோக் குமார். 2 நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சி வடக்கிபாளையம் கோவை சாலையில் கட்சியின் சார்பில் 2 பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த பேனர்களை போலீசார் அகற்றினர்.இதனால் அதிருப்தி அடைந்த விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் அசோக்குமார், ஐ.பி.எஸ்., அதிகாரியான பொள்ளாச்சி கூடுதல் எஸ்.பி., சிருஷ்டி சிங்கை தொலைபேசியில் அழைத்துள்ளார். பேனர் அகற்றப்பட்டது குறித்து பேசிய அவர், அதுதொடர்பாக தகாத வார்த்தைகளினால் மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. இதை தொடர்ந்து, கோவை மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திகேயனிடம், பெண் அதிகாரி சிருஷ்டி சிங் புகார் அளித்தார்.இதையடுத்து, பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்கு பதிந்து, அசோக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Ramesh Kumar
நவ 19, 2024 17:21

Fantastic action taken by Police SP coimbatore


Suresh Sivakumar
நவ 19, 2024 15:42

Put them under gundas act. Pests


Raj
நவ 19, 2024 15:25

ஆனா இன்னும் செந்தில் பாலாஜி தம்பிய தேடிக்கிட்டே இருக்காங்க. சந்தனகடத்தல் வீரப்பனகூட இவ்ளோ நாளா தேடுல.


எஸ் எஸ்
நவ 19, 2024 15:03

இவர்கள் பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்தால் எப்படி இருக்கும்?


....
நவ 18, 2024 22:55

கஸ்தூரியை கைது பண்ணவர்கள் இவர்களை கைது பண்ணுவார்களா? திராவிட மாடலே?


Mohammad ali
நவ 18, 2024 22:03

நாய்களின் தொந்தரவு அதிகமாக உள்ளது. கருத்தடை செய்தால் நல்லது. தாய் நாயை முதலில் கருத்தடை செய்ய வேண்டும்.


Ms Mahadevan Mahadevan
நவ 18, 2024 21:44

இது போன்ற ரவுடி கும்பல் களை காவல் துறை நன்கு கணித்து நோங்கு எடுக்க வேண்டும். கட்சிகாரர்களின் தொந்தரவு ஜாதி சங்க உறுப்பினர்களின் தொந்தரவு தாங்க முடிய வில்லை. மிர்ட்டல் கட்டப் பஞ்சாயத்து கும்பல்கள் ஒழிக்கப் பட வேண்டும்


கல்யாணராமன்
நவ 18, 2024 21:38

அந்த போலீசார் அதிகாரி மேல் எப்படிப்பட்ட பதில் புகார் கொடுக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்து இருப்பார்.


panneer selvam
நவ 18, 2024 21:22

He is now prequalified to become next MLA from VCK in Coimbatore .


RAJ
நவ 18, 2024 21:17

அடிவருடி பொழைப்புல இருக்கறப்பவே இந்த ஆட்டம்ன , இவன்லம் சீமான் மாதிரி தனியா நின்னா என்ன ஆட்டம் ஆடுவான்? IPS மேடம் வாயில சுட்டு பிடிங்க..


சமீபத்திய செய்தி