உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கண்ணை மூடினார் கன்னடத்து பைங்கிளி : அமைதி ஆனார் அபிநய சரஸ்வதி

கண்ணை மூடினார் கன்னடத்து பைங்கிளி : அமைதி ஆனார் அபிநய சரஸ்வதி

பெங்களூரு : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, 87 வயது மூப்பால் வரும் உடல்நலப் பிரச்சனையால் காலமானார். கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள மல்லேஸ்வரத்தில் தனது வீட்டிலேயே காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் மற்றும் ஹிந்தியிலும் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து புகழ்பெற்றார். மறைந்த சரோஜாதேவிக்கு திரையுலகினர் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.கன்னடத்து பைங்கிளி என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சரோஜா தேவி. கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் 1938ம் ஆண்டு ஜன.,7ல் பிறந்த இவர் தனது 17வது வயதில் ‛மகாகவி காளிதாஸ்' என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகாகி புகழ்பெற்றார். தமிழில் ‛நாடோடி மன்னன்' என்ற படத்தில் எம்ஜிஆர் உடன் நடித்து புகழ்பெற்றார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தமிழில் எம்ஜிஆர், சிவாஜி ஆகியோருடன் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vpspf7yi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

தேசிய விருதுக்கு பரிந்துரை

சரோஜா தேவி 1955 ஆம் ஆண்டு மகாகவி காளிதாஸ் திரைப்படத்தின் மூலம் திரைப்பட துறையில் நுழைந்தார், அவரது முதல் நடிப்பு படம் தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. https://www.youtube.com/embed/ydTk7GOj0O4தமிழில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், தெலுங்கில் என்டி ராமாராவ், ஏ நாகேஸ்வரராவ், கன்னடத்தில் ராஜ்குமார் என அன்றைய முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்து ஏராளமான வெற்றிப் படங்களை தந்தார்.

பாலும் பழமும்

கடைசியாக தமிழில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா நடித்த ஆதவன் படத்தில் நடித்தார். அதன்பின் சினிமாவை விட்டு ஒதுங்கி ஓய்வில் இருந்து வந்தார். எம்.ஜி.ஆருடன் 26 திரைப்படங்கள் மற்றும் சிவாஜியுடன் 22 திரைப்படங்கள் நடித்துள்ளார். பாலும் பழமும், பாசம், ஆலயமணி, கல்யாணியின் கணவன், தாய் சொல்லை தட்டாதே, தர்மம் தலைகாக்கும் என்ற திரைப்படங்கள் மிக பிரபலமானது. இந்நிலையில் வயது மூப்பால் வரும் உடல்நலப் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த அவர் பெங்களூருவில் உள்ள மல்லேஸ்வரத்தில் தனது வீட்டிலேயே காலமானார்.சரோஜாதேவிக்கு ஸ்ரீ ஹர்ஷா என்ற கணவர் இருந்தார். 1986லேயே அவர் மறைந்துவிட்டார். புவனேஷ்வரி, இந்திரா என இரு மகள்களும், கவுதம் ராமச்சந்திரன் என்ற மகனும் உள்ளனர். பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகளையும், தமிழகம் உள்ளிட்ட பிறமாநில அரசு விருதுகளையும் வென்றுள்ளார்.சரோஜாதேவியின் மறைவு திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சோகத்திலும் ஒற்றுமை

சரோஜாதேவி நடித்த பல பாடல்களுக்கு ‛மெல்லிசை மன்னர்' எம்எஸ் விஸ்வநாதன் இசையமைத்து இருந்தார். அவரின் நினைவு தினம் இன்று(ஜூலை 14). இந்த நாளிலேயே சரோஜாதேவியும் மறைந்தது திரை ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமல்ல 2015ம் ஆண்டில் எம்எஸ்வி இறக்கும் போது அவரது வயது 87. இன்று மறைந்த சரோஜாதேவியின் வயது 87 என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு மரயாதையுடன் இறுதிச்சடங்கு

சரோஜாதேவி உடல் நாளை (ஜூலை 15) மதியம் இறுதிச்சடங்கு நடக்க உள்ளது. அவரது இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடக்கும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

கண்கள் தானம்

சரோஜா தேவியின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது. இவரது கண்கள் இரு குழந்தைகளுக்கு தானமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் இறந்த பின்னரும் இரு குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றி சென்றிருக்கிறார் சரோஜா தேவி.. .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

Oviya Vijay
ஜூலை 15, 2025 01:40

மல்லேஸ்வரத்தில் இருக்கும் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு வந்திருக்கிறேன்... அமைதியான அவரது முகம் துயில் கொண்டிருக்கிறது...


Ganesapathmanathan
ஜூலை 15, 2025 00:08

தெய்வத் தாய் படத்தில் குறும்புத்தனம் செய்து என்னை 12 வயதில் கவர்ந்தவர். கதாநாயகிக்குரிய கௌரவமான தோற்றத்துடன் மட்டுமே நடித்து வந்தார். அவர் இறந்த செய்தியால் மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவர் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், என்னை போன்ற ரசிகர்கள் அனைவருடனும் துக்கத்தை பகிர்ந்து கொள்கிறேன்.


K.V.K.SRIRAM
ஜூலை 14, 2025 20:06

A talented , actress who has essayed many good roles pairing with popular heros of Indian cinema. She had her own style. Her role in Tamarai Nejam movie was extraordinary. A l9ss to the fans and film industry. Om Shanthi.


Iyer
ஜூலை 14, 2025 18:31

இப்பதான் கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் பாடலை youtube ல் ரசித்துக்கொண்டுஇருந்தேன். MGR சரோஜாதேவி அவர்களின் மறக்கமுடியாத இந்தப்பாடல்


P. SRINIVASAN
ஜூலை 14, 2025 17:44

மிக சிறந்த நடிகை. அம்மாவின் ஆத்மா சாந்தியடைய கடவுளிடம் பிராத்திக்கிறேன்.


K.SANTHANAM
ஜூலை 14, 2025 17:02

ராஜாவின் பார்வை, தொட்டால் பூ மலரும், பேசுவது கிளியா, பொன்னெழில் பூத்தது, வேட்டையாடு விளையாடு, சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து, கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா, நான் பேச நினைப்பதெல்லாம் போன்ற பாடல்கள் இவரது நினைவுகளை நமக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கும்.


என்றும் இந்தியன்
ஜூலை 14, 2025 16:36

அந்த பக்கம் கோட்ட ஸ்ரீனிவாச ராவ் இந்த பக்கம் சரோஜா தேவி கடவுள் அவரிடத்திற்கு அவசரமாக கூட்டிக்கொண்டு சென்றுள்ளார்


என்றும் இந்தியன்
ஜூலை 14, 2025 16:29

நேற்று தான் ஒரு தெலுங்கு சினிமா நடிகர் கோட்ட ஸ்ரீனிவாசராவ் மரணம் என்று வந்தது இன்று சரோஜா தேவி. 80த் தாண்டியவர்கள் என்பதால் வேறெதுவும் சொல்ல முடியாது.


SaiBaba
ஜூலை 14, 2025 15:03

சாகக்கூடாத ஒரு சிலரில் இவரும் ஒருவர். என்ன செய்வது, ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். உங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.


Rajalakshmi
ஜூலை 14, 2025 14:52

So sorry ...எனக்கு பிடித்த நடிகைகளில் சரோஜாதேவியும் ஒருவராவார். புடவையில் அழகாக தோன்றுவார். குலவிளக்கு , பாகப்பிரிவினை போன்ற படங்களில் சற்றே வித்தியாசமான roles. மிகவும் நன்றாக நடித்திருக்கிறார். கல்யாண பரிசு also.


புதிய வீடியோ