உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அழித்தார் விபூதி; எடுத்தார் செல்பி திருமாவளவனின் அவசர கெட்டப்

அழித்தார் விபூதி; எடுத்தார் செல்பி திருமாவளவனின் அவசர கெட்டப்

திருப்பரங்குன்றம் : விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், நேற்று காலை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்தார். பின் பெரிய ரத வீதி பள்ளிவாசலில் திருப்பரங்குன்றம் மலை பிரச்னை குறித்து அதன் நிர்வாகிகளிடம் விசாரித்தார். தொடர்ந்து அவர் மலை மீது சிறிது துாரம் சென்று பழனி ஆண்டவர் கோவில் சன்னிதி முன் நின்று விஷயங்களை கேட்டறிந்தார். பின், திருப்பரங்குன்றம் கோவிலில் கட்சி நிர்வாகிகளுடன் திருமாவளவன் தரிசனம் செய்தார். கோவில் சார்பில் அவருக்கு மரியாதை செய்து நெற்றியில் விபூதியிடப்பட்டது. அவருடன் கட்சியினருக்கும் விபூதி பூசப்பட்டது. தரிசனம் முடித்து திரும்பும் நிலையில், கோவிலுக்குள் வந்த ஒரு தம்பதி, திருமாவளவனை பார்த்ததும் அவருடன் செல்பி எடுக்க விரும்பினர். அவர்களின் செல்போனை வாங்கிய திருமாவளவன், தன் நெற்றியில் உள்ள விபூதியை அழித்துவிட்டு, அத்தம்பதியுடன் சேர்ந்து, அவரே செல்பி எடுத்துக் கொடுத்தார். இதற்கிடையே, விபூதியை அழித்தது குறித்து திருமாவளவனிடம் கேட்ட போது, ''ஆறு மணி நேரமாக நெற்றியில் விபூதி வைத்திருந்தேன். அதை யாரும் கவனிக்கவில்லை. நாள் முழுதும் விபூதியை நெற்றியில் வைத்திருக்க முடியுமா,'' என எதிர் கேள்வி எழுப்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Bhaskaran
ஜூன் 22, 2025 19:07

இவர் சந்தர்ப்ப வாதி


KKeyan
ஜூன் 22, 2025 08:39

நல்லவேளை திருநீறை அழித்துவிட்டார். இல்லையென்றால் திருநீறுக்கும் அதை அணியும் உண்மையான ஆன்மீகவாதிகளுக்கும் அவமானமாயிருக்கும். தகுதியில்லாதர் அணியக்கூடாது என்று அவர் எடுத்த முடிவு வரவேற்கத் தக்கது.


Raj S
ஜூன் 20, 2025 22:46

தகுதியில்லா ஜந்துவிற்கு அதிக அளவில் முக்கியத்துவம்... பிளாஸ்டிக் சேருக்கே தகுதியில்லாதவர்...


SUNDHARAGIRI K
ஜூன் 20, 2025 18:59

சட்டமன்றத் தேர்தல் முடியும் வரையிலும் இந்த ஏமாற்று வேலை நடக்கும். நம்ம மக்களும் நல்லாவே ஏமாறுவாங்க.


C.SRIRAM
ஜூன் 20, 2025 18:30

கோயிலுக்குள்லேயே விடக்கூடாது .


Srinivasan N
ஜூன் 20, 2025 16:24

கடவுள் நம்பிக்கை இல்லாதவனுக்கு கோவிலில் என்ன வேலை, அப்படியே வந்தாலும் விபூதி பூசி விடும் ஆசாமிகளை தான் இதற்கு குற்றம் சொல்ல வேண்டும்


Srinivasan N
ஜூன் 20, 2025 16:22

கடவுள் நம்பிக்கை இல்லாதவனுக்கு விபூதி பூசி விடும் மடையர்களை தான் இதற்கு குற்றம் சொல்ல வேண்டும்


vbs manian
ஜூன் 20, 2025 16:08

ஹிந்து கலாச்சாரம் பண்பாட்டுக்கு எதிரான தன ஆழமான காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். பின் எதற்கு கோவிலுக்கு போக வேண்டும். எல்லாம் எல்லோரும் ஒரு நாள் சாம்பல்.


JANA VEL
ஜூன் 20, 2025 11:28

நாள் முழுக்க அறிவாலயம் வாசலில் நீலகலர் கோட்டு போட்டு வாட்ச்மன் வேலை பாக்க முடியுது இல்ல. அப்புறம் திருநீறு மட்டும் வைக்க முடியலையா? ஆமா திருப்பரங்குன்றம் கோவிலுக்கு அறிவாலயம் வாட்ச்மன் போனா அறிவாலயம் டூட்டி யாரு பார்ப்பா ?


Jayamkondan
ஜூன் 20, 2025 09:55

உன்ன யார் கோயிலுக்கு போக சொன்ன.. பேசாம அறிவாலயமோ அல்லது பெரியார் திடலுக்கோ போக வேண்டியது தானே.. இவரு பெரிய ........


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை