உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துணைவேந்தர்களுக்கு மிரட்டல்; அத்துமீறிய தி.மு.க., எம்.பி.,: அச்சத்தில் கல்வியாளர்கள்!

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்; அத்துமீறிய தி.மு.க., எம்.பி.,: அச்சத்தில் கல்வியாளர்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பல்கலை துணைவேந்தர்களை மிரட்டும் வகையில் முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க., எம்பி.,யுமான டி.ஆர்.பாலு கருத்து தெரிவித்திருப்பது, கல்வியாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆண்டுதோறும் கவர்னர் சார்பில் பல்கலை துணைவேந்தர்களுக்கான மாநாடு நடத்தப்படும். இந்தாண்டு ஏப்., 25, 26ல் ஊட்டியில் நடக்கும் என கவர்னர் தரப்பு அறிவித்துள்ளது. இம்மாநாட்டில் 'உயர் கல்வியை ஏ.ஐ., தொழில் நுட்பம் மூலம் எவ்வாறு மேம்படுத்தலாம்' என்ற தலைப்பில் விவாதிக்கப்படவுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cqt4j701&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

தி.மு.க., எம்.பி., மிரட்டல்

இந்த மாநாட்டில் பல்கலை துணைவேந்தர்களுக்கு பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், மாநாட்டில் பங்கேற்க விடாமல், துணைவேந்தர்களை மிரட்டும் வகையில், தி.மு.க., எம்பி., டி.ஆர்.பாலு பேசியுள்ளார். அவர், ''கவர்னர் மாநாட்டில் துணைவேந்தர்கள் பங்கேற்பார்களா என பொறுத்திருந்து பாருங்கள். சுயநினைவோடு இருப்பவர்கள், நியாயமாக சிந்திப்பவர்கள் இப்படி நிச்சயம் செய்ய மாட்டார்கள்'' என பேசியுள்ளார்.இவரது பேச்சு, துணைவேந்தர்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து துணைவேந்தர்கள் சிலர் கூறியதாவது:* இச்சூழ்நிலை முதல்முறையாக ஏற்பட்டுள்ளது. எங்களை நியமிக்கும் கவர்னரும், சம்பளம் வழங்கும் அரசின் முதல்வரும் முக்கியம். மாநில அரசு தாக்கல் செய்த மசோதாக்கள் அடிப்படையில் உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவில், வேந்தர் என்ற நிலைப்பாட்டில் இருந்து ஒரு துணைவேந்தரை நியமிக்க, நீக்கும் அதிகாரம் மட்டுமே முதல்வருக்கு இருக்கலாம்.* ஆனால் பட்டமளிப்பு விழாக்களில் மாணவர்களுக்கான பட்டச் சான்று வழங்கும் 'கிரேஸ் போர்டு'க்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் இன்னும் கவர்னர் தலைமையில் உள்ள 'செனட்'டுக்கு தான் உள்ளது. இது உட்பட யு.ஜி.சி., வழிகாட்டுதல்கள் கவர்னர் சார்ந்ததாக தான் உள்ளது.* எனவே பல்கலையை வழிநடத்த கவர்னர், முதல்வர் என இருவரின் உறவும் அவசியம். ஆனால் எம்.பி., பாலு பேசியது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை கவர்னர் மாநாட்டில் பங்கேற்பதா வேண்டாமா என எந்த முடிவும் எடுக்கவில்லை. * இதுபோன்ற சூழல் உயர்கல்வியை வலுவிழக்க செய்யும். துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்பது தொடர்பாக தமிழக அரசின் உத்தரவும், அதற்கு கவர்னரின் எதிர்வினைக்கு ஏற்ப முடிவு எடுக்கும் நிலையில் உள்ளோம் என்றனர்.* கவர்னர் கூட்டிய மாநாட்டில் பங்கேற்க எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தி.மு.க.,. எம்.பி., மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருப்பதற்கு துணைவேந்தர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 49 )

Ramesh Sargam
ஏப் 23, 2025 20:11

கடந்த சில நாட்களாக தமிழக திமுக எம்பிக்கள், எம் எல் ஏக்கள் பேச்சு மிகவும் அநாகரீகமாக இருக்கிறது. முதல்வர் ஏன் அவர்கள் மீது எந்தவித ஒழுங்கு நடவடிக்கையும் எடுப்பதில்லை? மக்கள் என்ன அவ்வளவு கேடுகெட்டவர்களா, அவர்களின் இழிவு பேச்சை தினம் தினம் கேட்பதற்கு?


அப்பாவி
ஏப் 23, 2025 19:27

கவலை வாணாம். முதல்வர் அந்தப் பக்கமா ஆடுனா, கெவுனர் இந்தப்பக்கம் ஆடுவாரு. உங்களுக்கு ரெண்டு பேராலும் நன்மை எதுவும் கிடையாது. தீமையும் கிடையாது.


மூர்க்கன்
ஏப் 23, 2025 16:05

பேய் என்று ஏதுமில்லை சாமி என்றும் எதுவுமில்லை அதிகாரப்பேய் சாதி பேய் மத பேய் இருக்கிறது அவற்றை அறிவாயுதம் தாங்கி அழிப்போம் . ஒன்றிய பேய் உருவாக்கிய அனைத்து சட்டங்களும் பிணம்தின்னும் சாத்திரங்கள்தான் வக்ப் திருத்த சட்டம் உட்பட.


Yes your honor
ஏப் 23, 2025 19:30

நீரே மூர்க்கன்ஸ், அப்புறம் உமக்கு பேயும் பிசாசும் தான் நல்லவர்களாகத் தென்படுவார்கள்.


RAMESH
ஏப் 23, 2025 15:37

மதுவை விற்பனை செய்து ஆட்சி நடத்தும் ஸ்டாலின் அரசுக்கு கல்வியை பற்றி என்ன தெரியும்....கழிசடை நபர்களை பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுத்த மக்களை நொந்து என்ன செய்வது....கேவலம் திராவிட மாடல் ஆட்சி


Neelakantan
ஏப் 23, 2025 13:59

பேய்கள் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.


Vijay D Ratnam
ஏப் 23, 2025 13:51

லாரி கிளீனர் டி.ஆர்.பாலுவுக்கு என்ன அறிவு இருந்ததோ, அம்பது வருஷமானாலும் அதே அறிவு அப்படியே இருக்குது எம்பி., டி.ஆர் பாலுவுக்கு. இப்போ பம்ப் செட் ஏ.வ.வேலுவுக்கு மந்திரியானதும் அறிவு கூடிடிச்சா. தற்குறி தற்குறிதான்.


Yes your honor
ஏப் 23, 2025 13:42

கல்வியாளர்களுக்குத் தெரியவில்லை, நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து திருப்பி மிரட்ட ஆரம்பியுங்கள். நாங்கள் மனது வைத்தால் தான் மந்திரி முந்திரி எல்லாம் என்று தெளிவாகச் சொல்லுங்கள். அப்புறம் பாருங்கள் உங்களை சிங்கப்பூர் டூர் அனுப்புவார்கள். அவ்வளவுதான் இவர்களின் உருட்டல் மிரட்டலெல்லாம், திருப்பி அடித்தால் தலைதெரிக்க ஓடும் இந்தக் கூட்டத்திற்கு பாடம் புகட்டுங்கள். நீங்கள் வீழ்வதும் வாழ்வதும் உங்கள் கையில். முதல்வர் ஆட்சியைக் கலைத்து கவர்னர் ஆட்சி வருகிறது என்பதிலிருந்தே கவர்னர்தான் பெரியவர் என்பதை புரிந்து கொள்ளுங்கள். கவர்னர் துணைவேந்தராக இன்னும் பல காலங்கள் இருப்பார், ஆனால் இந்த ஆட்சி இன்னும் சில மாதங்களுக்குப் பிறகு இருக்கும் என்பதற்கு என்ன உத்திரவாதம்?


MP.K
ஏப் 23, 2025 13:31

நீயா நானா என்ற யுத்தம் ஆரம்பம் ஆனால் முதல்வருக்கே அதிக அதிகாரம் பொறுப்பு உள்ளது


MP.K
ஏப் 23, 2025 13:28

வேண்டும் என்றே கூட்டத்தை கூட்டி விட்டார்.


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
ஏப் 23, 2025 13:13

தகுதியற்ற கேவலமான ஆட்களை தேர்ந்தெடுத்தால், கல்வியாளர்களும் சான்றோர்களும் அவதி படவேண்டும்.


Velan Iyengaar
ஏப் 23, 2025 14:35

தகுதியற்றவர்களை அரசியலமைப்பு பதவிகளில் நியமித்தால் என்ன ஆகும் ?? இப்போ தமிழகத்தில் நடப்பது தான் நடக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை