உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தனித்தன்மையை இழந்து விட்டார் விஜய்; அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கிண்டல்

தனித்தன்மையை இழந்து விட்டார் விஜய்; அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கிண்டல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'த.வெ.க., தலைவர் விஜய்க்கு தனித்தன்மை போய் விட்டது' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் கூறினர்.'தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., - த.வெ. க., இடையே தான் போட்டி' என, த.வெ.க., தலைவர் விஜய், ஈரோடில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அதற்கு, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் அளித்துள்ள பதில்:ஜெயகுமார்: ஒரு கட்சி என்றால், அதற்கு தனித்தன்மை இருக்க வேண்டும். ஆனால், த.வெ.க., தலைவர் விஜய், எம்.ஜி.ஆர்., என்ற முகமூடி அணிந்து வருகிறார். அவருக்கென தனித்தன்மை இல்லாததால், அவர் இந்நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார். என்னதான் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா முகமூடி அணிந்து வந்தாலும், இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு போட்டவர்கள், ஒரு நாளும் எந்த கட்சிக்கும் மாற்றி ஓட்டு போட மாட்டார்கள். விஜய், சில அரசியல் கட்சிகள் களத்தில் இல்லை என பொதுவாக பேசி உள்ளார்.எங்களை குறிப்பிட்டு பேசியிருந்தால், அதற்கு தக்க பதிலடி கொடுக்கலாம். முளைத்து மூன்று இலை விடாதவர்கள், அரசியல் ஆத்திசூடி அறியாதவர்கள் இப்படித்தான் பேசுவர்.முதல்வர் ஸ்டாலினை பொறுத்தவரை, அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, பனியனை கிழித்துக் கொண்டு சட்டசபையில் இருந்து வெளியே வந்தார். அவர் எதிரிக்கட்சியாக பேசினார். அந்த எதிரிக்கட்சி, இன்று ஆளுங்கட்சியாக உள்ளது. வரும் தேர்தலில் உதிரி கட்சியாக போய்விடும்.செல்லுார் ராஜு : எம்.ஜி.ஆர்., புகழ் பாடாதவர்கள், அரசியலில் செல்வாக்கு பெற முடியாது. தமிழக முதல்வரே, 'எம்.ஜி.ஆர்., எங்கள் பெரியப்பா' என்பார். புதிய கட்சியினரும், தங்கள் கட்சியை மக்களிடம் கொண்டு செல்ல, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகழ் பாடித்தான் ஆக வேண்டும். இருந்தபோதும், விஜயின் தந்திரப் பேச்சை நம்பி, அ.தி.மு.க.,வினர் ஒருநாளும் விஜய் பக்கம் போக மாட்டார்கள்.ஏனெனில், எம்.ஜி.ஆர்., துவக்கிய அ.தி.மு.க., இன்றும் உள்ளது; அதற்கு இரட்டை இலை சின்னம் உள்ளது. அ.தி.மு.க.,வை வழிநடத்தும் பழனிசாமி, பல்வேறு திட்டங்களை, தன் ஆட்சியில் செயல்படுத்தி உள்ளார். 'பூச்சி மருந்தில் ஊழல் செய்யலாம்' என கண்டறிந்தவர் கருணாநிதி. அடுத்து ஒலிக்கற்றையில் ஊழல் செய்தனர்.இம்முறை டாஸ்மாக் கடையில், பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூலிக்கும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளனர். விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்வதில், தி.மு.க., போல் யாராலும் முடியாது. எங்களுக்கு ஒரே எதிரி தி.மு.க., தான். அந்த தீய சக்தியை ஒழிக்கும் வரை, அ.தி.மு.க., என்றைக்கும் ஓயாது.எம்.ஜி.ஆரையும், அவருடைய ஆதரவாளர் களாக இருந்த அ.தி.மு.க ., தலைவர்களையும் தன் பக்கம் ஈர்த்து, கட்சி நடத்தலாம் என கணக்கு போடுகிறார் விஜய். அவர் நினைப்பதெல்லாம் பகல் கனவாகவே முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

Sivaprakasam Chinnayan
டிச 22, 2025 06:03

ஒன்றரை லட்சம்


பாரதி
டிச 22, 2025 01:46

சினிமா பொறுக்கிகள் பின்னாடி போகாதீங்க


vbs manian
டிச 21, 2025 16:58

அவர் ஒன்றுமில்லை என்றால் எல்லா கட்சிகளும் அவரை கண்டு உள்ளூர ஏன் பயம். சிலர் தனி நபர் விமர்சனம் செய்வது கொடுமை,


ஜெகதீசன்
டிச 21, 2025 13:11

தனித்தன்மை இருந்ததில்லையே, பிறகென்ன இழப்பதற்கு? அதே பழைய தலைவர்கள் படம், அதே பல்லவி தானே.


mindum vasantham
டிச 21, 2025 12:32

போலீஸ் பாதுகாப்பு யார் கொடுக்க வெண்டும்


திகழ்ஓவியன்
டிச 21, 2025 12:08

ஒரு அசம்பாவிதம் நடந்து சோறு தண்ணீர் கொடுக்காம பரிதவிக்க விட்டு 41 பேர் இறந்தவுடன் ஓடினார் ஒரு தலைவர் தன்னை காத்து கொள்ள, ஒரு மாதம் வெளியே வரவில்லை ,


mindum vasantham
டிச 21, 2025 10:54

ஒரு விஷயத்துக்காக ஒரு சிறு கல்லூரி நகருக்கு ஒதுக்குபுறமாக இருக்கும் கல்லூரியில் நடத்துவதற்காக சென்றேன் எல்லா அரசியவாதியையும் காட்டிலும் விஜய் க்கு தான் நல்ல பெயர் அங்கே


BHARATH
டிச 21, 2025 15:58

எந்த அடிப்படையில் சொல்றீங்க. அவர் நடத்துற பள்ளயில் ஒரு லட்சம் வாங்கறது உங்களுக்கு தெரியாதா?


DAVID DHAVARAJ
டிச 22, 2025 11:05

மாணவர்கள் இளைஞர்கள் விஜய் பக்கம் உள்ளனர். ஜெய்க்க அது போதும். ஆனால் முதல்வராக அது மட்டுமே போதாது. கரூர் சம்பவத்திற்கு முன் வரை பீஜேபி எதிரி.. இப்போது திமுக மட்டுமே எதிரி. எப்படி? பிஜேபியின் கொள்கைப்படி சிறுபான்மையினரான விஜய் முதலவராக முடியாது. சென்ற தேர்தல் கமலஹாசனையே தூக்கி எறிந்தது. இந்த "லியோ" கமலைவிட சிறந்த "ஆக்டராக" இருந்தாலும் அரசியல் எனும் கடலில் மூழ்கிப்போவாரா? இல்லை "சுநாமி ""அலைகளை உருபாக்குபவரா? என பொருத்திருந்து பார்ப்போம். வெண்திரை அல்ல "வோட் பாக்ஸ்" விடை கூறும்.தாமதமாக வந்தாலும் விரைவாக வந்தாலும் நடிகர் சிவாஜி கணேசன் நிலை வந்துவிடக் கூடாதுஎம்ஜிஆர் போல நடிக்கும் போதே அரசியலிற்கு வர...... சில வழிமுறை அறநெறிகளைக் கையால வேண்டும். தாய்க்குல வோட்டாவது கிடைக்கும்.


Kannan
டிச 21, 2025 09:52

அதிமுகவின் தற்போதய தலைவர்கள் தங்களின் தனித்தன்மையை இழந்து விட்டார்களா? என்பதுதான் அதிமுக தொண்டர்கள் மற்றும் தமிழக மக்களின் கேள்வியாக இருக்கிறது. மன்னாதி மன்னனும், சிங்கமும் மக்களில் ஒருவராக இருந்து கொண்டு, மக்களுக்காக அதிமுக என்ற ஒரு மாபெரும் மக்கள் இயக்கத்தை உருவாக்கி அதை திறம்பட வழிநடத்தியவர்கள். தமிழ் நாடும், பெரும்பாலான தமிழ் நாட்டு மக்களும் மன்னாதி மன்னனையும், சிங்கத்தையும் நம்பி ஆர்பரித்தார்கள். அதேபோல், இந்திய தேசிய கட்சிகளின் முன்னாள் இன்னாள் முக்கிய தலைவர்களும் கூட, சிங்கத்தின் வீட்டில் வந்து சிங்கத்தை பார்த்து கூட்டணி பேசினார்கள், மத்தியில் ஆட்சி அமைக்க ஆதரவை கேட்டு சென்றார்கள். அதிமுகவின் இந்த வரலாறும் தனித்தன்மையும், இந்தியாவின் பிற மாநில கட்சி தலைவர்களுக்கு கூட தெரியும். ஆனால், சிங்கத்தின் மறைவிற்கு பிறகு, அதிமுகவின் தற்போதய தலைவர்கள் டெல்லி சென்று, தேசிய கட்சிகளின் தலைவர்களை சந்தித்து வருகிறார்கள். ஏன், எதற்காக, யாருக்காக அவர்கள் டெல்லி சென்று பார்க்கிறார்கள்? இது, அவர்களது ஆளுமை திறன் மற்றும் தனித்தன்மையைப் பற்றிய, ஒரு பெரிய கேள்வியாக இருக்கிறது. வரவிருக்கும் சட்ட மன்ற தேர்தலில் அதிமுக வீழ்ந்தால், மீண்டும் எழுவது கடினமான ஒன்றாக மாறிவிடும். எனவே, அதிமுகவின் தற்போதய தலைவர்கள், கட்சியின் மற்ற நிர்வாகிகளை அரவணைத்து, அவர்களுடன் இணைந்து, மக்களின் நலனுக்காக பணியாற்ற வேண்டும். மக்களின் மனநிலையை அறிந்து, அதற்கேற்ப செயற்பட வேண்டும். இவ்வாறு செயல்பட்டால், அதிமுகவிற்கு மக்கள் மீண்டும் மகுடம் சூட்டுவார்கள். அதை விட்டு, சமீபத்தில் அரசியலுக்கு கால்வைத்துள்ள விஜய் அவர்களின் தனித்தன்மையைப் பற்றி பேசுவதில் எந்த பொருளும் இல்லை. தற்போதுள்ள நிலவரப்படி, அதிமுகவின் இடத்தை விஜய் அவர்களின் கட்சி பிடிப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.


Kadaparai Mani
டிச 21, 2025 10:56

Aiadmk is the largest political party in Tamilnadu even this minute. Media over hyping vijay will prove counter productive for dmk only


Barakat Ali
டிச 21, 2025 14:17

தற்போதுள்ள நிலவரப்படி, அதிமுகவின் இடத்தை விஜய் அவர்களின் கட்சி பிடிப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது ???? பெரும்பாலும் வீட்டில் இருந்தபடியே அரசியல் செய்பவரின் கட்சி எதிர்க்கட்சி ஆக வாய்ப்புள்ளதா ????


Ilango Chinnasamy
டிச 21, 2025 09:51

It seems there will be a post election alliance between ADMK and TVK and form a coalition government. Who will be the chief minister? Depends on who gets more seats. Probably, a chance to EPS.


Gokul Krishnan
டிச 21, 2025 09:27

லேடியா மோடியா என்று கேட்ட அன்றைய அ தி மு க தலைமை எங்கே தன் உள்கட்சி மோதலை சமாளிக்க முடியாமல் தில்லிக்கு ஜால்ரா அடிக்கும் இன்றைய அ தி மு க தலைமை எங்கே


Kadaparai Mani
டிச 21, 2025 11:01

Mgr and Jayalalitha also aligned with national parties. They are true national faith leaders.We require centre support to develop tamil Nadu. EPS has to face huge loans borrowed by dmk present government


mindum vasantham
டிச 21, 2025 12:39

அவ்ளோ பேசுகிற நீங்கள் காங்கிரஸ் இல்லாமல் தனியா நில்லுங்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை