உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தலைவராக விஜய் இன்னும் உயரவில்லை : சொல்கிறார் மார்க்சிஸ்ட் சண்முகம்

தலைவராக விஜய் இன்னும் உயரவில்லை : சொல்கிறார் மார்க்சிஸ்ட் சண்முகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' நடிகர் என்ற நிலையில் இருந்து அவர் தலைவர் என்ற நிலைக்கு இன்னமும் தவெக தலைவர் விஜய் உயரவில்லை,'' மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.மதுரையில் நடந்த தவெகவின் 2வது மாநில மாநாட்டில் விஜய் பேசும் போது, முதல்வர் ஸ்டாலினை அங்கிள் எனக் குறிப்பிட்டு விமர்சித்தார். ஸ்டாலின் அங்கிள்… வாட் அங்கிள்… ராங் அங்கிள்… எனவும் கூறினார். இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.திமுகவின் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:த.வெ.க. மாநாட்டில் அதன் தலைவர் விஜய், முதல்வர் ஸ்டாலினை 'அங்கிள்' என்று அழைத்தது எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத அரசியல் அற்ற வார்த்தை என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.கொள்கை அடிப்படையில் விமர்சிப்பதற்கு பதிலாக தரம் தாழ்ந்த முறையில் அவ்வாறு பேசியது கண்டிக்கத்தக்கது. நடிகர் என்ற நிலையில் இருந்து அவர் தலைவர் என்ற நிலைக்கு இன்னமும் உயரவில்லை என்பதையே அவருடைய உரை வெளிப்படுத்துகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் சண்முகம் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

தங்கராஜன்
ஆக 23, 2025 07:19

அப்பா என்றால் இனிக்கும், அங்கிள் என்றால் கசக்குமா?ஆங்கிள் என்றால் சித்தப்பா, பெரியப்பா என்றும் குறிக்கும்.


Chandran S
ஆக 23, 2025 05:37

மீண்டும் 6 வது வரியை படிக்கவும் தலைவர் விஜய் என்று தான் கூறியுள்ளார்


senthilanandsankaran
ஆக 22, 2025 22:05

வருமான வரி ஏமாத்துறவர் எல்லாம் இன்னைக்கு ஊழலை எதிர்க்க கட்சி ஆரம்பிக்கிறார்.


R.MURALIKRISHNAN
ஆக 22, 2025 21:54

இன்னும் நடிகராக கூட உயரவில்லை என்பதே உண்மை. இவருக்கு நடிப்பும் வராது அரசியலும் தெரியாது. மக்களை ஏமாற்ற மட்டும் நன்கு தெரிகிறது


Sun
ஆக 22, 2025 21:22

அப்பான்னு தன்னை கூப்பிடச் சொல்லி முதல்வர் ஸ்டாலின் ஊக்குவிப்பது மட்டும் நாகரிகமா? மிஸ்டர். முத்து. இருபத்தி ஐந்து கோடி கொடுக்கும் அளவிற்கு இன்னும் விஜய் வளரவில்லை என்பது என்னவோ உண்மைதான்.


தமிழ் மைந்தன்
ஆக 22, 2025 21:19

அது பெரிய சொம்பு கம்யூனிஸ்ட் சொந்த செம்பு


தமிழ் மைந்தன்
ஆக 22, 2025 21:18

இதை சொல்ல திமுக அடிமையான உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது


Ramesh Sargam
ஆக 22, 2025 21:08

அதுக்கெல்லாம் அவன் சரிப்பட்டு வரமாட்டான்பா ...


பேசும் தமிழன்
ஆக 22, 2025 20:44

வாங்குன காசுக்கு மேல கூவுறாங்க


Jack
ஆக 22, 2025 20:41

அச்சுத மேனன் ..நம்பூதிரி ..ராம மூர்த்தி அனந்த நம்பியார் உமாநாத் போன்ற தலைவர்கள் வளர்த்த கட்சியை திமுகவிடம் வெச்சுட்டீங்களே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை