உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரதமரை பற்றி பேசும் அளவுக்கு விஜய் வளரவில்லை: சரத்குமார் காட்டம்

பிரதமரை பற்றி பேசும் அளவுக்கு விஜய் வளரவில்லை: சரத்குமார் காட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தூத்துக்குடி: ''மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என்று சொல்லக்கூடிய அளவிற்கு நடிகர் விஜய் அரசியலில் வளரவில்லை'' என நிருபர்கள் சந்திப்பில் நடிகர் சரத்குமார் தெரிவித்தார்.திருநெல்​வேலி​யில் இன்று (ஆகஸ்ட் 22) நடை​பெறும் பாஜ பூத் கமிட்டி மண்டல மாநாட்​டில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா பங்​கேற்​றுப் பேசுகிறார்.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பாஜவை சேர்ந்தவரும், நடிகருமான சரத்குமார் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்தார். அங்கு நிருபர்கள் சந்திப்பில் சரத்குமார் கூறியதாவது: மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என்று சொல்லக்கூடிய அளவிற்கு நடிகர் விஜய் அரசியலில் வளரவில்லை. பாசிசம் என்றால் அவருக்கு என்ன என்று தெரியுமா என்று தெரியவில்லை. 24ம் தேதி விலாவாரியாக கள்ளக்குறிச்சியில் நான் பேசுகிறேன். நடிகர்கள் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன். இளைஞர்களும் அரசியலுக்கு வரவேண்டும். என்ன பேசுகிறோம், எதை பேசுகிறோம், யாரைப் பற்றி பேசுகிறோம், எதற்காக பேசுகிறோம் என்று பேச்சில் கவனத்துடன் பேச வேண்டும். நடிகர் விஜய் கொள்கை ரீதியாக பேச வேண்டும். இவ்வாறு சரத்குமார் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

Khalil
ஆக 23, 2025 20:12

if thats the case, then your kedi will be the first in the list to be kicked out


aaruthirumalai
ஆக 22, 2025 20:28

பழைய சாம்பார் புது சாம்பார்...


Subburamu Krishnasamy
ஆக 22, 2025 19:51

By talking against PM, Joseph Vijay proved himself as an antinationals, traitor. He is poisoning youths in Tamizhagam by misusing his popularity from the cinema Bad karma will always yield bad results not only to him but also to his siblings


Mahendran Puru
ஆக 22, 2025 19:22

ஆமாமா நீங்களும் கட்சி நடத்தி களைப்பில், பாஜகவிற்கு ஓசியில் விற்றிவிட்டீர்கள். விஜய்யை போல ஒரு நாளாவது கூட்டம் சேர்க்க முடிந்ததா?


vivek
ஆக 22, 2025 20:14

ஹாசனை விட மோசமில்லை


Rathna
ஆக 22, 2025 18:51

வருமான வரி கட்டாத பணம் எல்லாம் கரைந்த பிறகு கத்தரிக்காய் தெருவிற்கு வந்தாகத்தானே வேண்டும்.


Rajasekar Jayaraman
ஆக 22, 2025 18:51

பொதுவெளியில் ஜோசப் விஜய் என்று சொல்ல யோக்கியதை இல்லாதவர். நாட்டை காப்பாற்ற போகும் இலட்சணம் தெரியும்.


Tamilan
ஆக 22, 2025 17:09

பிரதமரின் காலடியில் விழ மறுத்ததால் அப்படி ஒரு தகுதி இல்லாமல் போய்விட்டதா ?


நிமலன்
ஆக 22, 2025 19:02

அதானே, தனது தந்தையுடன் மிசா காலத்திலிருந்து அரசியலில் இருக்கும் நமது முதல்வர் ஸ்டாலின் கூட பிரதமரை நேரிடையாக சந்திக்க தயங்குகிறார். பிரதமரை நேரிடையாக குறிப்பிட்டு விஜய் பேசுகிறார் என்றால், என்ன அர்த்தம். அண்ணாமலையை விட, இல்லை ஸ்டாலினை விட அரசியல் முதிர்ச்சி பெற்றுவிட்டார். அதானே tamilaa நீ சொல்ல வருவது...


Tamilan
ஆக 22, 2025 16:57

அண்ணாமலையை விட வளர்ந்தவர்தான்


Kjp
ஆக 22, 2025 17:46

அப்போ முதல்வர் ஸ்டாலின் பற்றிய விமர்சனத்தையும் சரி என்று ஒத்துக் கொள்கிறீர்களா? உதயநிதியை விட விஜய் வளர்ந்தவரா?


joe
ஆக 22, 2025 16:56

உன்னுடைய கட்சியின் யோக்கியதை ,அதன் அங்கீகாரம் இப்போது இல்லை .உன் யோக்கியதையை முதலில் பார் . நீயே அரசியலுக்கு லாயக்கில்லாதவன் .இப்படி இருக்க அடுத்தவர்களை ஏண்டா குழப்புறே ?பொறம்போக்கு அரசியல்வாதியான உனக்கெல்லாம் பதில் சொல்லணுமாடா? .ராஸ்கல் .


Jayamkondan
ஆக 22, 2025 16:08

ஆமா.. கட்சியை அடகு வைக்கும் அளவுக்கு விஜய் இன்னும் வளரல


Balamurugan
ஆக 22, 2025 17:36

தேர்தலுக்கு பிறகு விஜய் பேச்சில் நிதானம் வரும். உண்மை புரியும். கட்சியை அடகு வைக்கவும் சான்ஸ் இருக்கு. கட்சியை கலைக்கவும் சான்ஸ் இருக்கு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை