உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., அரசின் ஊழல் வித்தை இனி செல்லாது: தேர்தல் பிளான் தவிடுபொடியாகும் என்கிறார் விஜய்

தி.மு.க., அரசின் ஊழல் வித்தை இனி செல்லாது: தேர்தல் பிளான் தவிடுபொடியாகும் என்கிறார் விஜய்

சென்னை: 'எத்தனை கோடிகளை கொட்டினாலும், தி.மு.க., அரசின் ஊழல் வித்தைகள் இனி செல்லாது; 2026 சட்டசபை தேர்தலில், இந்த அரசை மக்கள் நிச்சயம் ஒதுக்கித் தள்ளுவர்' என, த.வெ.க., தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:தமிழகம் முழுதும் தி.மு.க., அரசு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் டாஸ்மாக் அலுவலகங்கள் மற்றும் டாஸ்மாக் தொடர்புடைய நிறுவனங்களில், கடந்த 6ம் தேதி அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கணக்கில் வராத பணம், 1,000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.மேலும், டாஸ்மாக் பணியாளர்களை பணி அமர்த்துதல், இடமாற்றம் செய்தல், வாகனங்கள் டெண்டர் ஒதுக்கீடு, 'பார்' உரிமம் வழங்கும் டெண்டர், கடைகளில் விற்பனையாகும் ஒவ்வொரு மதுபாட்டிலுக்கும், 10 முதல் 30 ரூபாய் வரை கூடுதல் தொகை வசூல் என, பெரிய பட்டியலே அந்த அறிக்கையில் வழங்கப்பட்டுள்ளது. இதை பார்க்கையில், முறைகேடு செய்வதில் அனுபவம் வாய்ந்த, கைதேர்ந்த மற்றும் நுட்பமான மூளைகளால் மட்டுமே, இவ்வளவு பெரிய முறைகேடு நடந்துள்ளதாக அர்த்தம் கொள்ள தோன்றுகிறது. டாஸ்மாக்கில் நடந்துள்ள கணக்கில் வராத பண மோசடி குறித்து, அமலாக்கத்துறை பயன்படுத்தி உள்ள வார்த்தைகளை பார்த்தால், தி.மு.க., அரசு குறித்து, ஓர் ஊழல் இலக்கியமே எழுதும் அளவிற்கு இருக்கிறது.மகளிர் உரிமைத்தொகை வழங்குவதை, பெருமையாக பறைசாற்றும் இதே அரசு தான், மக்களை மதுவுக்கு அடிமையாக்கும், மது விற்பனையையும் செய்கிறது. அதே மதுவை வைத்து முறைகேடு நடந்துள்ளது. எவ்வகையிலும் இதுபோன்ற முறைகேடுகளை ஏற்கவே இயலாது. ஊழலில் காட்டாற்றையே உருவாக்க வல்லவர்கள் என்பதே, தி.மு.க.,வின் ஆட்சி அதிகார வரலாறு. இன்னும் தீவிரமாக ஆராய்ந்தால், டாஸ்மாக் முறைகேட்டில், சிறு மீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும் என்றே தெரிகிறது.இந்த மோசடியில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை முறையான, நியாயமான விசாரணைக்கு உட்படுத்தி, உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும். ஆனால், விசாரணை நியாயமாக நடக்குமா என்பது, மேலே இருக்கும் மறைமுக முதலாளிகளுக்கும், இங்கிருக்கும் அவர்களின் உறவுக்காரர்களுக்கும் மட்டுமே வெளிச்சம்.இதுபோன்ற முறைகேடுகள் வழியே ஈட்டப்பட்ட பணம் தான், 200 தொகுதிகளை வெல்வோம் என்ற இறுமாப்பு சூளுரையின் பின்னணியாக இருக்கும் போல. எத்தனை கோடிகளை கொட்டினாலும், தி.மு.க., அரசின் ஊழல் வித்தைகள் இனி செல்லாது. இவர்களை, 2026 சட்டசபை தேர்தலில், மக்கள் நிச்சயம் ஒதுக்கித் தள்ளுவர்.இவ்வாறு அறிக்கையில் விஜய் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

தமிழக இந்தியன்
மார் 17, 2025 10:38

நீ என்னவோ யோக்கியன் போல ? அரசியலுக்கு வரும் முன்னேயே, நீ வாங்கிய காருக்கு சுங்க வரி காட்டாமல் ஏமாற்றி, நீதி மன்றத்தால் காரி துப்பப்பட்டவன் நீ, இதில் உனக்கு என்ன தகுதி இருக்கிறது ? மேலும் நீ கட்சி ஆரம்பித்துள்ளதே, உன் கருப்பு பணத்தை காப்பாற்றிக் கொள்ளத் தானே? இல்லா விட்டால், ₹200 கோடி வாங்கிக் கொண்டு, ₹5 ரூபாய்க்கு MBBS படித்த டாக்டர் வைத்தியம் பார்க்கணும்னு சொன்ன தற்குரி தானே நீ ? எல்லா திருட்டு நடிகன்ங்கள் எல்லோரும், தன் கருப்பு பணத்தில் காப்பாற்றிக் கொள்ள தான் இந்த உளறல்கள் எல்லாம். நிஜத்தில் மிக மிக மோசமானவர்கள். திமுக தெரிந்து, இவன்ங்களெல்லாம் அதை விட பல விதத்திலும் மிக மிக மோசமானவன்ங்கள்


netrikannan
மார் 17, 2025 08:23

இனியும் திமுக வுக்கு வோட்டு போட்டால் அவன் நிச்சயம் கிறுக்கன் தான்.


angbu ganesh
மார் 17, 2025 12:23

200% உண்மை அய்யா ஆனா பயமா இருக்கு நம்ம தமிழ் நாட்டு திருந்துமா இல்ல டாஸ்மாக் கே போதும்னு இருப்பங்களான்னு


Balasubramanian
மார் 17, 2025 05:24

அதுதான் நீங்கள் பிரசாந்த் கிஷோரை மடக்கி போட்டுக் கொண்டு விட்டீர்களே! திமுக ஊழலை இனி புட்டு புட்டு வைங்க! இதுக்கு போய் அடுத்தவனுக்கு கோடி கோடியாக குடுக்கணுமா? அதை பக்குவமாக எடுத்துச் சொல்லும் நம்மவர் அண்ணாமலைக்கு தான் எங்கள் ஓட்டு


முக்கிய வீடியோ