உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., கூட்டணிக்கு விஜய் வரணும்

அ.தி.மு.க., கூட்டணிக்கு விஜய் வரணும்

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அளித்த பேட்டி: தி.மு.க.,விற்கும், த.வெ.க.,விற்கும் இரண்டாவது இடத்திற்கு தான் போட்டி. அ.தி.மு.க.,வை எதிர்க்கின்ற சக்தி யாருக்கும் கிடையாது. விஜய் தனித்து நின்று ஜெயிப்போம் என்று கூறுவது, இந்த காலத்தில் மட்டுமல்ல; எந்த காலத்திலும் நடக்காத ஆசை. அவர் முயற்சி எல்லாம் வீணாகும். விஜய் உண்மையிலேயே தி.மு.க.,வை எதிர்ப்பவராக இருந்தால், அவர் அ.தி.மு.க., கூட்டணிக்கு வர வேண்டும். தனித்து நின்றால், இந்த தேர்தலோடு விஜய் கட்சியை தி.மு.க., அழித்து விடும். இவ்வாறு ராஜேந்திர பாலாஜி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை