சனிக்கிழமைகளில் மட்டும் 4 கூட்டத்தில் பேசியவர் விஜய்
சென்னையில் தாம்பரம் தொகுதியில், 4.2 லட்சம் ஓட்டுகளில், 30,000 ஓட்டுகளை வெளியே இருந்து சேர்த்துள்ளனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியால், இந்த ஓட்டுகள் எடுக்கப்படும். குறிப்பிட்ட அந்த தொகுதியில், கடந்த தேர்தலில், 15,000 ஓட்டுகளில் தோல்வியடைந்தோம். இதனால் தான், தி.மு.க., பயப்படுகிறது. ஒவ்வொரு தொகுதியிலும், 20,000 முதல் 30,000 கள்ள ஓட்டுகள் உள்ளன. அந்த காலத்தில் இருந்தே கள்ள ஓட்டில் வென்றவர்கள் தி.மு.க.,வினர். ஒரு கவுன்சிலராக கூட இல்லாத விஜய், வரும் தேர்தலில், தி.மு.க., - த.வெ.க., இடையே தான் போட்டி என்கிறார். அவர் மொத்தமாக, சனிக்கிழமைகளில் நான்கு கூட்டத்தில் பேசி இருப்பார்; அவ்வளவுதான். ஆனால், அ.தி.மு.க., 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சி. தி.மு.க., ஆட்சிக்கு வரக் கூடாது என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். - சின்னையா முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,