உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி.,களிடம் விஜய் ஆதரவு தயாரிப்பாளர் ரகசிய பேச்சு

காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி.,களிடம் விஜய் ஆதரவு தயாரிப்பாளர் ரகசிய பேச்சு

த.வெ.க., தலைமையில் கூட்டணி அமைப்பது குறித்து, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், வி.சி., மற்றும் ம.தி.மு.க.,விடம், திரைப்படத் தயாரிப்பாளர் தரப்பு பேச்சு நடத்திய தகவல் வெளியாகி உள்ளது.'த.வெ.க., கூட்டணிக்கு வருபவர்களுக்கு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரப்படும்' என, அக்கட்சி தலைவர் விஜய் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் தற்போது கூட்டணி ஆட்சி பற்றிய விவாதம் துவங்கி இருக்கிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tvtispjd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

பங்கு வேண்டும்

சமீபத்தில் மதுரை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'தமிழகத்தில் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைக்கப்படும்' என கூறிச் சென்றுள்ளார். இதையடுத்து, தி.மு.க., கூட்டணியிலும் அந்த குரல் ஒலிக்கத் துவங்கி உள்ளது. 'தி.மு.க.,விடம் ஆட்சி யில் பங்கு கேட்க வேண்டும்' என, தமிழக காங்கிரசிலும் சிலர், உரத்த குரலில் பேசி வருகின்றனர்.'கூட்டணி ஆட்சி தான் எங்கள் நிலைப்பாடு' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார். கூட்டணி ஆட்சி, தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்க, ஈரோட்டில் வரும் 22ல் பொதுக்குழுவை கூட்டுகிறார் ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், 'இம்முறை கூடுதல் இடங்களில் போட்டியிடுவோம்; அதை வலியுறுத்தி தி.மு.க.,விடம் தொகுதிகளை கேட்போம்' என, தி.மு.க., தலைமைக்கு திடீர் நெருக்கடி கொடுத்து வருகிறது. அதாவது, தமிழகத்தின் பிரதான கட்சிகளான தி.மு.க., - அ.தி.மு.க.,வை தவிர, மற்ற கட்சிகள் எல்லாமே கூட்டணி ஆட்சி கோஷத்தை கையில் எடுத்து, அதை வலியுறுத்தத் துவங்கி உள்ளன.இந்நிலையில, த.வெ.க.,வின் தேர்தல் பிரிவில் இருக்கும் மாநில நிர்வாகி ஒருவர், மும்பையில், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரை சந்தித்து பேசியுள்ளார். துணை முதல்வர் பதவியை காங்கிரசுக்கு தருவது குறித்தும், அமைச்சரவையில் பங்கு குறித்தும் பேச்சு நடத்தப்பட்டதாக தெரிகிறது. பீஹார் தேர்தல் முடிந்தபின், ராகுலிடம் பேசி முடிவு சொல்வதாக, சோடங்கர் தரப்பில் பதில் சொல்லப்பட்டுள்ளது.அதைத் தொடர்ந்து, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளிடமும், விஜய் ஆதரவு திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் பேச்சு நடத்தியுள்ளார்.

25 சதவீத ஓட்டு

இதுகுறித்து, த.வெ.க., வட்டாரங்கள் கூறியதாவது: சமீபத்தில், உளவுத் துறை உயர் அதிகாரி நேரடி பார்வையில் எடுக்கப்பட்டுள்ள சர்வேயில், சட்டசபை தேர்தலில் த.வெ.க., தனித்து போட்டியிட்டால், 25 சதவீத ஓட்டுகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.இத்தகவலை மையமாக வைத்து, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. விஜய் தலைமையில், அக்கட்சிகள் கூட்டணி சேருமானால் வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

R.MURALIKRISHNAN
ஜூன் 18, 2025 22:27

இவனுக்கெல்லாம் என்ன தகுதி உண்டு தலைவனாக?. பணத்தை வாங்கி கொண்டு பலவேஷம் போடும் இவனுகளை துரத்தியடிக்க வேண்டும்.


Anand
ஜூன் 18, 2025 17:45

இந்த தமாஷ் எல்லாம் அடுத்த வருஷம் முடியும் அழகேசனுக்கு அடுத்தது தலையில் துண்டு


Mahendran Puru
ஜூன் 18, 2025 15:30

நம்மாளு அ ஷா, ஈடி, சிபிஐ, ஐ டி என்று ஏவி விடுவாரு. கவனம்.


HoneyBee
ஜூன் 18, 2025 16:35

இன்னும் எத்தனை யுகங்கள் இந்த பில்டப் சொல்லி சொல்லி ஏமாற்றுவீர்கள். கொள்ளை அடித்தால் இடி வரத் தான் செய்யும். கமிஷன் கலெக்ஷன் கரப்ஷனு அடிச்சா பயம் தான்


angbu ganesh
ஜூன் 18, 2025 09:32

தமிழ் நாட்டின் தலை எழுத்து


Sundar R
ஜூன் 18, 2025 09:27

தமிழகத்தில், கம்யூனிஸ்டுகளில் 80% ஊழியர்கள் ஹிந்துக்கள். தேசவிரோத, பிரிவினைவாத, சமூகவிரோத கிறிஸ்தவ மிஷனரி அரசியல் கட்சியான, தமிழகத்திற்கு சம்பந்தமே இல்லாத தெலுங்கு கட்சியான திமுகவுடன் 2021 & 2024 தேர்தல்களில் கூட்டணி அமைத்தது, கம்யூனிஸ்டுகளின் அகத்தே உள்ள 80% ஹிந்துக்களுக்கு சிறிதளவும் பிடிக்கவில்லை. ஏராளமான ஊழியர்கள் அலுவலகத்திலுள்ள யூனியனில், பெயரளவுக்கு மெம்பராக இருந்து கொண்டு, எல்லா தேர்தல்களிலும், பாஜகவுக்குத் தான் வாக்களிக்கிறார்கள். கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஜோக்கடித்தால், 80% ஹிந்து ஊழியர்கள் சிரிப்பதில்லை.அவர்கள் கடும் முயற்சி செய்தாலும், ஹிந்து ஊழியர்களுக்கு சிரிப்பு வருவதில்லை. கம்யூனிஸ்டு தலைவர்கள் அழுதால், 80% ஹிந்து ஊழியர்கள் சிரிக்கிறார்கள். அரசாங்க அலுவலகங்கள் இன்றைய நாட்களில் இப்படித்தான் போய்க்கொண்டிருக்கின்றன. 2026 தேர்தலிலும், மற்றொரு தேசவிரோத, பிரிவினைவாத, சமூகவிரோத, கிறிஸ்தவ மிஷனரி அரசியல் கட்சியான விஜய்யின் தமிழக வெட்டிக் கழகத்துடன் கம்யூனிஸ்டுகள் கூட்டணி வைப்பது 80% ஹிந்து ஊழியர்களுக்கு ஊழியர் விரோதம் செய்வது போல் ஆகிவிடும். திருமாவளவன் கிறிப்டோ கிறிஸ்தவராதலால், திருமாவளவன் தவெகவுடன் கூட்டணி வைப்பதைப் பார்த்து, கம்யூனிஸ்டுகளும் தவெகவுடன் கூட்டணி சேர முற்படுவது, புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது போல் ஆகிவிடும். கம்யூனிஸ்டு தலைவர்கள் தங்கள் ஊழியர்களை அவர்களே ஏமாற்றியது போல் ஆகிவிடும்.


pv, முத்தூர்
ஜூன் 18, 2025 08:41

மக்கள் நலக்கூட்டனி 2.0. மதிமுக Miss பன்னிடாதிங்


VENKATASUBRAMANIAN
ஜூன் 18, 2025 08:02

இதை ஆர்எஸ்பாரதி ஊடகங்கள் பேசாது. எப்போதுமே அதிமுக பாஜக பற்றியே விவாதிப்பார்கள். அறிவாலய கொத்தடிமைகள்


Mani . V
ஜூன் 18, 2025 05:46

வேலியில் போகும் ஓணானை வேட்டிக்குள் விட்ட கதை ஆகப் போகிறது. அதிலும் கம்யூனிஸ்ட், திருமா இவர்கள்கள் எல்லாம் கோபாலபுரம் வாழ்நாள் கொத்தடிமைகள். உள்குத்து வேலை பார்த்து விடுவார்கள் - முதலாளி உத்தரவுப்படி.


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
ஜூன் 18, 2025 06:40

அப்படி நடந்தால் நல்லது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை